உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.30 லட்சம் கட்டணம் கேட்பதால் காற்றாலை புதுப்பிக்க ஆர்வமில்லை

ரூ.30 லட்சம் கட்டணம் கேட்பதால் காற்றாலை புதுப்பிக்க ஆர்வமில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஒரு மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாய் வளர்ச்சி கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட காரணங்களால், காற்றாலைகளை புதுப்பிக்க, உரிமையாளர்களிடம் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதனால், இதுவரை, 25 மெகா வாட்டிற்கு மட்டுமே காற்றாலையை புதுப்பிக்க, மின் வாரியத்திடம் விண்ணப்பம் வந்து உள்ளது.

கடும் எதிர்ப்பு

தமிழகத்தில், 1986 முதல் காற்றாலை மின் நிலையங்கள் நிறுவப்பட்டு செயல்படுகின்றன. கடந்த ஜூன், 30 நிலவரப்படி மாநிலத்தில், 10,790 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு காற்றாலை யும், 600 கிலோ வாட் வரையிலான திறனில் அமைக்கப்பட்டது. தற்போது, ஒரு காற்றாலை, 2 மெகா வாட் திறனில் அமைக்கப்படுகிறது. இதனால், பழைய காற்றாலைக்கு பதில் புதிதாக அமைக்கவும், திறனை அதிகரிக்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ஆயுளை நீட்டிக்கவும், 'தமிழக காற்றாலை மின் திட்ட மறுசீரமைப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை - 2024 ஐ அரசு சமீபத்தில் வெளியிட்டது. அந்த கொள்கையின்படி, 20 ஆண்டுகள் முடிவடைந்த காற்றாலைக்கு பதிலாக, புதிதாக அமைக்கலாம். காற்றாலையை புதுப்பிக்க வளர்ச்சி கட்டணமாக, 1 மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாய், மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டும். இதற்கு, காற்றாலை மின் நிலையம் அமைத்தவர்களிடம் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.இதனால், 20 ஆண்டுகளுக்கு மேலான, 3,000 மெகா வாட் அளவுக்கான காற்றாலைகள் புதுப்பிக்க வேண்டிய நிலையில், இதுவரை, 25 மெகா வாட்டிற்கு தான் மின் வாரியத்திடம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ஆயுட்காலம்

இதுகுறித்து, காற்றாலைகளை அதிகம் அமைத்துள்ள தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது: நடைமுறைக்கு ஏற்றதாக கொள்கையில் முடிவுகள் எடுக்கப்படவில்லை. காற்றாலையை ஏற்கனவே நிறுவியபோது, வளர்ச்சி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த காற்றலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் இன்று வரை, மின் வழித்தடத்தில் எடுத்து செல்லப்படுகிறது. இந்த சூழலில், காற்றாலை புதுப்பித்தாலோ, ஆயுள் நீட்டிப்பு செய்தாலோ, மீண்டும் மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாய் செலுத்த சொல்வது ஏற்புடையதல்ல. காற்றாலையை புதுப்பித்தல் என்பது சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட வேண்டிய கொள்கை அல்ல. இது, உற்பத்தியாளர்களின் தனிப்பட்ட முடிவு. காற்றாலையை புதுப்பித்தால், அந்த காற்றாலைகளில் இருந்து ஏற்கனவே வழங்கியதுடன், கூடுதலாக, 25 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கொள்கையில் கூறப்பட்டுள்ளது. காற்றாலை ஆயுட் காலம் என்பது, இதுவரை சட்டப்பூர்வமாக நிர்ணயம் செய்யப்படவில்லை. அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் வாங்குவதற்கு மட்டுமே, 20 - 25 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டது.புதிய கொள்கையின்படி, 20 ஆண்டு முடிந்த உடன் காற்றாலையை மாற்ற வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும் என்பது அதிர்ச்சி தரக்கூடியது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Muthukumaran Ilankumani
அக் 26, 2024 20:24

சரியாக சொன்னீர்கள் சார். காற்றாலை மின்சாரம் உற்பத்தி குறைந்தால் அதை காரணம் சொல்லி வெளி மாநிலங்களில் அதிக கமிஷனில் மின்சாரம் வாங்கலாமே... அதான்..???


Ravi.S
அக் 22, 2024 20:07

காற்றாலை மின்சாரம் இல்லாமல் இருந்தால் தானே வெளிமார்க்கெட்டில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி மந்திரிகள் தங்கள் கல்லாவை நிரப்ப முடியும்


Muthusamy Rajagopal
அக் 22, 2024 21:58

அது தான் உண்மை


sankar
அக் 22, 2024 13:30

வளர்ச்சியில் ஆர்வமில்லாத அரசு


Sivagiri
அக் 22, 2024 12:40

ஆளுக்கு அஞ்சு லட்சம் சைடுல குடுத்துருங்க, கவர்ன்மெண்ட் பீஸ்-ஐ கேன்சல் பண்ணீருவோம் - இதுதானே திருட்டு மாடல் ? . .


RAAJ68
அக் 22, 2024 11:04

அரசுக்கு 20 லட்சம் கட்டனும். அதிகாரிகளுக்கும் மந்திரிக்கும் கவனிப்பு எவ்வளவு கட்டனம்?


ஜெகதீஸ்வரன் தண்டபானி
அக் 22, 2024 09:57

தமிழ்நாடு மின் வாரியம் தான் கட்டணம் நிர்ணயிக்கிறது. இதில் மத்திய அரசு எங்கே வந்தது?


Ravi
அக் 22, 2024 08:45

தமிழ்நாட்டில் எந்த தொழிலும் நடக்க விட கூடாது என்பதில் மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டு வெள்ளை செய்யுது.


Amsi Ramesh
அக் 22, 2024 10:02

இதில் மத்திய அரசு எங்கே வருகிறது


GMM
அக் 22, 2024 08:21

இந்த காற்றாலைகள் அரசியல் திராவிடர் காற்றாலை இல்லை.? தமிழகத்தில் அறிவாலயம் அறியாதோர் போட்ட முதலை எடுத்து செல்ல முடியுமா ?. காற்றாலை அமைக்க இயற்கை உதவுகிறது. தமிழகம் ஏன் இவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது? கட்சியினருக்கு சொந்தம் என்றால் மானியம் . தள்ளுபடி. நிதி மோசடியை நீதி கண்காணிக்காது. ?


Kalyanaraman
அக் 22, 2024 08:10

கஜானாவில் பணம் இல்லை - யாரிடமாவது பிடுங்க வேண்டும் - அதான் இப்படிப்பட்ட முட்டாள்தனமான உத்தரவு. துக்ளக் சோவின் முகமது பின் துக்ளக் படம் பார்த்தால் இன்றைய திமுக ஆட்சியை அன்றே கணித்து திரைப்படம் ஆக வெளியிட்ட தீர்க்கதரிசி சோ என்பது புரியும்.


Minimole P C
அக் 22, 2024 07:52

What is the use of CM visiting USA for investments in TN. Here already investements made are being cruished for reveue to Govt. Electricity is a must for all operations in industry and else where. Govt. has to give top priority to produce electricity. but everything is reverse in TN.