உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / " தமிழக அரசுக்கு களங்கம் வந்துடும்"- கூட்டணி கட்சியை சேர்ந்த திருமாவளவன் கவலை

" தமிழக அரசுக்கு களங்கம் வந்துடும்"- கூட்டணி கட்சியை சேர்ந்த திருமாவளவன் கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பெரம்பூர் பகுதியில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்தவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் 8பேர் இந்த கொலையில் சரண் அடைந்துள்ளனர். திருநெல்வேலியில் இருந்து வந்த கூலிப்படையினர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்டிராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் ஆகியோர் வந்தனர். இந்நேரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு இருவரும் பேட்டி அளித்தனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு கூட்டணி தலைவர்கள் கோரிக்கை

செல்வபெருந்தகை அவரது பேட்டியில் ; ஆம்ஸ்டிராங் மிக பலசாலி, தைரியம் கொண்டவர், பல பயிற்சிகளை கற்றவர். அவரை நேருக்கு நேர் யாரும் மோதி ஜெயிக்க முடியாது. கோழைகள் பலர் பின்புறமாக வந்து தாக்கி கொலை செய்திருக்கலாம். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் எங்கள் தலைவர் ராகுல் பேசி ஆறுதல் கூற வேண்டும் என கேட்டார். அவர்களிடம் பேச முயற்சிகள் எடுத்து வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும். தமிழக முதல்வர் நல்ல நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

திருமாவளவன் சந்தேகம்

திருமாவளவன் கூறியதாவது:சமூகவிரோத கும்பல் செய்த கொலைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். மறைந்த ஆம்ஸ்டிராங் அம்பேத்கர் கொள்கையை பின்பற்றி அரசியல் பணியாற்றி வந்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்காக உழைத்தவர். கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் யாரும் உண்மை குற்றவாளிகள் அல்ல. இதில் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. உண்மையான குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும். வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும். கூலிப்படை, சாதிவாதகும்பல், கொலைக்கார கும்பல்களை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டுபிடித்து கட்டுப்படுத்த தவறினால் தமிழக அரசுக்கு மேலும் களங்கம் உருவாகிவிடும் என்பதை எங்கள் கட்சி சுட்டி காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Garuda
ஜூலை 09, 2024 17:03

வேஸ்ட்


ponssasi
ஜூலை 09, 2024 12:13

திருமா சொல்லுவதை பார்த்தல் யாரோ மேல் சாதி கும்பல்தான் இந்த கொலையை செய்திருக்கவேண்டும். பட்டியல் இனத்தவருக்கு அருவா எப்படி இருக்கும் என்றுகூட தெறியாது, என்பதுபோல உள்ளது. கொலையை கண்டிக்கவேண்டியதுதான் அதுக்காக அதிலும் சாதி பேசி தனது மக்களை பாதுகாக்க போராடுகிறார். இறந்தவர் மீது பல வழக்குகள் உள்ளன, அவரால் பாதிக்க பட்ட குடும்பத்தை சென்று பார்த்து இவர்கள் இருவரும் பார்த்து கண்டனம் தெரிவிப்பார்களா?


panneer selvam
ஜூலை 09, 2024 23:22

The murderers also belong scheduled e so what Thirumaji is going to do now. unfortunately It is a gang war which is prevailing in North Madras for years


மோகன்
ஜூலை 09, 2024 11:32

இன்னுமா தோழமை சுட்டு என்ற பெயரில் உங்களை ஏமாற்றிக் கொண்டு, உங்கள் கட்சி தொண்டர்களையும் ஏமாற்றுகிறீர்கள். உங்களையும், உங்கள் கட்சியையும் பதவி சுகத்திற்காக எப்போதோ அடமானம் வைத்தாகிவிட்டது.


rasaa
ஜூலை 09, 2024 07:18

தோழமையின் சுட்டல்


Palaniappan
ஜூலை 09, 2024 07:10

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது


JEEVAKUMAR RADHAKRISHNAN
ஜூலை 08, 2024 09:56

இதுக்கு மேல என்ன வேற கலங்கம் வந்துட போகுது


Neethan K
ஜூலை 07, 2024 22:22

கோபாலபுரத்திற்கு வாய்தது... மிகவும் நல்ல அடிமைகள்..


Neethan K
ஜூலை 07, 2024 22:21

திரு அண்ணாமலை பாணியில் சொல்வதென்றால்.. இது தான் பல்லு படாமல்.. பக்குவமா.. ............ என்பது.


panneer selvam
ஜூலை 07, 2024 14:50

DMK is fortunate to have such a loyal dedicated servants like Thiruma ji, Vaiko ji and Selvaperunthagai ji .


TSRSethu
ஜூலை 07, 2024 13:40

சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வருவதே ஒரே வழி. தமிழக போலீஸோ சிபிசிஐடி யோ விசாரித்தால் அது நம்பகத்தன்மை உடையதாக இருக்குமா ? கள்ளக்குறிச்சி விஷயத்தில் இன்னமும் குற்றவாளிகளை பிடிக்கவே இல்லையே? விற்பனை செய்த சிலரை கைது செய்துள்ளனர். எனவே இந்த கொலை வழக்கை சிபிஐ யிடம் ஒப்படைக்க வேண்டும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ