தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில், புதுமைப்பெண் திட்டத்தினை செயல்படுத்திய பின், உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 85 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகளவில் பெண்களை உயர் கல்வியில் சேர்ப்பதற்கு, பெற்றோர்கள் முன் வந்துள்ளனர். மாநில திட்டக்குழுவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில், முதல்வரால் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் கல்வி புரட்சி நடக்கிறது.தமிழகத்தின் பொருளாதாரத்தினை 1 ட்ரில்லியன் டாலர் என உயர்த்துவதுதான் நோக்கம் என அறிவித்து, புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் கொண்டு வரப்படுகின்றன. அதன் வாயிலாக வேலைவாய்ப்புக்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவசங்கர், தமிழக அமைச்சர்