தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கூடாது
சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை, வரும் 19ம் தேதி சட்டசபையில் நடக்கிறது. மாமல்லபுரத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரிய சுற்றுலா திட்டம் கொண்டு வரும் பணி நடக்கிறது. தரம் தாழ்ந்த விமர்சனங்களை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் போன்ற மூத்த அரசியல்வாதிகள் பேசுவது தவறு. ஆட்சிக்கு வராமல் போனதற்கான காரணத்தை தி.மு.க., ஆராயாமல், 'ஜோக்கர் கட்சி' என, த.வெ.க.,வை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சிப்பது தவறு. ஏற்கனவே, தரம் தாழ்ந்த வார்த்தைகளை பேசி, தி.மு.க.,வை இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு வந்தனர். - ராஜேஷ்குமார், தமிழக அமைச்சர், காங்கிரஸ்