உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு

வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து குவித்ததாக தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனர் ஏகராஜ் 58, அவரது மனைவி பிளாரன்ஸ் 50, மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.சென்னை போரூர் அய்யப்பன்தாங்கல் ஏகராஜ். தேனி நகராட்சி கமிஷனராக 10 மாதங்களாக பணிபுரிந்தார். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். இவரது மனைவி பிளாரன்ஸ் சென்னை மதுரவயல் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.2019 - 2024 வரை அரசு பணியில் இருந்த ஏகராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜூலை 1, 3ல் தேனியில் அவரது அரசு குடியிருப்பு வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். அவர் ஜூன் 26 - ஜூலை 10 வரை மருத்துவ விடுப்பில் இருந்தார்.

வழக்குப்பதிவு

இந்நிலையில் கமிஷனர் ஏகராஜ், மனைவி பிளாரன்ஸ் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைத்துறையினர் வழக்குப் பதிந்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: விழுப்புரம் தென்பேர் கிராமத்தைச் சேர்ந்த ஏகராஜ் 1994ல் எரிசக்தித்துறையில் தட்டச்சராக பணியில் சேர்ந்தார். 23 ஆண்டுகளுக்கு பின் 2017ல் கமிஷனராக பதவி உயர்வு பெற்றார். அவர் பணிகாலங்களில் தலைமை செயலகத்தில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில் செக் ஷன் ஆபீசர், நாகபட்டினம், திருப்பத்துார், ராணிபேட்டை, ஊட்டி நகராட்சிகளில் கமிஷனராக பணியாற்றியுள்ளார். 2019 ஏப்., 1 முதல் 2024 ஜூன் 30 வரை தனக்குள்ள 'செக்' பவரை வைத்து, மக்களிடம் நேர்மையற்ற முறையில் முறைகேட்டில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.தற்போது சென்னை போரூர் அய்யப்பன்தாங்கலில் அவர் வசிக்கும் வீடு மனைவி பெயரில் ரூ.85 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். மகன், மகள் மருத்துவ படிப்பிற்காக ரூ.1.50 கோடியை மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தியுள்ளார். ரூ.50 லட்சத்திற்கு 4 கார்கள், ரூ.50 லட்சத்திற்கு தங்க நகைகள் கமிஷனரால் வாங்கப்பட்டுள்ளது. மகள் திருமணத்திற்கு ரூ.15 லட்சம் செலவழித்துள்ளார். அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஐந்தாண்டுகளில் ஏகராஜாவின் சொத்து மதிப்பு 2 கோடியே 73 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் 2019- 2024 வரை அரசுப்பணியில் இருந்த ஏகராஜூக்கு ரூ.ஒரு கோடியே 33 லட்சத்து 60 ஆயிரம் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. வருவாயை விட கூடுதலாக 205 சதவீதம் சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சுமத்ரா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

KRISHNAN R
ஜூலை 12, 2025 13:05

ம்ம்.. ம்ம்.. சட்டம் கடமை செய்து சான்றளிக்கும்


Ramesh Sargam
ஜூலை 12, 2025 12:20

அவர் உடையில் கருப்பு, சிகப்பு கறை உள்ளது. அவரை ஒன்றும் செய்யமுடியாது. மேலும் அவர் அந்த சமூகத்தை சேர்ந்தவர்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2025 11:54

ஒவ்வொரு கவுன்சிலரும் ஐந்து கோடி சம்பாதிக்கிறார்கள். கமிஷனர் இரண்டு கோடி. இது திராவிட மாடலுக்கே கேவலம். அதனால் தான் கமிஷனர் மீது வழக்கு.


V RAMASWAMY
ஜூலை 12, 2025 10:49

அரசு சம்பந்தப்பட்ட 99 சதவிகிதமுள்ளவர் எவரது சொத்துக்களையும் ஆராய்ந்தால் சட்ட விரோத ஆயிரக்கணக்கான, ஏன் லக்ஷக்கணக்கான கோடி ரூபாய்கள் கொள்ளைகள் கண்டுபிடிக்கப்படலாம்.


xyzabc
ஜூலை 12, 2025 10:43

2.73 கோடி ஒரு பெரிய தொகையே அல்ல.


M S RAGHUNATHAN
ஜூலை 12, 2025 10:33

இந்த புகைப் படத்தை பாருங்கள். கட்சி துண்டு ,திமுக போட்டு இருக்கிறார். இந்த ஒரு காரணத்திற்கே அவரை பணி நீக்கம் செய்யலாம். ஆனால் இப்போது இருக்கும் அரசு " அவர்கள்" போட்ட பிச்சை. மேலும் துணை முதலமைச்சர் ஒரு கிருத்துவர். ஆகவே ஒரு நடவடிக்கையும் இருக்காது. Take it for granted.


ஆரூர் ரங்
ஜூலை 12, 2025 10:15

மேலதிகாரிகள் மூலம் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு கட்டிங் சென்றது என்பதை மட்டும் வெளியிட மாட்டார்கள். என்னதான் இருந்தாலும் அவ‌ர்க‌ள் பிச்சையில் அமைந்துள்ள ஆட்சி..


தியாகு
ஜூலை 12, 2025 09:47

இந்தாளு பெயரை மற்றும் முகத்தை பார்த்தால் தெரியவில்லையா, திமுகவின் கொத்தடிமை கும்பல். விடியா அரசு சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்காக இவரை ஒன்றும் செய்யாது.


GMM
ஜூலை 12, 2025 09:32

தட்டச்சர் கமிஷனர் வரை. கல்வி தகுதி? லஞ்ச தடுப்பு அதிகாரிகள் சேகரித்த வருவாய் அதிக விவரம் நீதிமன்றத்தில் உதவும். வருமான வரி மோசடி போன்ற குற்றம் காண மத்திய விசாரணை அமைப்புகளுக்கும் தகவல் கொடுக்க வேண்டும். மேலும் கமிஷனர் திமுக துண்டு போட்டு இருக்கிறார்? உள்ளூர் கட்சி எதிர்ப்பு வருமா?


Padmasridharan
ஜூலை 12, 2025 09:02

அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி வருமானத்திற்கு மேலாக சேர்ப்பதற்குதானே அரசு காவல் துறையினில் பலரும் சேருகின்றனர். வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது / சம்பளத்துடன் சேர்த்து மக்களிடம் பணம்/பொருள் அதிகார பிச்சை எடுப்பது இவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இந்த மாதிரி ஆட்களால்தான் மது விற்கின்றது, எல்லோரும் குடிக்கிறார்கள் இதனால் குடிக்காமலிருக்கும் சிலருக்கும் கெட்ட பெயர். அது போல கணினி மையம் வந்த பிறகு லஞ்ச மாமூல் அதிகார பிச்சை கேட்கறவங்க நிறைய பேர் இருப்பதனால் வாங்காதவங்க சிலருக்கும் கெட்ட பெயர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை