உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவே மும்மொழி கொள்கை: கோவி.செழியன்

ஹிந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவே மும்மொழி கொள்கை: கோவி.செழியன்

சென்னை; “ஹிந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவே மும்மொழி கொள்கையை, மத்திய அரசு நிறைவேற்ற துடிக்கிறது,” என, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:தமிழகத்தில் காலம் காலமாகவே, இருமொழி கொள்கை அமலில் உள்ளது. மத்திய அரசு மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ளதற்கு காரணம், ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதற்குதான்.

உண்மை புரியும்

மூன்றாவது மொழியாக, எந்த மொழியையும் கற்கலாம் என கூறினாலும், எந்த மொழியையும் கற்க, அது ஆதரவளிக்காது. இந்திய மொழிகளில் மிகவும் பழமையான தமிழ் மொழியில், இலக்கண, இலக்கிய வளம் உள்ளது. ஆனால், அதை பரப்பவோ, வளர்க்கவோ, மத்திய அரசு ஒதுக்கிய நிதியை ஹிந்தி, சமஸ்கிருதத்தை பரப்ப ஒதுக்கப்பட்ட நிதியோடு ஒப்பிட்டால் உண்மை புரியும். அவற்றுக்கு பல நுாறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழுக்கு, சில கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்குகிறது.இதேபோல், வேறு மொழி கற்க வாய்ப்புகளையே ஏற்படுத்தாமல், மும்மொழி கொள்கை என்பது ஏமாற்றும் வேலை.மேலும், தமிழ் மொழியை வேறெங்கும் சென்று யாரும் திணிப்பதில்லை. அதேபோல், இங்கு விருப்பப்படுவோர் வேறு மொழிகளை கற்பதையும் தடுக்கவில்லை.

மாநில உரிமை

ஆனால், மத்திய அரசின் கொள்கைகளையும், தங்களுக்கு உகந்த மொழியையும் திணிக்கவே மும்மொழி கொள்கையை மறைமுகமாக பயன்படுத்துகிறது. அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்த பின்தான், தமிழகம் இருமொழி கொள்கையை கடைப்பிடிக்கிறது; தொடர்ந்து கடைப்பிடிக்கும். பல மொழி, கலாசாரம், பண்பாட்டை கடைப்பிடிக்கும் நாட்டில், மாநிலங்கள் தங்களுக்கான மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பது அவற்றின் உரிமை. இவ்வாறு கோவி.செழியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N Sasikumar Yadhav
பிப் 18, 2025 13:52

திருட்டு திராவிட மாடல்களின் வாரிசுகள் எந்த பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள் என சொல்லுங்க . தமிழகத்தில் திருட்டு திராவிட களவானிங்க நடத்தும் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடிவிட உத்தரவிட வேண்டும்


veeramani
பிப் 18, 2025 10:17

திரு செழியன் ...ஒரு செட்டிநாட்டு தமிழனின் மனக்குமுறல்.. அறுபதுகளில் இந்தி எதிர்ப்பு போராட்டம். எனது பள்ளியில் வேலை பார்த்த இந்தி ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். எனது படிப்பும் ஆறு மாதம் தடைபட்டது. இதனால் எனக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் எனது ஆறாம் வகுப்பில் பயம் இல்லாமல் சொல்லிகுடுக்க துவங்கினர். இதன் பாதிப்பு எனது எஸ் எஸ் எள் சி பரீட்சையில் வெறும் எழுபது மதிப்பெண்கள். நான் மத்திய அரசு தேர்வாணையம் உளம் தெரிவு செய்யப்பட்டேன்/ ஆனால் மாயா அரசு அலுவலகத்தில் மிக வும் சிரமப்பட்டேன். வெறித்தனமாக ஹிந்தி மொழி கற்றுக் கொண்டேன். ப்ளூஸ்ட்வ்வ் பரீட்சை எழுதினேன். இதனால் ஹிந்தி மொழியில் அரசிற்கு நோட் போடும் அளவிற்கு என்னை தரம் உயர்திக் கொண்டேன். அரசு பணி நீக்கம் லடாக், காஷ்மீர், ராஜஸ்தான். குஜராத், மும்பை, கொல்கத்தா, கார்கில், குஹாத்தி, சென்று வேலையும் பார்த்தேன். ஒரு சாதாரண விவசாயி தில்லியில் வேலைபார்த்தேன். வீட்டில் தாய் மொழி வேலை பார்க்க தேசிய இந்தி மொழி வெளிஉலகு தொடர்பு ஆங்கிலமொழி.