உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முடிகிறது காற்றாலை சீசன்: மின் வாரியத்திற்கு நெருக்கடி!

முடிகிறது காற்றாலை சீசன்: மின் வாரியத்திற்கு நெருக்கடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காற்றாலை சீசன் இம்மாதத்துடன் முடிய உள்ள நிலையில், மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 9,150 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. இவற்றை தனியார் நிறுவனங்கள் சொந்த மின் பயன்பாட்டிற்கும், மின் வாரியத்திற்கு மின்சாரத்தை விற்கவும் அமைத்து உள்ளன.மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன். நடப்பு சீசனில், காற்றாலை மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக, 3,000 - 4,500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்தது. இருப்பினும், புதிய உச்சத்தை எட்டவில்லை.எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு செப்டம்பரிலும் வெயில் சுட்டெரித்தது. இதனால், மின் தேவை அதிகரித்தபடி இருந்தது.இன்னும் சில தினங்களில் காற்றாலை சீசன் முடிகிறது. எனவே, மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, காற்றாலைகளை அதிகம் அமைத்துள்ள, தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறியதாவது:கடந்த, 2023 காற்றாலை சீசனுடன் ஒப்பிடும் போது, இந்தாண்டு சீசனில் காற்றின் வேகம் பெருமளவு குறைந்து காணப்பட்டது.அதனால், காற்றாலை மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் குறைந்தது. அதேசமயம், இந்தாண்டில் வெயில் அதிகம் இருந்ததால், சூரியசக்தி மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைத்ததால், அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டது; இது, வரும் நாட்களில் அதிகரிக்கப்படும்; மழை சீசனும் துவங்க உள்ளதால், மின்தேவை பூர்த்தி செய்வதில் சிரமம் இருக்காது' என்றார்.

உச்சம் எவ்வளவு?

காற்றாலைகளில், 2023 செப்., 10ல், 5,838 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. இதுவே, இதுவரை காற்றாலைகளில் கிடைத்த அதிக அளவு மின்சாரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Krishnan Santhanaraj
அக் 03, 2024 23:30

Yes, rainy season started, we can expect some relief from hydro power, but we have to make up with thermal power and our share uninterrupted from NLC, NTPL, NTECL, Koodangulam, Kalpakkam. In Idduki dam Kerala, they have a large 2000 MW hydro, kindly we may think in that line to save our precious rainy water.


Gajageswari
செப் 28, 2024 08:20

இந்தநிலையில் தனியாரிடம் இருந்து தனியார் வாங்கும் மின்சாரத்திற்கு ₹5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது மின்வாரியம்


Gajageswari
செப் 28, 2024 08:19

இந்த நிலையில் தனியாரிடம் தனியார் வாங்கும் மின்சாரத்திற்கு ₹5 கட்டணம் கேட்கும் மின்வாரியம்


Kasimani Baskaran
செப் 28, 2024 06:49

மின் தடையை வேறு பெயர் சொல்லி அழைத்தால் பிரச்சினை தீர்ந்தது. பெரிய விஷயத்துக்கே டிஸ்மிஸ் செய்யாத மோடி சிறிய பிரச்சினைக்கா டிஸ்மிஸ் செய்யப்போகிறார் . கேள்வி கேட்க்கலாத தமிழன் என்ன செய்வான். அண்ணாமலை கூட ஊரில் இல்லை என்பதால் அக்கா வேறு கண்டமேனிக்கு போடுகிறார்.


kannan
செப் 28, 2024 05:21

கவலையே வேண்டிம். செந்தில் பாலாஜீ வந்துட்டார். அவர் பார்த்துக்கொள்வார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை