உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரளாவை போல் தமிழக அரசும் ஏற்கணும்

கேரளாவை போல் தமிழக அரசும் ஏற்கணும்

'பி.எம்., ஸ்ரீ' திட்டத்தை ஏற்பதாக, கேரள கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் இந்த திட்டமானது, அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை பெருக்கும். தனியார் பள்ளியில் கிடைக்கும் அனைத்து வசதிகளும், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கும் கிடைக்கும். இந்த உண்மையை உணர்ந்து, இத்திட்டத்தில் இணைகிறது, கேரள அரசு. பல ஆண்டுகளாக, கடைப்பிடித்த வறட்டு பிடிவாதத்தை கைவிட்டு, அடுத்த தலைமுறையின் பழிச்சொல்லுக்கு ஆளாகி விடுவோமோ என்ற அச்சத்தில், கேரள அரசு சம்மதித்து இருக்கிறது. அதே வறட்டு பிடிவாதத்துடன் இருந்து வரும், தி.மு.க., அரசும், தமிழகத்தின் அடுத்த தலைமுறையை வஞ்சிக்கும் விதமான மத்திய அரசின் எதிர்ப்பை கைவிட வேண்டும். கேரளாவை போலவே, 'பி.எம்., ஸ்ரீ' திட்டத்தை ஏற்க முன்வர வேண்டும். - நாராயணன் திருப்பதி தலைமை செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி