உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி வைத்து சாதித்த கட்சிகள் இல்லை: சீமான்

கூட்டணி வைத்து சாதித்த கட்சிகள் இல்லை: சீமான்

கடலுார்: கடலுாரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:உண்மைக்கும், நேர்மைக்கும் பஞ்சம் உள்ள கட்சிகளோடு கூட்டணி வைக்காமல், மக்களிடம் தஞ்சம் அடைந்துள்ளோம். உயர்ந்த கொள்கை, உயர்ந்த நோக்கத்தோடு மக்களை முழுமையாக நம்பி களத்தில் நிற்கிறோம். எங்களை நம்பி ஓட்டளித்த மக்களால் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதே வேகத்தோடு, 2026 தேர்தலில் புதிய வியூகத்தோடு களம் இறங்குகிறோம். சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள், இனிமேல் இந்த சீமான் ஆட்டத்தை பார்ப்பீர்கள்.என் கட்சியில் இருந்து விலகுபவர்களை, வேறு கட்சிக்கு செல்வதற்கு பதிலாக விஜய் கட்சிக்கு செல்லுமாறு கூறினேன். காரணம், அவர்களை அங்கு ஒருநாளும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.என் தலைமையை ஏற்று, ஆரிய - திராவிட கலப்பில்லாத கட்சிகள் வந்தால் கூட்டணி பற்றி யோசிப்பேன். கூட்டணி வைத்து சாதித்த கட்சிகள் இல்லை. நிரந்தர வெற்றிக்கான இலக்குடன் செல்கிறோம். அதனால், தற்காலிக தோல்வி குறித்து கவலையில்லை. அ.தி.மு.க.,வை பா.ஜ., வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்த்தது எனக் கூறுவது சரியல்ல. கூட்டணி முடிவானதும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், அமித் ஷாவும் விருந்து சாப்பிட்ட பின், அது பற்றி பேசக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sundar R
ஏப் 22, 2025 09:46

சீமான் தன் கட்சியை ஆரம்பித்து மேன்மேலும் வளர்க்க அரும்பாடுபட்டார். பிறகு திராவிடர்களை தமிழகத்தை விட்டு அடித்து விரட்டுவதற்காக ஈர வெங்காய ராமசாமியை பஸ்மமாக்கும் போது ஜொலித்தார். ஒரு தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டும் போது, அருகில் இருக்கும் ஒருவன் அந்த உணவைத் தட்டிவிட்டால், அது எவ்வளவு பெரிய பாவச்செயலோ, அதேபோல், மத்திய அரசு தாய் போல் இருந்து தன் குழந்தைகளான எல்லா மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்களை அள்ளிக் கொடுக்கிறது. அதை தட்டி விடும் பாவச்செயலை, கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சியை நடத்தும் திமுக, தவெக, விசிக, மதிமுக மற்றும் மநீம கட்சிகளுக்கு அடுத்தபடியாக சீமான் செய்கிறார். போக்கற்ற பையன்கள் கூட நாட்டிற்கு தீங்கு செய்ய மாட்டார்கள். சீமான் செய்கிறார். சீமானின் செயல்கள் எல்லாம் தோல்வியடைந்த காரணத்தால், இப்போது, சீமான் காமடி பீஸ் ஆகிவிட்டார். சிலர் சீமான், சுடாலினைப் போல் டம்மி பீஸ் ஆகிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.


karthik
ஏப் 22, 2025 09:34

நீ இன்னும் 25 வருஷம் ஓட்ட பிரித்துக்கொண்டே இரு.. உன்னால் எந்த பிரயோஜனமும் இல்லை.. ஏற்கனவே ஒரு 10 15 வருஷம் உன்னால் வீண்.. இனியும் ஒரு 25 வருஷம் இப்படியே போக போகுது.


R SRINIVASAN
ஏப் 22, 2025 08:42

சீமான் போகாத ஊருக்கு வழி தேடுகிறார்.எதாவது கூட்டணியில் சேர்ந்து சட்டசபைக்குள் நுழைந்து கேள்வி கணைகளை தொடுத்து அரசை திணறடிக்க வேண்டும். அம்மாதிரி செய்தவர்களில் முதன்மையாக நிற்பவர்கள் பி.ஜி .கருதிருமன் ,காங்கிரஸ்1967ஆ ர்.பொன்னப்ப நாடார், காங்கிரஸ் 1971, T.N.Ananthanayagi காங்கிரஸ். இவர்கள் தனியாகவே நின்று கேள்விக்கணைகளை சட்ட சபையில் தொடுத்தார்கள். காரணம் இவர்கள் காமராஜருடன் இருந்தார்கள். இன்று சீமானால் அது முடியாது.


முக்கிய வீடியோ