உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., ஆட்சியில் ஊழல், குற்றவாளிகளுக்கு இடமில்லை: விஜய் உறுதி

த.வெ.க., ஆட்சியில் ஊழல், குற்றவாளிகளுக்கு இடமில்லை: விஜய் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: '' நமது ஆட்சி , சுத்தமான தூய்மையான அரசாக இருக்கும். ஆட்சியில் ஊழல், குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள்'', என கோவையில் நடந்த கருத்தரங்கில் அக்கட்சி தலைவர் விஜய் பேசினார்.த.வெ.க., கட்சியில் அமைத்துள்ள ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு, கோவையில் நேற்று துவங்கியது. கடைசி நாளான இன்றும் கருத்தரங்கு நடந்தது.

தயங்க மாட்டேன்

இந்த கருத்தரங்கில் விஜய் பேசியதாவது: நேற்று பேசும் போது இந்த கருத்தரங்கம் வந்து வெறும் ஓட்டுக்காக நடத்தும் கருத்தரங்கம் இல்லை என்று சொன்னேன். த.வெ.க., வெறும் அரசியல் ஆதாயத்திற்காக துவங்கப்பட்ட ஒரு கட்சி கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனால், மக்களுக்கு நல்லது நடக்கிறது என்றால், எந்த அளவுக்கும் சென்று அதை செய்ய தயங்க மாட்டோம்.

வெளிப்படையான நிர்வாகம்

நமது ஆட்சி , சுத்தமான தூய்மையான அரசாக இருக்கும்.ஆட்சியில் ஊழல், குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். அதனால் எந்தவித தயக்கமும் இல்லாமல், தைரியமாக நம்முடைய ஓட்டுச்சாவடி முகவர்கள் மக்களை அணுக வேண்டும்.மக்களிடம் செல்மக்களிடம் இருந்து கற்றுக்கொள்மக்களுடன் வாழ்மக்களுடன் சேர்ந்து திட்டமிடுமக்களை நேசிமக்களுக்காக சேவை செய் என அண்ணாதுரை கூறியுள்ளார். இதை நீங்கள் புரிந்து கொண்டு நீங்கள் செயல்பட்டால், சிறுவாணி தண்ணீர் போன்று சுத்தமான ஆட்சியாக அமையும். இன்னும் வலிமையாக சொல்ல வேண்டும என்றால், தவெக ஆட்சி ஒரு தெளிவான ஒரு உண்மையான ஒரு வெளிப்படையான நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக அமையும்.அதனால், இதை நாம் சார்பாக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

முக்கியம்

ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போடும் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டியது நமது கடமை. குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு செல்வதை போல், குடும்பம் குடும்பமாக பண்டிகை கொண்டாடுவதை போல், குடும்பம் குடும்பமாக வந்து நமக்கு ஓட்டு போடும் மக்கள் அதனை கொண்டாட்டமாக செய்ய வேண்டும்.அந்த மனநிலையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போது த.வெ.க., வெறும் சாதாரண ஒரு அரசியல் கட்சி அல்ல. புரட்சிகரமான பேரணி என்பது புரியும். இந்த வெற்றியை நாம் அடைவதற்கு உங்கள் செயல்பாடு தான் மிக மிக முக்கியம். நீங்கள்தான் முதுகெலும்பு அதனை மனதில் வைத்து செயல்படுங்கள். இவ்வாறு விஜய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

angbu ganesh
மே 02, 2025 15:07

விஜய் அவர்களே முதல்வர் பதவி காணுங்க தவறில்லை இப்பவே உன்னோட இந்த ஜாம்பிகளை உன் ரசிகர்கள்னு சொல்லி திரியறவனுங்களைத்தான் சொல்றேன் கூட்டத்தை கட்டுபடுத்த முடியல. நீ முதல்வர் ஆயிட்டா உன்னோட ஆளுங்க அலப்பறை தாங்காது காமராஜர் ஒக்காந்த இடத்தை உன்ன மாதிரியான ஆளுங்க அசிங்க படுத்திட்டானுங்க உன்னை அனுமதிக்க மாட்டோம் அண்ணாமலை தான் முதல்வர்


samvijayv
ஏப் 28, 2025 20:43

அப்படியென்றால்.., நீங்கள் எந்த கூட்டணியுடன் சேரமுடியதே சைமன் ஒருவர் தான் உங்களின் உகுந்தவர் அவருடன் கூட்டணி இல்லை என்று ஆகிவிட்டது இல்லையெனில் சைமன் போல் தனித்து நின்று தேர்தல் சந்திக்க வேண்டும்.


நாஞ்சில் நாடோடி
ஏப் 28, 2025 13:25

இறக்குமதி செய்து வாங்கும் காருக்கு வரி கட்டிடம் அரசாங்கத்தை ஏமாற்றும் ஒருவர் சினிமா வசனம் பேசுகிறார் ...


Yes God
ஏப் 28, 2025 10:18

ஊழல் குற்றவாளிகளுக்கு உன் கட்சியில் இடமில்லையா. முதலில் உன் ஜாதகத்தை பார். அப்புறம் உன் கட்சி ஆட்களை ஜாதகத்துடன் படி பிறகு சவால் விடு நைனா.


Yes God
ஏப் 28, 2025 10:13

ஆட்டுக்கு தாடி ஏன் நாட்டுக்கு கவர்னர் ஏன் என்று அடுக்கு மொழி தெலுங்கு அறிவாளி கூவினார். கோகுலாஷ்டமியும் குலாம்காதரும் ஒண்ணா. தவெக அதையே பின்பற்றலாம்.


Yes God
ஏப் 28, 2025 10:09

இதுவரை முசல்மான்கள் கிறிதுவர் எவரும் தனிக்கட்சி தொடங்கவில்லை. பொழுது வெடிஞ்சா தெரியும் யார் ...


Yes God
ஏப் 28, 2025 09:57

ஆரம்பத்தில் அப்படித்தான் ஓட்டு வாங்ச சொல்லுவ. பின்னால் தெரியும் வண்டவாளம்.


சாமானியன்
ஏப் 28, 2025 08:13

அடுக்கு மொழி, பஞ்ச் டயலாக் உங்க ஆட்கள் பரப்புரையில் பயன்படுத்தினால் ஒருவேளை ஐந்து சீட் கிடைக்கலாம். முதல்ல நீ இல்லாமல் கூட்டம் வருதா பார்ப்போம்.


Va.sri.nrusimaan Srinivasan
ஏப் 28, 2025 07:37

he himself is a cheater to GOI in importing his car which is recorded with SC!


அசோகா
ஏப் 28, 2025 07:31

முதல்ல டெபாசிட் வாங்கு ,அப்புறம் பார்க்கலாம்


சமீபத்திய செய்தி