உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எனக்கும், சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை; அண்ணாமலை பேச்சு

எனக்கும், சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை; அண்ணாமலை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''எனக்கும், சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.செங்கல்பட்டில், எஸ்.ஆர்.எம்., பல்கலை நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: தேசிய கட்சிகள் தேசிய பிரச்னைகளை முதன்மையாகவும், மாநில நலனை முக்கியமாகவும் வைக்க வேண்டும். மாநில கட்சிகள் மாநில பிரச்னைகளை முதன்மையாகவும், தேசிய நலனை முக்கியமாகவும் நினைக்க வேண்டும். அப்போதுதான் இந்திய அரசியலானது, ஆளுமை மிகுந்த மனிதர்களால், நல்லபடியாக மாறும். இன்று இக்கட்டான சூழலில் அரசியல் உள்ளது. பிராந்திய கட்சிகளும் தேசிய கட்சிகளும் எக்ஸ்ட்ரீம்க்கு செல்லும்போது, மக்கள் இடையே மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.ஒரு அரசியல் தலைவர், ஒரு அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வதை விட, ஒரு போர்களத்தில் இருக்கும் தலைவனாக தான் சீமானை பார்த்து கொண்டு இருக்கிறேன். காரணம் அவரது கொள்கை, அந்த கொள்கையில் அவர் எடுத்து இருக்கும் உறுதிபூண்ட கொள்கை, அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாக போர் களத்தில் போராடும் மாண்பு. இது தமிழக அரசியலில் சீமானை தனி பெரும் தலைவராக உயர்த்தி இருக்கிறது. வித்தியாசமில்லைஎனக்கும், சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். அவ்வளவு தான் வித்தியாசம். இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இல்லை. நான் சீமானுக்காக தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து கொண்டு இருப்பதற்கான காரணம். இன்றைக்கு அரசியல் களத்தில், நேர்மை குறைந்து இருக்கிறது. அது இருக்க கூடிய சீமானும், நானும் ஒரே மேடையில் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. சீமானுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

அப்பாவி
ஏப் 08, 2025 09:59

லண்டன் போய் படிச்சிட்டு வந்தாலும் அதே தரம்.


NACHI
ஏப் 08, 2025 02:26

திமுக 2026 ...000000


Raj S
ஏப் 08, 2025 01:34

இங்க கோபாலபுர திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் கொத்தடிமைகள் கதறல் அருமையா இருக்கு...


Velan Iyengaar
ஏப் 07, 2025 21:34

அடப்பாவி நேர்மை குறித்து சொல்லிவிட்டு இவனுங்க ரெண்டு பேர் பெயரையும் சேர்த்து படிப்பது எல்லாம் காலக்கொடுமை கலி முத்திவிட்டது


Velan Iyengaar
ஏப் 07, 2025 21:33

கம்பி கட்டும் கதைகளை சொல்வதில் வித்தியாசம் இல்லவே இல்லை இல்லை இல்லை


Velan Iyengaar
ஏப் 07, 2025 21:32

அப்போ விஜயலட்சுமி ???? ஹா ஹா ஹா


மதிவதனன்
ஏப் 07, 2025 21:06

எஸ் இருவரும் ஸ்ட்ரீட் fighters , ரோட்டில் வாய் கிழியும் அனால் தேர்தலில் என்றால் டப்பா டான்ஸ் ஆடும் , இருவரமே ஓசி சோறு ஒன்று நண்பர்கள் இன்னொன்று திரள் நிதி திருடன் இதை விட வேறு என்ன வேணும் , இரண்டுமே புளுகுணிகள் , இந்த கருமங்கள் காரி துப்பும் கதைக்கு பிளாஷ் back வேற , கொடுமையை என்ன சொல்ல


மீனவ நண்பன்
ஏப் 08, 2025 01:59

200 க்கு ரொம்பவே கூவுற


Narayanan Muthu
ஏப் 07, 2025 20:33

ஆமாம் ரெண்டுமே வெத்து வேட்டுதான் ஒத்துக்கிட்டா சரி


Mario
ஏப் 07, 2025 20:17

பாவம் முதலில் நீங்க இரண்டும் ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க


தாமரை மலர்கிறது
ஏப் 07, 2025 18:58

பற்றுக்கும் வெறிக்கும் ஒரு சின்னக்கோடு தான் வித்தியாசம். அண்ணாமலை வைத்திருப்பது தமிழ் பற்று. சீமான் தமிழ் பிரிவினைவாதி. ஸ்டாலின் எதிர்ப்பு ஓட்டுக்களை லாவகமாக பிரித்து, பிஜேபி அதிமுகவை தோற்கடித்து, ஸ்டாலினை ஜெயிக்க வைக்கும் அபிமானி.


புதிய வீடியோ