உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓ.பி.எஸ்.,சின்...கூடாரம் காலி! மனோஜ் பாண்டியனும் மாறினார் தி.மு.க.,வுக்கு!

ஓ.பி.எஸ்.,சின்...கூடாரம் காலி! மனோஜ் பாண்டியனும் மாறினார் தி.மு.க.,வுக்கு!

ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகிச் சென்று கொண்டிருப்பதால், தர்மயுத்தம் நடத்திய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூடாரம் காலியாகி உள்ளது. அவருடன் ஒட்டிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியனும் நேற்று தி.மு.க.,வில் இணைந்தார். கடந்த 2001ல் பெரியகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, முதல் முறையாக சட்ட ச பைக்குள் நுழைந்த பன்னீர் செல்வத்திற்கு அமைச்சர் பதவி கிடைத்தது. டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்ற போது, 2001 செப்டம்பரில் பன்னீர்செல்வம் முதல்வராகி, தமிழகத்தையும் தாண்டி, ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஒருங்கிணைப்பாளர்

ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற பன்னீர்செல்வத்திற்கு, 2014 செப்டம்பரில் மீண்டும் முதல்வர் பதவி கிடைத்தது. 2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைந்த போதும் முதல்வரானார். ஆனாலும், அவரால் மு தல்வர் பதவியையும், அ.தி.மு.க.,வையும் தன் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. சசிகலா ஆதரவுடன் முதல்வரான பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆதரவுடன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தார். அப்போது, துணை முதல்வர் மற்றும் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பதவி பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது. 2021 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.,வை பழனிசாமி தன் வசப்படுத்தினார். இதனால், கட்சியில்இருந்து வெளியேற்றப்பட்ட பன்னீர்செல்வம் பின்னால், அவருக்கு துணையாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, செம்மலை, மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் வரவில்லை. அதன்பின், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை துவக்கி, பழனிசாமி தலைமைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் பன்னீர்செல்வம். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன், ராஜ்யசபா எம்.பி., தர்மர், முன்னாள் எம்.எல்.ஏ., - ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர். கடந்த, 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் பன்னீர்செல்வம் போட்டியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜே.சி.டி.பிரபாகரன், அவரது அணியில் இருந்து விலகினார். அடுத்து அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், அவரிடமிருந்து விலகி தி.மு.க.,வுக்கு தாவினார். இந்நிலையில், பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்களில் நடத்த உதவி வந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ.,வும், மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனுமான மனோஜ் பாண்டியன் நேற்று தி.மு.க.,வில் இணைந்தார். இது, பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஸ்டாலின் உறுதி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், எப்படியாவது வென்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். அதற்காக எதற்கும் தயாராக உள்ள ஸ்டாலின், அ.தி.மு.க.,வினரை தி.மு.க.,வில் சேர்த்து வருகிறார். அந்த வரிசையில் கடந்த தேர்தலில், ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற வைத்திலிங்கத்தையும், தி.மு.க.,வில் சேர்க்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால், பன்னீர்செல்வம் தனித்து விடப்படுவதுடன், அவரது ஒட்டு மொத்த கூடாரமும் காலியாகி விடும். அவரது அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும். இது தொடர்பாக, பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது: அ.தி.மு.க., அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பா.ஜ., தலைமை உதவும் என்று பன்னீர்செல்வம் நம்பினார். அந்த நம்பிக்கை பொய்த்ததால், அவரை நம்பி இருந்தவர்களும் நம்பிக்கை இழந்து வெளியேற துவங்கி உள்ளனர். அ.தி.மு.க.,வுக்குள் செங்கோட்டையன் எழுப்பிய கலகக்குரல், பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்; அதன் வாயிலாக அ.தி.மு.க.,வுக்குள் மீண்டும் ஐக்கியமாகி விடலாம் என்றும் பன்னீர் நினைத்தார். ஆனால், செங்கோட்டையனை கட்சியிலிருந்தே நீக்கி பழனிசாமி காட்டிய அதிரடியால், பன்னீர்செல்வம் உடனிருந்தோர், 'இனி கட்சி ஒருங்கிணைய வாய்ப்பே இல்லை' என முடிவெடுத்து, அவரை விட்டு விலக துவங்கி உள்ளனர். இது, அவரது அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவே. இவ்வாறு அவர்கள் கூறினர். -நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Suresh Velan
நவ 05, 2025 15:30

அப்படி நடந்தால், பன்னீர்செல்வம் தனித்து விடப்படுவதுடன், அவரது ஒட்டு மொத்த கூடாரமும் காலியாகி விடும். அவரது அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும், என்று சொல்வது தப்பே , இவக அரசியல் எதிர்காலம் எப்போதும் நல்லா தான் இருக்கும் , உண்மையா மக்களுக்கு உழைக்கவா வந்திருக்காங்க , மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க வாரங்க , இதில் நாம் கவலை அடைய வேண்டியது ஒன்றுமே இல்லை


Vijay D Ratnam
நவ 05, 2025 14:59

மனோஜ் பாண்டியன் திமுகவுக்கு போகாமல் வேறு கட்சிக்கு போனால்தான் ஆச்சர்யம். படியளக்குற பாஸ் கிட்ட போய் தஞ்சம் அடையாமல் வேறு எங்கே போவாரு. மனோஜ் பாண்டியன் ஓபிஎஸ் டம் சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டுத்தான் போனாராம். அடுத்த மாதம் வைத்தியலிங்கம் போவார், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஓபிஎஸ் போவார். வேற வழியில்லை. அரசியலில் அனாதையாக இருந்தால் கூட ஏதாவது ஒரு கட்சியில் ஒட்டிக்கிட்டு இருக்கோணும், அல்லாங்காட்டி அடிச்சத ED மொத்தமா உருவிட்டு உட்டுபோடுவாய்ங்க. ஓபிஎஸ், அத்த உடுங்க வெளியில் கொடுத்து வைத்திருக்கும் கோடிகளில் தம்படி தேறாது. இங்குட்டு போயி புகார் சொல்ல முடியும். திருடனுக்கு தேள் கொட்டியது போல.


SUBRAMANIAN P
நவ 05, 2025 14:05

பின்னாலேயே ஒபிஎஸ் சும் திமுகவில் ஜக்கியமாவர்...


S.L.Narasimman
நவ 05, 2025 13:53

ஒபீஎசு, சசிகலா செங்கோட்டையன், தினகரன் ஆகிய நான்கு முக்கிய தலைவர்கள் தங்கள் கோடிக்கணக்கான தொண்டர்களுடன் தீயமுகாவில் சேர்ந்து விடியல் குடும்பத்திடமிருந்து கட்சியை கைப்பற்றலாம்.


அப்பாவி
நவ 05, 2025 13:25

பன்னீருக்கு த.வெ.க தான் ஒரே வழி. கூடவே சின்னம்மாவும், தினகரும் சேர்ந்தால் அமோகம்.


Haja Kuthubdeen
நவ 05, 2025 14:08

பீஸ் போன பல்புகளை சேர்க்க விஜய் புத்தியில்லாதவரா!!!


Shekar
நவ 05, 2025 12:28

இந்த ஆள் நல்லா கணக்கு போட்டு பார்த்ததில், ஒபிஎஸ்ஸ நம்பி போட்டியிட்டால் 5000 ஓட்டுகூட கிடைக்காது. இபிஎஸ் மூஞ்சில முழிக்க முடியாது. அல்ப 4 மாசம் பதவிய ராஜினாமா பண்ணிட்டு விடியல் கால்ல விழுந்தா பதவிய துறந்த தியாகி அப்படின்னு சீட் கிடைச்சிரும்,ஆக மறுபடி எம்எல்ஏ, இதுதான் திட்டம். MGR, அம்மா ஜெயலலிதா அப்படின்கிறது எல்லாம் சும்மா, எம்எல்ஏ பதவிதான் முக்கியம், அது இல்லைனா ஒரு பய மதிக்கமாட்டான்.


Muralidharan S
நவ 05, 2025 10:37

கமலஹாசன் தனிக்கட்சி தொடங்கியபோது அவருடன் இருந்தவர்கள் ஒவ்வொருவராக திராவிஷ கட்சிக்கு தாவினார்.. கடைசியில் கமலஹாசனும் திராவிஷ கழகத்தில் ஐக்கியமாகிவிட்டார்.. அதுபோலத்தான்.. பன்னீர்செல்வமும் வெகு விரைவில் திராவிஷத்தில் கலந்துவிடுவார்.. அனைத்து இந்திய திராவிஷ கழகமும் கூடிய விரைவில் நசிந்துபோகும்.. திமுகாவின் பணபலம் அமெரிக்காவின் டிரம்ப் ஐயே வாங்கக்கூடிய அளவிற்கு வலிமையானது.. மொத்தத்தில் தமிழகம் திராவிஷ குட்டையில் இருந்து மீழ்வதற்கு வழியே கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தெரியவில்லை..


Sun
நவ 05, 2025 09:30

இத்தனை வருடம் தன் கூடவே இருந்தவரையே ஓ.பி.எஸ்ஆல் தக்க வைக்க முடியவில்லை! இவர்தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கப் போகிறாராம்.


சந்திரசேகர்
நவ 05, 2025 08:12

அண்ணனுக்கு ஒரு எம் எல் ஏ சீட் பார்சல்


duruvasar
நவ 05, 2025 07:55

ஒபிஸ் சேர்ந்த போதா இவரும் சேர்ந்திருக்கலாம். பௌர்ணமி அன்று புகழேந்தியும் இணைந்துவிடுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை