உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; முதல்வர் ஸ்டாலின்

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Padmasridharan
நவ 05, 2025 11:38

குடிக்கும் நீர் காசு கொடுத்து வாங்கப்படுகின்றது. பொது இடங்களில் சிகரெட் குடித்தால் முன்பிருந்த அபாரத தொகை இப்பொழுதில்லை. மது குடிக்க எல்லோரும் பாருக்கு செல்ல முடிவதில்லை, பொது இடங்களில் குடிக்கும் ஆண்களிடம், ஆண் நண்பர்களுடன் இருக்கும் பெண்களிடம் காவலர்கள் மொபைலை பிடுங்கி அநாகரிகமாக பேசி பணத்தை அதிகார பிச்சையெடுக்கின்றனர். ஆண்களுக்கு நடக்கும் குற்றங்கள் வெளியில் வருவதில்லை. இப்படியாக குற்றங்களை அதிகரித்து அதிக குற்றவாளிகளை உருவாக்கி இருக்கின்றது யார் சாமி.


surya krishna
நவ 05, 2025 08:25

இரும்புக்கரம் துருப்பிடித்து மண்ணோடு மண்ணாக மக்கி போனது


Thiagaraja boopathi.s
நவ 05, 2025 02:30

சுடலை இது நம்ம ஆட்சி மறந்து விட்டீர்களா


indian
நவ 04, 2025 23:35

Appa corruption paiyan ganja peran red light giant


tamilvanan
நவ 04, 2025 21:45

இது தான் பெரியார் மண்.


Srinivasan Narasimhan
நவ 04, 2025 21:32

அப்பா நடப்பது உங்கள் ஆட்சி. உங்கள் நண்பரின் மணல் கொள்ளை செந்தில் விழுந்து விழுந்து பார்க்கும் கோவையில்


Chandru
நவ 04, 2025 21:05

மிகவும் அபத்தமான பேச்சு.இப்படியா ஒரு முதல்வருக்கு எழுதி கொடுப்பார்கள் ??


Natarajan Ramanathan
நவ 04, 2025 19:21

கோவை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்களை இழிவுபடுத்திய ஆபாச மந்திரி பொன்முடிக்கு மீண்டும் கட்சி பதவி வழங்கப்பட்டது.


Kasimani Baskaran
நவ 04, 2025 18:45

குற்றவாளியைக்கூட காலில் சுட்டுப்பிடிக்கும் பெருந்தன்மை மாடலின் சிறப்பு. வெளியே வந்தவுடன் கட்டிப்பிடி வைத்தியம் கூட செய்ய வருவார்கள்.


Sivaram
நவ 04, 2025 18:26

காவலர்கள் 5 மணி நேரம் சல்லடை போட்டு தேடியும் பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை ரொம்ப ரொம்ப இருட்டா இருந்ததாம் பெரிய அதிகாரி பேட்டி கொடுத்து இருக்கார் , முடிவாக அந்த பெண்ணே எழுந்து வந்து சொன்னாளாம் எப்படி இருக்கு


முக்கிய வீடியோ