உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!

நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!

சென்னை: தமிழகத்தில், பல்வேறு ஊர்களிலும், லஞ்சம் வாங்கிய வேளாண் அதிகாரி, வி.ஏ.ஓ., உள்ளிட்ட 5 பேர் நேற்று(டிச.,24) கைது செய்யப்பட்டனர்.

பி.டி.ஓ., பஞ்., செயலர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் வெங்கடேசன், 56; இவர், தன் மனைவி பெயரில், மருதண்டப்பள்ளியில் வாங்கிய, 53 சென்ட் இடத்திற்கு செல்ல அணுகு சாலை சான்று கேட்டு, சூளகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தார். சான்று வழங்க பி.டி.ஓ., கார்த்திக்குமார், 43, மருதண்டப்பள்ளி பஞ்., செயலர் ராஜேந்திரன், 37, ஆகியோர், 60,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். வெங்கடேசன் புகாரில், கார்த்திக்குமார், ராஜேந்திரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

லஞ்ச வி.ஏ.ஓ., சிக்கினார்

சேலம்: சேலம் மாவட்டம், வித்யா நகரை சேர்ந்தவர் பாலாஜி, 45; சின்னத்திரை துணை நடிகர். இவரது பெரியம்மா, அக்காவுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் பாலாஜி விண்ணப்பித்தார். அந்த மனு குறித்து விசாரிக்க, பெரியேரி வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு சென்ற பாலாஜியிடம், வி.ஏ.ஓ.,வான பெரமனுாரை சேர்ந்த ராஜசேகர், 45, என்பவர், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பாலாஜியிடம், 2,000 ரூபாயை, ராஜசேகர் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர்.

ரூ.3,000 லஞ்சம் பெற்றவருக்கு 'காப்பு'

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வி.கள்ளுப்பட்டியை சேர்ந்தவர் பொறியாளர் பிரியதர்ஷன், 30; கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்காக, 2024 ஜூலையில் விண்ணப்பித்தார். விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவருக்கு உதவித்தொகை, 8 கிராம் தங்கம் வழங்கப்பட உள்ளது. பிரியதர்ஷன் உரிய ஆவணங்களுடன் சமூகநல விரிவாக்க அலுவலர் உமாராணியை அணுகியபோது, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பிரியதர்ஷன் புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் உமாராணியை கைது செய்தனர்.

வேளாண் அதிகாரி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பிலாத்து ஆண்டிக்குளத்தை சேர்ந்த விவசாயி கருப்பையா, 60. இவருக்கு பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில், இரு ஆண்டுகளாக பணம் வரவில்லை. வட மதுரை உதவி வேளாண் அலுவலர் சந்திரலேகா, 39, என்பவரிடம் புகார் செய்தார். ஆன்லைனில் பதிவு செய்து தர, சந்திரலேகா 2,500 ரூபாயை, கருப்பையாவிடம் லஞ்சமாக கேட்டார். கருப்பையா புகாரில், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் பெற்ற சந்திரலேகாவை கைது செய்தனர்.

ரூ.5,000 கேட்ட வி.ஏ.ஓ., கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், முன்னுாரை சேர்ந்தவர் சுரேந்தர், ஆட்டோ ஓட்டுநர். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். சில மாதங்களுக்கு முன் ஆலங்குப்பத்தில், தன் மனைவி பெயரில், வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் விண்ணப்பம் செய்திருந்தார். ஆலங்குப்பம் வி.ஏ.ஓ., சரவணன், சுரேந்தரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். சுரேந்தரிடம் இருந்து, பணத்தை சரவணன் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Barakat Ali
டிச 25, 2025 11:00

அம்புட்டும் எங்களுக்கா அள்ளிக்கிறோம்? துக்ளக்கார் குடும்பம் வரைக்கும் கொடுத்து அழவேண்டியிருக்குதே ????


தமிழ்வேள்
டிச 25, 2025 10:23

இவன்கள் லஞ்சம் வாங்கும் அடிப்படை காரணம், ஆடம்பரமான வாழ்க்கை வெறி, சொத்து & பெண் வெறி....மேலும் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய மாமூல் டார்கெட் காரணமாக, அதில் ஒருபங்கு தனக்கும் ஒதுக்கிக் கொள்ளும் முனைப்பு.. இதற்கு உறுதுணை பெண்பித்து பிடித்து திரியும் திராவிடம்.... தமிழகத்தை பிரித்து திராவிட மாயையை அழிக்காத வரை ஒழுக்கக் கேட்டை தவிர்க்கவோ திருத்தவோ இயலாது.... திராவிட நாஸ்திக மாயை அழியாமல் ஒழுக்கம் வராது....


Perumal Pillai
டிச 25, 2025 09:51

RTO ஆபீஸ் பத்திரப்பதிவு ஆபீஸ் பேர்வழிகள் மட்டும் மாட்டுவதில்லை என்பதுதான் விந்தையிலும் விந்தை.


Gopal
டிச 25, 2025 08:33

திராவிட மாடலில் ஆதி முதல் அந்தம் வரை ஒரே ஊழல் நாற்றம்.


baala
டிச 25, 2025 09:16

யார் வந்தாலும் லஞ்சம் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இந்த தளத்தில் எழுதுபவர்கள் கூட எத்தனை பேர் நேர்மையானவர்கள் இங்கு நான் நேர்மையானவன், அடுத்தவர் பணத்தை ஒரு ரூபாய் கூட சாப்பிடவில்லை என்று பதிவிட சொல்லுங்கள். கருத்தை கருத்தால் எதிர் கொள்ளவும்.


Gopal
டிச 25, 2025 08:31

தினமும் இப்படி 10-15 பேரை உள்ளே தூக்கி போடணம். அப்படியே திருட்டு அமைச்சர்களையயும் உள்ளே தள்ள வேண்டும்.


Keshavan.J
டிச 25, 2025 08:14

1980-களில் நான் சின்னப் பையனா இருந்தப்போ, என் அப்பா சொன்னாரு இடஒதுக்கீடுனால் ஊழல் ரொம்ப தலை விரித்து ஆடும், ஏன்னா, படிப்பு, கல்லூரி, பிறகு வேலை எளிதாக கிடைச்சா மக்களை சீக்கிரமா ஊழல் பண்ணவைக்கும். நீங்கள் கடினமாக உழைத்து சாதிக்கும்போது, ​​உங்கள் பதவிக்கு மதிப்பளிப்பீர்கள். எங்க குடும்பமும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தது தான். அவர் SC சான்றிதழ் வாங்க மறுத்துட்டார். எங்க ஐவரையும் நல்லாப் படிச்சு, கல்லூரி சீட் வாங்கி, சுய திறமை முலமாக வேலை போக சொன்னாரு. அவர் சொன்னது இப்போ உண்மையாகி விட்டது, நான் எல்லாரும் கெட்டவங்கன்னு சொல்லல, ஆனா சிலரே நல்லவர்களாக இருக்கிறார்கள்


S.V.Srinivasan
டிச 25, 2025 07:55

திராவிட மாடல் ஆட்சியில் அரசியல்வாதிகள் , அரசு அதிகாரிகள் , மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்தால்தான் செய்தி. இது தேவையில்லாத செய்தி.


Indhuindian
டிச 25, 2025 07:55

இவங்கல்லாம் திருவள்ளுவர் சொன்னதை தப்பாம பின்பற்றவங்க - உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.- அதனாலதான் டார்கெடலாம் கொடியிலதான் ஆனா அப்படி போறவழியிலே ஒரு அஞ்சோ பத்தோ தெறித்துண்ண வர லட்சுமிய ஒதுக்கிவிடமுடியுமா


Muthukumaran
டிச 25, 2025 07:43

தலை முதல் கால்வரை லஞ்சத்தை முறைப்படுத்தினால் அனைவருக்கும் நலம். இதுவரை காரியம் சாதித்துக் கொண்டவர்கள் பட்டியலில் சந்தேகத்ததிற்குரிய இனங்களில் சாதித்துக்கொண்டவர்களில் ஒருவரை அணுகி விசாரித்து அவரை கைது செய்து விளம்பரப்படுத்தினால் ஊக்குவித்தல் குறையும். கொடுமை என்னவென்றால் காலை வழக்குமூலம் கட்டிவிடுகிறார்கள். தலைமீது வழக்குப்பதியவே கோர்ட்டு உத்திரவு வரை நீள்கிறது துறைப்பணி. புதுமைக்கு வேறு சான்று.


K Siva
டிச 25, 2025 07:17

போலீஸ் துறையில் லஞ்சம் வாங்குவது இல்லையா அல்லது போலீஸ் துறை என்றால் பிடிப்பதில்லை


சமீபத்திய செய்தி