உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களையும் நேர்மையற்றவர்களாக ஆக்குகின்றனர்

மக்களையும் நேர்மையற்றவர்களாக ஆக்குகின்றனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடையநல்லுாரில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அளித்த பேட்டி:

கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது. அதனால்தான், தொடர்ந்து தனித்தே போட்டியிடுகிறேன். இனியும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். மற்றவர்களுக்காக கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டு, யாரிடமும் கூட்டணி சேர வேண்டிய அவசியம் இல்லை. மக்களோடு மட்டும் தான் எங்கள் கூட்டணி. மக்களை மட்டும்தான் நாங்கள் நம்புகிறோம்.நேர்மையற்ற ஆட்சியாளர்களே இங்கு உள்ளனர். அவர்களுக்கு மக்களையும் நேர்மையற்றவர்களாக்கும் வேலை இருக்கிறது. அதனால் தான் யாரிடமும் கூட்டணி சேர்வதில்லை. கூட்டணி சேர்ந்தால், நல்லதை கேட்கும் திறனற்று போய் விடுவோம். தற்போது இருக்கும் எந்த கட்சியோடும் சேர்ந்து நல்லாட்சி கொடுக்க முடியாது. தனித்து நின்று வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வர முடியாது. சொல்வதை ஏற்க மாட்டேன். கடந்த காலம் இல்லை என்றால் நிகழ்காலம் இல்லை. நிகழ்காலம் இல்லாதவர்களுக்கு எதிர்காலம் இல்லை. முன்னாடி கட்சி துவங்கியது நான்தான். அதிகாரத்தில் இருப்பதால் பலருக்கும் ஊடக வெளிச்சம் இருக்கிறது. என் பலவீனம், வலிமை பற்றி எனக்குத்தான் தெரியும். என்னிடம் காசு இல்லை. எனக்காக பேசும் ஊடகங்கள் இல்லை. இதனால் நாங்களே பேசிக் கொண்டிருக்கிறோம்.களத்தில் எப்படி ஓடுவது என எங்களுக்கு தெரியும். ஆனால், எங்கள் ஓட்டம் எப்போதும் வேகமாகத்தான் இருக்கும். அரசியலில் எப்போதும் தடுமாற்றம் இல்லாமல் செல்கிறேன். நடிகர் விஜயுடன் எனக்கு எந்த முரணும் இல்லை; கட்சி கொள்கை, கோட்பாடுகளில்தான் நிறைய முரண்பாடு வருகிறது. தி.மு.க.,வையும்கூட கொள்கை ரீதியில்தான் எதிர்க்கிறேன்; ஆளுங்கட்சி என்பதால் இல்லை. தாமிரபரணி ஆற்றை நஞ்சாக மாற்றி விட்டனர். இது, யாருடைய ஆட்சியில் நடந்தது என்பதை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Barakat Ali
நவ 14, 2024 11:19

நீயி உன்னை இறக்குன டீம்காவின் மனம் கோணும்படி நடக்க மாட்டாய் .... அதாவது பல கட்சி கூட்டணி வைத்து டீம்காவை வெறுப்பேத்த மாட்டாய் .... அப்படி சில நியமங்களை நீயி பின்பற்றினால்தான் அறிவாலயத்தில் இருந்து உனக்கு உன் தவணை ரெகுலராக வரும் .... கட்சி நடத்த ...


Gopalan
நவ 14, 2024 09:57

மக்கள் ஏற்கனவே நேர்மையற்றவர்களாக மாறிவிட்டனர். ஊழல் செய்ய வாய்ப்பு கிடைத்தவர்கள் மற்றும் வாய்ப்பு கிடைக்காதவர் என்ற இரு வகையினர் மட்டுமே நாட்டில் உள்ளனர். நேர்மையான வியாபாரிகள், தரமான பொருட்கள் தமிழ்நாட்டில் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பயணத்தில் அறிந்து கொண்டேன்


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 12:35

ஆகச் சிறந்த பதிவு. உண்மை நிலையை அப்படியே, எழுத்துக்களில் காட்டியிருக்கிறார்.


அப்பாவி
நவ 14, 2024 06:38

People get the government they deserve.இந்தியர்களுக்கு இதுவே அதிகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை