உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலில் நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை: பன்னீர்செல்வம்

அரசியலில் நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை: பன்னீர்செல்வம்

சென்னை:முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின், ''அரசியலில் நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று காலை சென்னை அடையாறில் நடைபயிற்சி சென்றபோது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' உயர்நிலை கூட்டத்தில் பங்கேற்றார். அதில், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவெடுக்கப்பட்டது. அதை அறிவித்த சில மணி நேரங்களில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு பன்னீர்செல்வம் சென்றார். அவரை வாசலில் நின்று, அழைத்து சென்றார் துணை முதல்வர் உதயநிதி. முதல்வருடன் 40 நிமிடங்கள் சந்திப்பு நீடித்தது. பின், பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பியுள்ளார். உடல்நலம் குறித்து விசாரிக்க, வீடு தேடிச் சென்று சந்தித்தேன். கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தேன். சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை. ஜெயலலிதாவின் நேரடி பார்வையில், 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்; எனக்கு அனைத்தும் தெரியும். அரசியலில் எனக்கென்று தனி மரியாதை உள்ளது. பா.ஜ., தலைவர்கள் சமீபத்தில் என்னை சந்திக்கவில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை எனக் கூறி, தமிழகத்திற்கான கல்வி நிதியை தர மறுக்கும் மத்திய அரசின் செயல் சரியல்ல. அதனால், மத்திய அரசை விமர்சிக்கிறேன். ச ட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்திருக்கும் பழனிசாமிக்கு வாழ்த்துகள். த.வெ.க.,வுட னான கூட்டணிக்காக விஜய் என்னிடம் பேசவி ல்லை; நானும் அவரிடம் பேசவில்லை. எதிர்காலத்தில் தி.மு.க., வுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா அல்லது ஜெயலலிதா கூறியதுபோல தி.மு.க.,வை தீய சக்தியாகத்தான் பார்க்கிறீர்களா என்று கேட்கிறீர்கள். அரசியலில் நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை என்பது தான் கடந்த கால வரலாறு. தேர்தல் நெருக்கத்தில் எதுவும் நடக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anand
ஆக 01, 2025 18:00

ஆனால் நீ எட்டப்பன்...


SUBRAMANIAN P
ஆக 01, 2025 17:00

அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை ஆனால் துட்டு மட்டும் கொட்டுகொட்டுனு கொட்டுது.. அத்தனையும் ஊரை அடிச்சி உலையில் போட்டு ஊழல் செய்து சம்பாதிக்கும் பணம். ஓட்டையும் உங்களுக்கு போட்டுட்டு மீண்டும் உங்களிடமே கையேந்துறான் சாமானியன். ஆனா உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா.


S.L.Narasimman
ஆக 01, 2025 12:33

ஓபீசு ஒரு பெரிய சுய நலவாதி என்பதை நிருபிக்கிறார். இந்த மனிசனால் தென்னகத்தில் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிமுகாவிற்கு குறையாது. ராமநாதபுரம் அரச வாரிசான இளவல் அதிமுகாவில் இணைந்துள்ளது மறவர்கள் வாக்கு சிதறாமல் இருக்கவே.


Ramesh Sargam
ஆக 01, 2025 11:47

அரசியலில் நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை. ஆம் பன்னீர்செல்வம் போன்று பச்சோந்திகள்தான் அரசியலில் உள்ளனர்.


V RAMASWAMY
ஆக 01, 2025 11:16

ஐயோ பாவம் இவர் தன்னைத்தானே போற்றிக்கொண்டால் தான் உண்டு.


V RAMASWAMY
ஆக 01, 2025 10:57

Mr OPS, in the eyes of Tamil Voters, you have lost your confidence, credibility and their votes. You are going to be an orphan in the TN political arena.


SIVA
ஆக 01, 2025 09:18

அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா, ஆனால் அவர்கள் எம்ஜிஆர் அவர்களை ஓரம் கட்ட நினைத்தவர்கள், கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னதின் அர்த்தம் இனிமேல் தான் புரியும், இவருடைய அடையாளமே எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்கள் தான்... அதிமுக என்றால் ANTIDMK என்று தான் அர்த்தம் ....


Raja
ஆக 01, 2025 08:42

பன்னீர் மாதிரி ஒரு மோசமான அரசியல்வாதியை இதுவரை தமிழகம் கண்டதேயில்லை. நீண்ட காலமாகவே திமுகவுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த இந்த திமுக கைக்கூலி பன்னீர் மற்றும் இவரது மகன் திமுக புள்ளிகளுடன் வியாபார தொடர்பு வைத்திருப்பதும் ஏற்கனவே தெரிந்ததுதான். திமுகவின் ஆசியோடு அதிமுக அலுவலகத்தை குண்டர்களோடு சென்று சூறையாடிய அராஜக அரசியல்வாதி.இந்த பச்சோந்தியை நீண்ட நாட்களாக நம்பிகொண்டிருந்தது பா.ஜா.காவின் அறியாமை.


VENKATASUBRAMANIAN
ஆக 01, 2025 08:01

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மாக்கள் உங்களை மன்னிக்காது. தனிக்கட்சி ஆர்ப்பரித்து இருந்தால் கூட பரவாயில்லை.


Manaimaran
ஆக 01, 2025 06:26

M G.R. அ.திமு.கா ஆரம்பித்ததின் நோக்கம் தெரியுமா. நீயெல்லாம் புழுவை விட மோசமான ஜென்மம்...