உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி: முதல்வர் ஸ்டாலின்

பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி காரணமாக, பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாகி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக, தி.மு.க., தொடர்ந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் வரும் நவ., 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை தி.மு.க., இன்று நடத்தியது. வரும் 11ம் தேதி, தேர்தல் கமிஷனை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டமும் நடத்துகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ru5rxzyv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், இன்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. இதில் மாவட்டச் செயலர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தை எஸ்.ஐ.ஆர்., ஆபத்து சூழ்ந்துள்ளது. பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாகி உள்ளது. நம் மக்களின் ஓட்டுரிமையைப் பாதுகாக்க, கட்சியினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், வரும் 11ம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும்,இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன்.சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வீடியோ வெளியீடு

எஸ்.ஐ.ஆர்-ஐ ஏன் எதிர்க்கிறோம்? என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நமது தொடர் எதிர்ப்புகளை மீறி, எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து மக்கள் நிறை பேருக்கு இன்னமும் முழுசாக தெரியலவில்லை. இந்நிலையில எஸ்ஐஆர்.,ஐ திமுக ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கவும் நமது ஓட்டுரிமையை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று வழிகாட்டவும் தான் இந்த வீடியோ. சரியான உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

கால அவகாசம்

ஆனால் போதுமான கால அவகாசம் தராமல் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இதை அவசர, அவசரமாக செய்துவது சரியாக இருக்காது என்பது தான் எங்களது நிலைப்பாடு. தேர்தல் கமிஷனுடன் கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியலை பாஜ எப்படியெல்லாம் மோசடி பண்ணி இருக்குன்னு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ஏற்கனவே விளக்கி இருக்கிறார். எஸ்ஐஆர் நடைமுறைக்கு வழங்கும் கணக்கீட்டு படிவத்தில் பிரச்னைகள், குழப்பங்கள் உள்ளன. கணக்கீட்டுப் படிவத்தில் வாக்காளர் உறவினர்கள் பெயர் கேட்கப்பட்டு உள்ளது.

இடியாப்பச் சிக்கல்

உறவினர் என்றால் யார்? அனைவரும் தானே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள். விண்ணப்பிக்கும் வாக்காளர் பெயரா? உறவினர் பெயரா? யார் பெயரை முதலில் எழுத வேண்டும். சிறிய தவறு இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் ஆபத்து இருக்கிறது. நன்றாக படித்தவர்களுக்கே இந்த கணக்கீட்டு படிவத்தை பார்த்தால் தலை சுற்றிவிடும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது இடியாப்பச் சிக்கல் போன்றது. வாக்காளர் கணக்கீட்டு படிவத்தில் புகைப்படத்தை ஒட்டுவதில் கூட குழப்பம் இருக்கிறது.

அதிமேதாவிகள்

எதிர்க்கட்சிகளின் சில அதிமேதாவிகள் புரிதலற்ற வகையில் உண்மைக்கு புறம்பாக பேசுகின்றனர். ஏழை மக்களின் ஓட்டுரிமையை நீக்கிவிடலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. கணினிமயமாக்கும் பணிகளை முடித்து டிசம்பர் 7ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். சமர்ப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டையும் வாக்காளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியல் திருத்தம் படிவத்தை பூர்த்தி செய்வதில் சந்தேகம் எழுந்தால் திமுக சார்பிலான உதவி எண் 8065420020 தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்களை பெறலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

N Sasikumar Yadhav
நவ 10, 2025 11:03

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மணிகண்டம் ஒன்றியத்தில் திமுகவினர் அராஜகம்,, பூத் கள ஆய்வில் அரசு அதிகாரிகள் மற்றும் BLo செய்ய வேண்டிய வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த பணியை திமுகவின் ஐடி வீங் சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு சாதகமாக முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர்,, திமுக அரசு, அரசு எந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது,, இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுகவை கண்டித்து அறப்போராட்டத்தை பாஜக முன்னெடுக்கும்,,


sankar
நவ 09, 2025 20:12

பொய்யாய் பலமுறை சொன்னால் அதை நம்புவார்கள் என்கிற நினைப்பு


Iyer
நவ 09, 2025 18:43

""வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி காரணமாக, பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாகி உள்ளது"" - ஸ்டாலின் - அது சரி அய்யா. நீர் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அந்த ஓட்டு உரிமை பாதிக்கப்பட்ட கோடி கணக்கான மக்களில் ஒருவர் கூட இதுவரை - தேர்தல் கமிஷனிடமோ அல்லது நீதிமன்றத்தையோ அணுகவில்லை. ?? இந்த கேள்விக்கு பதிலளித்துவிட்டு உங்கள் போராட்டத்தை துவக்குங்கள்.


anna
நவ 09, 2025 17:57

The regular comments from 200 opppees absent


raja
நவ 09, 2025 17:45

இப்படி உம்மை புலம்ப வச்சிட்டாங்களே சோனமுத்தா...


R.MURALIKRISHNAN
நவ 09, 2025 17:28

திருட்டு திராவிட கள்வர்கள் கூட்டம் அழியட்டும், தமிழ்நாடு இங்கு சிறக்கட்டும்


என்னத்த சொல்ல
நவ 09, 2025 17:21

ஒரு வாரமா வெயிட் and follow பண்றேன். இன்னும் அந்த form என்னால் வாங்க முடியல. படிக்காத, கூலி தொழிலாளர்கள், கண்டிப்பாக நீக்கப்படும் அபாயம் உண்டு.. இதை அரசியலுக்கு அப்பாற்பட்டு தான் சொல்றேன்.


K V Ramadoss
நவ 09, 2025 20:28

நீக்கப்படுவது எப்படி சாத்தியம் என்று விவரமாக சொல்லுங்கள். ...


என்னத்த சொல்ல
நவ 09, 2025 22:26

அந்த form fill பண்ணி தரலேனா, உங்கள் பெயர் ஆட்டோமேட்டிக்கா வோடோர்ஸ் லிஸ்ட் லிருந்து நீக்கப்படும். ஒரு சின்ன தவறுகூட, உங்கள் பதிவை தள்ளுபடி ஆகிவிடும்.


N Sasikumar Yadhav
நவ 10, 2025 11:02

என்னத்த சொல்ல நீங்க நிரந்தர கொத்தடிமைனு எல்லோருக்கும் தெரியும்


kjpkh
நவ 09, 2025 17:09

திமுகவில் கள்ள ஓட்டும் கூட்டணியில் உள்ளது.


Ramasamy
நவ 09, 2025 17:03

திருட்டு ஒட்டு பதிவு செய்ய வழி இல்லை தி மு க விற்கு


Suppan
நவ 09, 2025 17:03

திராவிட மாடல் ஸ்டாலினாரே நீங்கள் திராவிடனாக தமிழன் இல்லை என்று எங்களுக்கு த் தெரியும் இருந்தால் உங்களுக்கு தைரியம் இருந்தால் S.I.R நடத்தவிட மாட்டோம் . அரசு அதிகாரிகள் பங்கெடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லிப்பாருங்களேன். அன்றைய தினமே உங்கள் ஆட்சி காலி ஆகி விடும்.