உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை தியேட்டர்களில் விடாமுயற்சி; தலைக்கு ரூ.500 டிக்கெட் கட்டாயம்: தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி

மதுரை தியேட்டர்களில் விடாமுயற்சி; தலைக்கு ரூ.500 டிக்கெட் கட்டாயம்: தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி

மதுரை : அஜித் நடித்த 'விடாமுயற்சி' படம் நாளை(பிப்.6) வெளியாகும் நிலையில், மதுரையில் சில தியேட்டர்களில் முதல் ஷோவுக்கு தலைக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்க வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுப்பதால் உரிமையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 'விடாமுயற்சி' நாளை ரீலீஸ் ஆகிறது. மதுரை உட்பட தென்மாவட்டங்களில் பெரும்பாலான தியேட்டர்கள் 'புக்' செய்யப்பட்டுள்ளது. முதல் ேஷாவுக்கு எப்போதுமே 'டிமாண்ட்' இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி தலைக்கு ரூ.500 நிர்ணயிக்க தியேட்டர் உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 'மால்கள்', அரசியல் செல்வாக்கு உடையவர்களின் தியேட்டர்களில் வழக்கம்போல் ரூ.190 வசூலித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களில் ரசிகர்கள் வருவது குறையும் என்கின்றனர் உரிமையாளர்கள்.அவர்கள் கூறியதாவது: கூடுதல் கட்டணம் வசூலித்தால் ரசிகர்களின் எதிர்ப்புக்கும், அரசின் நடவடிக்கைக்கும் நாங்கள் ஆளாக வேண்டியிருக்கும். இக்குழப்பத்தால் ஆன்லைன் முன்பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இன்று தியேட்டர் நடத்துவதும், ரசிகர்களை வரவழைப்பதும் எங்களின் 'விடாமுயற்சியாக' உள்ளது. ஒரேமாதிரியான கட்டணம் நிர்ணயித்தால்தான் அனைத்து தியேட்டர்களும் 'ஹவுஸ்புல்' ஆகும். இல்லாதபட்சத்தில் எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும். ஓ.டி.டி., தளம், ஆன்லைன் திருட்டுத்தனமான படம் பதிவேற்றம் போன்ற சவால்களை சமாளித்து போட்ட காசை, படம் வெளியான ஒருவாரத்தில்தான் லாபத்துடன் எடுக்க முடியும். இதை கருத்திற்கொண்டு தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 05, 2025 15:00

சினிமா பைத்தியங்கள் இருக்கும் வரை இது தொடரும். தொடர வேண்டும். தருதலைகளை இப்படித்தான் தண்டிக்க வேண்டும்.


m.arunachalam
பிப் 05, 2025 14:58

சீக்கிரம் சினிமா மூடுவிழா நடந்து நன்மை கிடைக்கும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 05, 2025 14:56

சினிமா மாபியா மண்ணாங்கட்டி லாம் ஒண்ணும் இல்லை. படிக்காத, பொறுப்பில்லாத, தண்டசோறு கூட்டம் ஒன்று தமிழ் நாட்டில் இருக்கிறது. அந்த தருதலைகளைக் குறிவைத்து இந்த கட்டணம். 500 குடுத்து படம் பார்க்க பல பொறுக்கிகள் இருப்பதால் இப்படி.


Suppan
பிப் 05, 2025 16:35

முதல்முறையாக வைகுண்டம் நல்ல கருத்தைப் பதிவு செய்துள்ளார். இந்தப்படத்தின் விநியோகஸ்தர் உதயண்ணாவின் ரெட் ஜெயண்ட் என்பது தெரிந்துமா இப்படிப்பட்ட பதிவு? ஆக இன்றைய 200 அம்போ . வரவேற்கிறோம்.


Raghavan
பிப் 05, 2025 12:33

இளைஞர் பட்டாளத்திருக்கு முதல் நாள் முதல் ஷோவில் தங்களின் அபிமான நடிகரின் திரைப்படத்தை பார்க்காமல் போனால் தலை வெடித்துவிடும்.


Nandakumar Naidu.
பிப் 05, 2025 12:33

தயாரிப்பாளர்களை 30 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்.


Devathasan T
பிப் 05, 2025 10:30

சினிமா படம் பார்க்கவில்லை என்றால் உலகம் அழிந்துவிடும் பெத்த தாய்க்கு சொருகுடுக்கியோ இல்லையோ சொத்தை வைத்தாவது படம்பார்த்துவிடு


baala
பிப் 05, 2025 10:24

இந்த பிழைப்புக்கு வேறு பிழைப்பு பிழைக்கலாம்.


S.V.Srinivasan
பிப் 05, 2025 07:48

இப்போல்லாம் தியேட்டர்ல போய் படம் பார்க்கிறதே குறைஞ்சிருக்கு. அப்படியும் ப்ளாக்ல விக்கறானுவ. வேறப்பொழப்பு இருந்தா போய் பாருங்கப்பா. காச கரியாக்காதீங்க


Kasimani Baskaran
பிப் 05, 2025 07:05

சினிமா மாபியாக்கள் ஆட்டம் ரொம்ப ஓவராக இருக்கிறது.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 05, 2025 15:01

மாபியா லாம் இல்லை. சினிமா மோகம். தினமலர் கூட "அக்கா பட விழாவில் அசத்தல் கீர்த்திசுரேஷ்" னு வீடியோ போடுது. இல்லைன்னா பேப்பர் விக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை