உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளுக்கு ஆறுதலாகக்கூட பொங்கல் பரிசு இல்லை

விவசாயிகளுக்கு ஆறுதலாகக்கூட பொங்கல் பரிசு இல்லை

அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சி இழந்துள்ளனர். பொங்கல் தொகுப்புடன் பணம் இல்லாதது பெரும் குறை. தற்போதைய பருவமழை காலத்தில் விவசாயிகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆறுதலாகக் கூட, பொங்கல் பரிசு இல்லை. பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை, பொது விநியோக திட்டத்திலும் செயல்படுத்தப் போவதாக சொன்னார்கள். தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்; மாதம் 20 கிலோ அரிசி தரமாக வழங்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், தரமின்றி வழங்கப்படுகிறது. பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும்; சர்க்கரை அளவு உயர்த்தப்பட்டு மாதம் ஒரு கிலோ கூடுதலாக வழங்கப்படும் என்றும் கூட சொன்னார்கள். எதையுமே செய்யவில்லை. உதயகுமார், எதிர்கட்சித் துணைத் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ