உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதைக்காட்டிலும் அதிர்ச்சி அளிப்பது இதுதான்; அன்புமணி சொல்வதை கேட்குமா மாநகராட்சி!

அதைக்காட்டிலும் அதிர்ச்சி அளிப்பது இதுதான்; அன்புமணி சொல்வதை கேட்குமா மாநகராட்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்துவது எளியவர்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரையாகிவிடும் என்று பா.ம.க.,வின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி, திரு.வி.க., நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு மாநகராட்சி திரும்பப் பெற்றிருக்கிறது. பட்ட பிறகாவது சென்னை மாநகராட்சி அதன் முடிவை திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், மாநகராட்சியின் முடிவு முழுமையானதாக இல்லை.கால்பந்து திடல்கள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது தவிர்க்கப்பட்டால் மட்டும் போதாது. ஏற்கனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான டென்னிஸ் திடல், பேட்மிண்டன் திடல் , ஸ்கேட்டிங் மைதானம், டேபிள் டென்னிஸ் மைதானங்கள் போன்றவையும் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும்.விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை விட அதிர்ச்சியளிக்கும் செயல், தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவை தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது தான். மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் தியாகராயர் அரங்கத்தை 24 மணி நேரம் பயன்படுத்துவதற்கான வாடகை இப்போதுள்ள ரூ.20,650-லிருந்து ரூ.59,000 ஆக உயர்த்தப்படும். அம்மா அரங்கத்தின் வாடகை ரூ.3.40 லட்சத்திலிருந்து ரூ.5.40 லட்சமாக உயர்த்தப்படும். எளிய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் அரங்குகளின் வாடகை மும்மடங்கு அளவுக்கு உயர்த்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.தியாகராயர் அரங்கில் சில ஆயிரம் ரூபாய் செலவில் 3 மணி நேரத்திற்கான நூல் வெளியீடு உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகளை எளிய மனிதர்களாலும் நடத்தி விட முடியும். மாறாக, ரூ.59,000 செலுத்தி தான் நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். எனவே, எளிய மக்கள் பொது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

PARTHASARATHI J S
நவ 01, 2024 06:52

தமிழகத்தின் அபரிமிதமான கடனால் அரசு வட்டி கட்டக்கூட திணறுவது வெளிப்படையாக தெரிகிறது. கண்டதற்கெல்லாம் கட்டணம் ஏற்றுவதால் கஜானா காலியாவது அப்பட்டமாக தெரிகிறது. இலவசங்கள், ஊழல் ஆகியவற்றால் தமிழகம் சீரழைந்திருக்கிறது. வரப்போகிற அரசுக்கும் இந்த நெருக்கடி தொடரும்.


Shunmugham Selavali
அக் 31, 2024 15:21

திமுகவின் கூட்டணி கடசிகள் ஏன் இவற்றை பேசுவதல்லை. கட்சியை திமுகவுடன் இணைத்துவிடலாம்.


rama adhavan
அக் 31, 2024 20:35

ஏற்கனவே இணைந்த மாதிரி தான். ஓசி சோறு கிராக்கிகள்.


Apposthalan samlin
அக் 31, 2024 13:53

இவ்வளுவு பேசுகிறவர் gst எதற்கு என்று கேட்கிறாரா ?


N Sasikumar Yadhav
அக் 31, 2024 14:16

GST க்கு முன் கண்டமேனிக்கு வரி வசூல் செய்து கொள்ளையடித்து கொண்டிருந்தது உங்களுக்கு தெரியாத மாதிரியே கேட்கிறீர்களே .


raja
அக் 31, 2024 15:54

கூமுட்டைகளுக்கு அதில் ஸ்டேட் GST என்று பாதி மாநிலத்துக்கு திருப்பி வருகிறதே அது ஏன் என்று கேடுகெட்ட திருட்டு மாடல் ஆட்சியாளர்களிடம் கேட்க முடியுமா...


Prabakaran J
அக் 31, 2024 13:49

issues forward to TN sports minister not deputy CM.


புதிய வீடியோ