புதுடில்லி: கடந்த பத்தாண்டுகளில், உலக நாடுகளில் அதிகப்படியான பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாக இந்தியா இருப்பது, ஐ.எம்.எப்., வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில், உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள் கோவிட் -19, ரஷ்யா-உக்ரைன் மோதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் பதட்டங்கள் போன்ற பல்வேறு சவால்களைக் கண்டன. இது உலகளவில் பொருளாதார வளர்ச்சியை பாதித்தது. சர்வதேச செலாவணி நிதியம் ( ஐ.எம்.எப்., ) முக்கிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x9og64tm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா, தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்தது. 2014ல், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) 17.6 டிரில்லியன் டாலர் ஆக இருந்தது. பத்து ஆண்டுகளில் 63.5% வளர்ச்சியடைந்து, தற்போது 28.8 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு தொழில்நுட்ப முன்னேற்றங்கள், திறமையான பணியாளர்கள், ஸ்திரமான அரசியல் சூழல் தான் காரணமாக கருதப்படுகிறது.2வது சீனா, 3வது ஜெர்மனி!
சீனா இன்னும் வேகமாக வளர்ந்தது. 2014ல் 10.5 டிரில்லியன் டாலர் 'ஜிடிபி'யுடன் துவங்கிய சீனா, தனது பொருளாதார உற்பத்தியை 76.1% அதிகரித்தது; தற்போது 18.5 டிரில்லியன் டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, 2014ல் 3.89 டிரில்லியன் டாலரில் இருந்து தற்போது 4.59 டிரில்லியன் டாலராக வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளது.சரிவை நோக்கி ஜப்பான்!
அதே நேரத்தில், நான்காவது இடத்திற்கு ஜப்பான் சரிவைக் கண்டது. ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2014ல் 4.9 டிரில்லியன் டாலர் ஆக இருந்தது. தற்போது 4.1 டிரில்லியன் டாலராக சரிவு கண்டது.இந்தியாவின் வெற்றி கதை?
2014ல் 2 டிரில்லியன் டாலர் 'ஜிடிபி'யுடன் இருந்த இந்தியா, தனது பொருளாதாரத்தை 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கும் நிலைக்கு முன்னேறி விட்டது. தற்போது 3.9 டிரில்லியன் டாலராக உள்ளது. இது, 93.1 சதவீதம் உயர்வாகும்.2014ல் பத்தாவது இடத்திலிருந்து இந்தியா தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த விரைவான வளர்ச்சிக்கு இளைஞர்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தான் முக்கிய காரணம்.பின்தங்கிய பிரிட்டன்!
* பிரிட்டன் கடந்த 10 ஆண்டுகளில் ஐந்தாவது இடத்திலிருந்து ஆறாவது பொருளாதாரம் என்ற இடத்திற்கு சரிந்தது. 2014ல் 3.7 டிரில்லியன் டாலராக இருந்த அதன் ஜி.டி.பி., தற்போது 3.5 டிரில்லியன் டாலராக சரிவடைந்துள்ளது. தற்போது பிரான்ஸ் 3.13 டிரில்லியன் டாலருடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டின் ஜி.டி.பி., கடந்த பத்தாண்டில் 9.6 சதவீதம் உயர்ந்துள்ளது.* பிரேசில் ஒரு இடத்தை இழந்து இப்போது உலகின் எட்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதன் ஜி.டி.பி., பத்தாண்டுகளில் 5.1 சதவீதம் சரிந்துள்ளது. தற்போது இதன் ஜி.டி.பி., 2.33 டிரில்லியன் டாலர்கள் ஆகும். இந்த சரிவு நாட்டின் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார பிரச்னைகளை பிரதிபலிக்கிறது.* மற்றொரு ஐரோப்பிய நாடான இத்தாலியின் பொருளாதாரம் 7.7% வளர்ச்சியடைந்து, தற்போது 2.3 டிரில்லியன் டாலருடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கனடாவும் 24.2% வளர்ச்சியடைந்தது ஒரு இடம் முன்னேறி 2.24 டிரில்லியன் டாலருடன் 10வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது. இதற்கு இயற்கை வளங்கள் மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவு ஆகியவை காரணமாக உள்ளன.கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க பொருளாதாரம் வலுவாகவே உள்ளது. எனினும் சீனா, இந்தியா ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன என்று ஐ.எம்.எப்., நிபுணர்கள் கருதுகின்றனர்.