உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்த வளர்ச்சியும் இல்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

எந்த வளர்ச்சியும் இல்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

ராஞ்சி: திமுக அரசு, தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநிலத்தையும், வளர்ச்சியையும் கெடுத்துவிட்டது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டினார்.மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு வந்தார். ராஞ்சி விமான நிலையத்தில் எல்.முருகன் அளித்த பேட்டி:தமிழகத்தில் 7வது முறையாக (2026ல்) ஆட்சி அமைக்க வேண்டும் என்ற திமுகவின் இலக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அப்போது அவர், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு,ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சியையும் கெடுத்துவிட்டார்கள். கடந்த 3 ஆண்டுகளாக மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும், ஸ்டாலினுடைய குடும்பம் தான் செல்வச் செழிப்பாக மாறியது.திமுக தலைமையிலான கூட்டணி, விரைவில் உடைந்து போகும். தி.மு.க.வின் தோல்வியடைந்த ஆட்சியில் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது.இவ்வாறு எல். முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

MADHAVAN
டிச 23, 2024 20:31

உனக்கு படிப்பறிவு குடுத்ததுதான் வளர்ச்சி, அதை புரிஞ்சுக்காம இருக்குற


Sivakumar
டிச 23, 2024 19:22

இது ஒரு வேஸ்ட் piece


அப்பாவி
டிச 23, 2024 18:47

.. ம.பி M.Pயா இருந்து அங்கே என்ன செஞ்சீங்க? வாங்குற சம்பளத்துக்கு நல்லா வசை பாடறீங்க.


Sidharth
டிச 23, 2024 18:19

என்ன பொலிச்சின்னு கண்ணாடியை பாத்து துப்பிட்டாரு


V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 18:10

காலைல காடேஸ்வரா, இப்போ இவரு. யாரு செய்தியில் வர்றது ன்னு பாஜக வுக்குள்ளேயே செம போட்டி. MLA, MP ஆக லாயக்கில்லை என்று 2 முறை மக்கள் தோற்கடித்தார்கள். இருந்தும் இணை அமைச்சர் ஆயிட்டார். போன 5 வருட டெர்ம் மிலும், இவரோட டம்மி போஸ்ட்டால் தமிழ் நாட்டுக்கு காலணா பிரயோஜனம் இல்ல. இந்த டெர்ம் மிலும் இதுவரை ஒரு பயனும் இல்ல. மேலவையில் இன்னும் ஒரு நாள் கூட எழுந்து எதுவும் பேசல. தமிழ் நாட்டுப் பக்கமே வரல. இவருக்கே வளர்ச்சி நடந்திருக்கே.. தமிழ் நாட்டுக்கு நடக்கல ன்னு எந்த அடிப்படையில் சொல்றார்.


madhumohan
டிச 23, 2024 17:20

சமே சைடு goal


ச.ம்பா
டிச 23, 2024 17:14

தமிழகுத்துக்கு நீர் செய்தது என்னனு சொல்லு பாப்போம்