உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பனி மூட்டம் இருக்கும்; வறண்ட வானிலை நிலவும்; ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

பனி மூட்டம் இருக்கும்; வறண்ட வானிலை நிலவும்; ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜன., 3) முதல் வரும் ஜன., 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் இன்று (ஜன., 3) முதல் வரும் ஜன., 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு இன்று முதல் வரும் ஜன.,5ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Balakrishnan Prc
ஜன 03, 2025 23:00

அனுமதி காவல் துறை வழங்க மறுத்தது சட்டம் ஒழுங்கு.மீறி மறியல் மதுரையிலிருந்து சென்னைக்கு . சட்டத்தை மீறி செயல் படுகிறீர்கள்.ஐந்து முதல்வர் தலைவர் கலைஞர் அத்தராத்திரியில் கைது . தலைவர் கலைஞர் கைது நடவடிக்கை வைத்து கட்சிக்காரர்கள் கைது இன்னும் முடிவடையாமல் இன்னும் வாய்தாவிற்கு நீதிமன்றம் செல்லும் நிலை. செல்லூர் கஞ்சி தொட்டி காவல் துறை அனுமதி பெற்று நடத்தியது அனுமதி கொடுத்த காவல் துறை நெசவாளர்கள் பிரச்சினை கஞ்சி தொட்டி கஞ்சி ஊற்ற வருபவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஊத்த விடாமல் தடுத்தது அடிதடி காவல் துறை நடவடிக்கை எல்லாம் அம்மையார் ஜெ ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருக்கும் போது. அரசு ஊழியர்கள் முதல் நடவடிக்கை எஸ்மா டெஸ்மா நடவடிக்கை கடும் செயல்.தலைவர் கலைஞர் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வர் ஆட்சி போராட்டம் மதிக்க படுவதால் தமிழக மத்திய ஆளும் கட்சி சென்னை நீதிமன்றத்தில் வெட்கப்பட வேண்டியதை அரசியல் செய்வது சரியா கேட்கும் நிலையில் பெற்ற சலுகைகள் இழப்பு மீண்டும் பெற போராட்டம்.மக்களையும் அரசியல் பொதுவாழ்வில் கொச்சை படுத்தல் தேவையற்றது .


MARI KUMAR
ஜன 03, 2025 15:57

பனி அதிகமாக இருக்கிறது.. காலை எந்திருக்க முடியவில்லை


புதிய வீடியோ