உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அடிப்படை புரிதலின்றி நீட் தேர்வை எதிர்க்கின்றனர்

 அடிப்படை புரிதலின்றி நீட் தேர்வை எதிர்க்கின்றனர்

மருத்துவ படிப்பு குறித்த அடிப்படை புரிதல் இல்லாமல், திரைத்துறையினர் சிலர், 'நீட்' தேர்வை எதிர்த்து வருகின்றனர். 'நீட்' தேர்வு இல்லாத போது, அரசு பள்ளி மாணவர்கள், அதிக அளவில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது போல பேசுகின்றனர். ஆனால், 'நீட்' தேர்வு வந்த பின்னரே, சாமானிய குடும்பத்தை சேர்ந்தவர்கள், மருத்துவராகும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். இப்போது, எவ்வளவு பணம் இருந்தாலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறாமல், மருத்துவராக முடியாது.பிரதமர் மோடி ஆட்சியில், அரசு மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கை, 145ல் இருந்து 441 ஆகவும், மருத்துவ படிப்பு இடங்கள், 51,000ல் இருந்து 1.36 லட்சமாகவும் அதிகரித்துள்ளன. உலக அளவில் எல்லா படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வு இருக்கும் போது, மருத்துவ படிப்புக்கு மட்டும் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பது, நியாயமல்ல. மருத்துவ கல்வி குறித்து தெரியாமல், 'நீட்' தேர்வை எதிர்க்க வேண்டாம். - தமிழிசை முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sivaprakasam Chinnayan
ஜூலை 25, 2026 17:43

நீங்களே ஒரு டாக்டர் தான் இந்த காலத்துல நீங்க எழுதி நிச்சயம் பாஸ் பண்ணி இருக்க முடியாது


Sivaprakasam Chinnayan
ஜூலை 25, 2026 17:41

இதுல பேசுறவங்க யாருக்குமே நீட்ட பத்தி அடிப்படை அறிவே இல்லன்னு நினைக்கிறேன்


Sridhar
ஜூலை 25, 2026 16:18

இந்தியாவுல டாக்டர்களின் எண்ணிக்கை அதிகமாய்விட்டதாம் அதனால், டாக்டர்களின் சம்பளமும் குறைந்து இப்போது 30000 ரூபாய்க்கு குறைவாகவே கிடைக்கிறதாம் இந்த நிலையில், 20 லச்சம் பேர் பரிச்சை எழுதுகிறார்கள், அதில் 11 லச்சம் பேர் தேர்வு பெருகிறார்கள், அதில் ஒன்றரை லச்சம் பேர் சீட் கிடைத்து படிக்கிறார்கள் மீதி பேர் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த ஒன்றரை லச்சம் பேரும் பாவம் கஷ்டப்பட்டு ஏழு எட்டு வருஷம் படித்து பின்பும் நேரம் பார்க்காமல் அசிங்கம் பார்க்காமல் ஊழியம் செய்தும் குறைந்த சம்பளம் என்றால், உண்மையாகவே, இவர்களை ஈர்ப்பது எது என்ற சந்தேகம் எழுகிறது மருத்துவ கல்லூரி உரிமையாளர்கள் நீட் ஐ எதிர்ப்பது என்னமோ அவர்களுடைய வியாபார ரகசியங்கள் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதற்காக என்றாலும், மருத்துவம் படிப்பதற்கு ஏன் இவ்வளவு பேர் அலைமோதுகிறார்கள்? வேறு பல தொழில் சார்ந்த கல்விகள் பல உள்ளனவே?


D Natarajan
ஜூலை 25, 2026 13:10

NEET இல்லையென்றால் என்ன நடக்கும். 1 தனியார் கல்லூரிகளில் 1 சீட்டுக்கு 2 கோடி நன்கொடை கேட்பார்கள் 2 பீஸ் 1 கோடி . 3 அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் கிடைக்காது. 4 தனியார் கல்லூரி ஒன்றுக்கு குறைந்தது 300 கோடி வருமானம்.ஏழை மாணவர்கள் MBBS படிப்பது குதிரைக்கொம்பு போல ஆகிவிடும். தீர்வு எல்லா மருத்துவ கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்


Dhanasekar Natarajan
ஜூலை 27, 2026 17:01

சார், இப்பவும் பிரைவேட் மெடிக்கல் காலேஜில் 1 கோடி /2 கோடி தன கேட்கிறார்கள் உங்களுக்கு தெரியாத அதனால் தான் சீனாவுக்கும் பிலிபைன்ஸ் மற்றும் ரஷ்யா வுக்கும் மாணவர்கள் மருத்துவம் படிக்க செல்கிறார்கள். NEET ஆல் அதிகம் பயனடிப்பவர்கள் நகரம் மாநகரங்களில் படிக்கும் மிடில் அப்பேர் மிடில் கிளாஸ் மக்கலே, காரணம் அவர்களுக்க மட்டுமே கோச்சிங் சென்டர்கள் வீட்டின் அருகில் உள்ளது, பீஸ் கட்ட பணவசதியும் உள்ளது. கிராமத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கோச்சிங் சென்டர்கள் வீட்டின் அருகில் இல்லை பீஸ் கட்ட பணமும் இல்லை இதனால் தான் மிடில் கிளாஸ் மக்கள் நீட் நல்லது என்று செல்லுகிறார்கள்


Ramesh Sargam
ஜூலை 25, 2026 12:37

டெல்லி போராட்டம் நீட் எதிர்ப்பு போராட்டமே இல்லை. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் உள்ள தேசதுரோகிகளுக்கு கிடைக்கும் பணத்தை தடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையால் இந்த போலி போராட்டக்காரர்கள் மிகுந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த நடவடிக்கையை எதிர்த்துதான் எல்லா தேசதுரோகிகளும், சினிமா பொறுக்கிகள் உட்பட ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். அவர்களை மத்திய அரசு விடக்கூடாது. வொவொருவரையும் பிடித்து சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கவேண்டும்.


Rajarajan
ஜூலை 25, 2026 11:46

வெளிநாடு சென்று மருத்துவம் படித்து, இந்தியாவில் பயிற்சி செய்ய விரும்பினால், அவர்களுக்கும் தகுதி தேர்வு உண்டு. அதில் அதிகபட்சம், பதினைந்து சதவிகிதம் பேர் கூட தேறுவதில்லை என்பது உண்மை.


Rajarajan
ஜூலை 25, 2026 11:27

யாருடைய பேச்சையும், கருத்தையும் கேட்க வேண்டாம். திருமதி. நளினி சிதம்பரம் முன்னர் கொடுத்த பேட்டியிலிலேயே அனைத்தும் உள்ளது. எதற்கும் தேர்வு கூடாது, குறிப்பிட்ட ஜாதி என்றதும் எல்லாவற்றிலும் முன்னுரிமை கொடுத்துவிட வேண்டும் என எண்ணுவது மிகப்பெரும் தவறு. அப்படியிருந்தும், தற்போது அவர்களுக்கு முன்னுரிமை இருப்பது உண்மை தானே ?? ஆனால், தாங்கள் நல்ல மதிப்பெண் பெற்றும், இடவொதுக்கீடே இல்லாத அந்த பிரிவினர் என்றைக்கேனும் போராட்டத்தில் ஈடுபட்டு பார்த்ததுண்டா ?? அவர்களை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்.


Loganathan Kuttuva
ஜூலை 25, 2026 09:17

பல மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவ படிப்பு படிக்கிறார்கள் .


Dominic
ஜூலை 25, 2026 09:15

Tamizisai delhi sendu sollivaa ??? Delhiyil manaver kothippathu ungalukku yeppadi puriyum. Question paper leaked . Do u know how many times ??? No one has any accountability.Next election con from delhi,


sahayadhas
ஜூலை 25, 2026 09:07

நீட் தமிழிசை அட்டென்ட் பண் ணியிருந்தால் நோ


சமீபத்திய செய்தி