பிரச்னை வராதா என எதிர்பார்த்தனர்
தி.மு.க., கூட்டணியில் கட்சிகளுக்குள் முரண்பாடு ஏற்பட்டு, பிரச்னை வராதா என எதிர்க்கட்சியினர் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், கூட்டணி கட்சிகளுடனான பேச்சு, எப்போதும் போல சுமூகமாகவே செல்கிறது. கூட்டணி கட்சிகளோடு தி.மு.க.,வுக்கு இருக்கும் உறவும் நெருக்கமும் இன்று, நேற்று ஏற்பட்டதல்ல; காலம் காலமாக இருப்பவை. அதனால், தி.மு.க., கூட்டணிக்குள், எதிர்க்கட்சியினர் எதையும் செய்துவிட முடியாது. அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை, தமிழக டி.ஜி.பி.,க்கு அனுப்பிய கடிதத்தை வைத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டிருப்பது குறித்து, எதுவும் சொல்ல முடியாது. ஆனால், தேர்தல் வந்து விட்டால், இப்படிப்பட்ட 'ஐஸ்'களை ( ICE - வருமான வரித்துறை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை) பயன் படுத்தி, எதிர்கட்சியினரை மிரட்டுவது பா.ஜ.,வின் வாடிக்கை. - கனிமொழி, துணை பொதுச்செயலர், தி.மு.க.,