| ADDED : பிப் 23, 2024 01:41 AM
சென்னை: தமிழக ஊரகப் பகுதிகளில், பொருளாதாரத்தின் பின்தங்கிய மாணவர்களுக்கு, உலகத்தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கிட, உண்டு உறைவிடப் பள்ளி அமைப்பது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறைக்கும், சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே, நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மகேஷ், பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன், சிவ் நாடார் அறக்கட்டளை சார்பில் சுந்தர், பானர்ஜி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.இதன்படி, சென்னையில் சிவ் நாடார் அறக்கட்டளை சார்பில், உண்டு உறைவிடப்பள்ளி நிறுவப்பட உள்ளது. இதில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, உலகத்தரம் வாய்ந்த கல்வியை, மாணவ - மாணவியர் பெறுவர். இதில், மாணவியருக்கு, 50 சதவீதம் வாய்ப்பு கிடைக்கும்.