உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்லிமென்டில் மென்மை கூடாது; கடுமையாக பேசணும்: எம்.பி.,க்களுக்கு முதல்வர் அறிவுரை

பார்லிமென்டில் மென்மை கூடாது; கடுமையாக பேசணும்: எம்.பி.,க்களுக்கு முதல்வர் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலை விட 2026 சட்டசபை தேர்தல் பல மடங்கு முக்கியமானது எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின், பார்லிமென்டில் எம்.பி.,க்கள் மென்மையாக பேசக்கூடாது. கடுமையாக பேச வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.வரும் 25ம் தேதி பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது. இதனையடுத்து சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் நிதி உரிமை, தேவைகள் நிதி நெருக்கடி குறித்து பார்லிமென்டில் குரல் எழுப்ப வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழகத்திற்கு வருவதில்லை என்பதை வலியுறுத்துவதுடன் புதிய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.பார்லிமென்டில் மென்மையாக பேசக்கூடாது. கடுமையாக பேச வேண்டும். தங்களுடைய திட்டத்தை நிறைவேற்றுவதில் பா.ஜ., கவனமாக இருக்கிறது. இதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. லோக்சபா தேர்தலை விட சட்டசபை தேர்தல் பல மடங்கு முக்கியமானது. ஒரு தொகுதியை கூட இழக்கக்கூடாது தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாக பயன்படுத்துங்கள். லோக்சபா தொகுதிக்குள் இருக்கும் ஆறு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெறுவது இலக்காக இருக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் வெற்றிபெற எம்.பி.,க்கள் முழு பங்களிப்பு முக்கியம். எம்.பி.,க்கள் செயல்பாடு சிறப்பாக இருந்தால் நம்முடைய வெற்றி இன்னும் எளிதாக இருக்கும்.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செயல்பாடுகளை அறிக்கையாக தர வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

தீர்மானம்

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; *மாநில உரிமை நிதி உரிமை காக்க பார்லிமென்டில் முழங்குவோம். *மதுரை எய்ம்ஸ் பேரிடர் நிதி வரிப் பகிர்வு உள்ளிட்ட விகாரம் குறித்து குரல் எழுப்புவோம்.*தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுகிறது.*வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்புவோம்.*ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிர்ப்பு.*தமிழகம் தமிழ் மக்களை வஞ்சிக்கும் பா,ஜ., அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோம்.*சமக்ர சிக்ஷா நிதி ஜி.எஸ்.டி., வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

v j antony
நவ 23, 2024 14:41

எதிர்க்கட்சியாக இருந்தால் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கவேண்டும் என்பதை மக்கள் கூறவில்லை தமிழ்நாட்டின் திட்டங்கள் செயல்படுத்த மத்தியில் ஆளுங்கட்சியுடன் இணைந்து செயல்படுவதில் தவறில்லையே தேர்தல் நேரங்களில் உங்கள் அரசியல் செய்யுங்கள் ஆட்சி அதிகாரம் வந்து வந்துவிட்டால் வளர்ச்சி திட்டங்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் எப்போதும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டே இருந்தால் எப்படி அரசு நிர்வாகம் செயல்படும் முக்கிய சாலை திட்டங்கள் ரயில் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அரசு துறைகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்


நிக்கோல்தாம்சன்
நவ 25, 2024 21:13

சரியாக சொன்னீர்கள் பிரதர்


Anand
நவ 23, 2024 10:25

ஆமாமா, முறைத்து பார்த்தபடி இருக்கணும், வடிவேலு பாணியில்...


Kasimani Baskaran
நவ 23, 2024 08:25

அதானி விவகாரம் பற்றி மட்டும் மூச் விடக்கூடாது.


Dharmavaan
நவ 23, 2024 08:10

பிஜேபியும் அதைவிட கடுமையாக பதிலடி கொடுக்கணும் அதானியிடம் வாங்கிய லஞ்சம் விவரம் கேட்கணும் கிஸ்தி யில் பங்கு கிடையாது அது மத்திய அரசின் பங்கு என்று சொல்லனும மாநில வருமானத்துக்குல் செலவு .இலவசங்களை நிறுத்தணும்


Barakat Ali
நவ 23, 2024 07:36

கட்டுமரமா இருந்தா ஆதரவு கொடுக்குறோம் ன்னு எப்பவோ சொல்லிட்டு மூணு காபினெட்டாவது வாங்கியிருப்பார் ..... எந்த சந்தர்ப்பத்தையும் தனக்கு சாதகமா திருப்பிக்குறதுல கில்லாடி ..... நீயி பேசுனா உன்னோட மந்திரி மேடையிலேயே கெக்கேபிக்கே ன்னு சிரிக்கிறான் ...


Sathyanarayanan Sathyasekaren
நவ 23, 2024 06:25

இந்த வெட்டி ஓபிஸ்ர்களுக்கு வெறும் கேள்விமட்டும் தான் கேட்பார்கள். பதில் கேட்க தெரியம் இல்லாமல் கேன்டீனில் வடை சாப்பிட ஓடுவார்கள். சென்ற முறை பார்த்தோமே.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 23, 2024 06:21

பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால் எவ்வளவு கடுமையாகப் பேசினாலும் பொறுப்பார்கள் ...... காங்கிரஸாக இருந்தால் உட்காரும் இடம் பழுத்துரும் .......


xyzabc
நவ 23, 2024 06:05

பேச்சு திறமை பற்றி சொல்ல தேவை இல்லை. தி மு க காரர்கள் எது வேண்டும் என்றாலும் பேசுவார்கள்.


M S RAGHUNATHAN
நவ 23, 2024 06:01

அவனுக்கென்ன கூறி விட்டான் அகப்பட்டு இருப்பவன் நானல்லவா ஒரு திமுக mp mind voice.


Mani . V
நவ 23, 2024 05:56

எப்படி, படிக்காதவன் திரைப்படத்தில் விவேக் அசால்ட் ஆறுமுகம் வில்லனிடம் மென்மையாக நடந்து கொள்ளாமல் உச்சா போய், காலைப் பிடித்து விடுவாரே அது மாதிரிதானே?


புதிய வீடியோ