உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஊழல் இல்லை: சபாநாயகர் அப்பாவு

தமிழகத்தில் ஊழல் இல்லை: சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி:டாஸ்மாக்கில் பத்து ரூபாய் அதிகம் விற்றது தனிநபர் தவறு. அதை அரசோடு இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் எந்த ஊழலும் இல்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் புதிய நூலகத்தை இன்று தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: கடந்த ஆட்சியில் கூலிப்படை கலாசாரம் இருந்தது. ஆனால் திமுக அரசு வந்த பிறகு கூலிப்படைகள் அடக்கப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் கல்விமுறை புத்தக அறிவை மட்டுமே வழங்கியது. கவர்னர் அதில் படித்தவர் தான். அறிவை வளர்ப்பதற்காகவே புதிய கல்வி கொள்கை என்று கூறுவதாக இருந்தால், பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது தானே . அம்பேத்கர் கொண்டு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியே கவர்னரும், அனைவரும் நடக்க வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fs7q5u80&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 டாஸ்மாக்கில் பத்து ரூபாய் அதிகம் விற்றது தனிநபர் தவறு. அதை அரசோடு இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் எந்த ஊழலும் இல்லை.திமுக கூட்டணியில் பதட்டப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏற்கனவே உள்ள திமுக கூட்டணி 7 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலிலும் வெற்றி பெறப்போகிறோம்.இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது என்ற உலக வங்கியின் ஆய்வு அறிக்கை உண்மைக்குபுற்பமான செய்தி.இதை ஊடகங்கள் மூலமாக மத்திய அரசு பரப்ப வைக்கிறது. இந்தப் புள்ளிவிவரம் முழுக்க முழுக்க பொய்யானது, எந்த ஆதாரமும் இல்லாதது.தமிழகத்தில் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்காக இல்லை. அது மகளிர் உரிமைத்தொகை. இன்னும் பல பேருக்கு வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கும் வழங்கப்படும்.இவ்வாறு அப்பாவு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 10:15

ஊழலுக்கு நெருப்பானவர் தந்தை அவருடைய மகனின் ஆட்சியில் நாட்டில் ஊழலை பூத கண்ணாடி கொண்டு பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. இப்போது நடைபெறுவது கறைபடியா கரங்களுக்கு சொந்தமான ஆட்சி .. அனைத்து அமைசகர்களும் தங்கள் சம்பளத்திற்குலேயே வாழ்க்கையை நடத்துகின்றனர் .. ஊழல் லஞ்சம் இல்லாமல் தூய்மையான ஆட்சி நாட்டில் நடக்கிறது ...மக்கள் நலனே அரசின் லட்சியம் ..உலக தரம் வாய்ந்த மருத்துவம் , போக்குவரத்து , வீடுகள் , சுத்தம் சுகாதாரம் , கல்வி மக்களுக்கு கிடைக்கிறது இது நடப்பது சிங்கப்பூரில்


Nagarajan S
ஜூன் 10, 2025 20:40

ஆஹா என்னே ஒரு அறிவார்ந்த பதில். இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது என்ற உலக வங்கியின் ஆய்வு அறிக்கை உண்மைக்குபுறம்பான செய்தியாம். ஆனால் இதை ஊடகங்கள் மூலமாக மத்திய அரசு பரப்ப வைக்கிறதாம். டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் இல்லவே இல்லையாம். ஆனால் அங்கு பணி செய்யும் ஊழியர், பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்றால் அரசு பொறுப்பாகாதாம். டாஸ்மாக்கில் பத்து ரூபாய் அதிகம் விற்றது தனிநபர் தவறாம். தமிழகத்தில் எந்த ஊழலும் இல்லையாம் ,.திமுக கூட்டணியில் பதட்டப்படுவதற்கு ஒன்றுமில்லையாம். இவரின் பேச்சிலேயே பதற்றம் தெரிகிறதே ?


Haja Kuthubdeen
ஜூன் 10, 2025 18:47

வர்ற தடவை ஜெயிக்கவா போறீங்க..


பாரத புதல்வன்
ஜூன் 10, 2025 18:38

தீ மு க வுக்கு ஓட்டு போட்டது சமுதாயம் செய்த தவறு.... உமது பேச்சை கேட்பது அதைவிட தவறு.


panneer selvam
ஜூன் 10, 2025 17:49

Grea discovery of the Century . Award a prize even better than Nobel prize to Appavu ji .


panneer selvam
ஜூன் 10, 2025 17:49

Grea discovery of the Century . Award a prize even better than Nobel prize to Appavu ji .


JANA VEL
ஜூன் 10, 2025 17:31

உனக்கு ஒட்டு போட்டதே தனி நபர்கள் தவறுதான்


புதிய வீடியோ