உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை

முதல்வர் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை

முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது. அவரது கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் யாரும் இல்லை.தமிழகத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைகிறது என, மத்திய அமைச்சர் அமித் ஷாவே தெரிவித்து விட்டார். அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ., தலையிடாது எனவும் தெரிவித்துவிட்டார். அதனால், இனி கவலை இல்லை.மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக, தி.மு.க., அரசு சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு, அ.தி.மு.க., வெளிப்படையாக ஆதரவு அளித்தது. அதனால், முஸ்லிம்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., உள்ளது என்பதை முஸ்லிம்களும் புரிந்து கொண்டுள்ளனர். இந்த விஷயத்தை, திசை திருப்ப ஆளுங்கட்சியினர் முயல்கின்றனர். - சீனிவாசன்,முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை