உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகர் சதுர்த்தியன்று பத்திரப்பதிவு கிடையாது

விநாயகர் சதுர்த்தியன்று பத்திரப்பதிவு கிடையாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அதிக பத்திரங்கள் பதிவாகும், 100 சார் பதிவாளர் அலுவலகங்கள், சனிக்கிழமையும் செயல்பட்டு வந்தன. இதனால், பொதுமக்கள் தங்கள் வேலை பாதிக்காமல், பத்திரப்பதிவு மேற்கொள்ள இது வாய்ப்பாக அமைந்தது. இந்நிலையில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவில், 'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமைகளில் செயல்படும், 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு, செப்., 7 மட்டும் விடுப்பு அளிக்கப்படுகிறது. இதனால், அந்த நாளில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படாது' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
செப் 06, 2024 11:25

பாராட்டுக்கள. இறை மறுப்பாளர்கள் வீட்டில் வியாகர் சதுர்த்தி கொண்டாடக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் இருக்கவேண்டும், அதே போன்று பண்டிகைக்காலங்களில் மற்றும் திருமண சடங்குகளில் மக்கள் ஒன்றுகூடக்கூடாது அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்றும் வழக்கு தொடராமல் இருக்கவேண்டும் , அதற்க்கு அந்த இறைவன்தான் அருள்புரியவேண்டும், வந்தே மாதரம்


Kasimani Baskaran
செப் 06, 2024 05:09

வசூல் பணியாளர்களுக்கு சோகம்.