உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் பதவி, அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம் திருமாவளவன் - முருகன் மோதல்: குளிர்காயும் சீமான்

முதல்வர் பதவி, அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம் திருமாவளவன் - முருகன் மோதல்: குளிர்காயும் சீமான்

முதல்வர் பதவி கோஷம், அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, திருமாவளவனுக்கும், மத்திய அமைச்சர் முருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், குளிர்காயும் வகையில், 'திருமாவளவனை முதல்வராக்க நான் தயார்' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.பட்டியலின பிரிவில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2009ல் தி.மு.க., ஆட்சியில், 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர் எதிர்த்தனர். சில கட்சிகள் சார்பில், இந்த உள்ஒதுக்கீடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அருந்ததியர் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட, 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என அங்கீகரித்து, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட்டில் தீர்ப்பளித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yo87v11c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுதொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அருந்தியருக்கான உள்ஒதுக்கீட்டை, தி.மு.க., அரசு கொண்டு வந்ததால், அக்கட்சி கூட்டணியில் உள்ள திருமாவளவன், தற்போது தீவிரமாக எதிர்ப்பு காட்டவில்லை. இந்நிலையில், அக்கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னியரசு பேட்டி ஒன்றில், 'திருமாவளவனை தமிழக முதல்வராக்குவது எங்கள் கனவு' என்றார்.அவருக்கு பதிலடி தரும் வகையில், மத்திய அமைச்சர் முருகன் அளித்த பேட்டி: திருமாவளவன் முதல்வராகும் கனவு நடக்காது. தி.மு.க., கூட்டணி, திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்குமா என்பதெல்லாம் அக்கட்சி எடுக்க வேண்டிய முடிவு. சமூக நீதி குறித்து பேச, திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. இந்த விவகாரத்தில் அவர் இரட்டை வேடம் போடுகிறார். அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் எப்படி, ஒட்டுமொத்த தலித் மக்களின் தலைவராக இருக்க முடியும். சிறிய கட்சியின் தலைவராகவே அவரை பார்க்கிறேன். ஒட்டு மொத்த தலித் மக்களை, அவர் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அதேநேரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமாவளவனுக்கு ஆதரவு அளித்துள்ளார். அவரது பேட்டி: திருமாவளவனுக்கு முதல்வராவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. அவரை நாங்கள் ஆதரிப்போம்; அவரை எப்படியாவது நாங்கள் முதல்வராக்குவோம். இதில், என்னை விட மகிழ்ச்சி அடையும் நபர், வேறு யாரும் இருக்க முடியாது. கனவு பலிக்காது என்று சொல்வதற்கு முருகன் யார்? அவர் இரண்டு முறை மத்திய அமைச்சராகும் போது, திருமாவளவனால் தமிழக முதல்வராக முடியாதா? இவ்வாறு சீமான் கூறினார்.முதல்வர் கனவு, அருந்தியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில், முருகனுக்கும், திருமாவளவனுக்கும் இடையேயான மோதலில், குளிர் காயும் வகையில், சீமான் திருமாவளவனுக்கு ஆதரவு அளித்துள்ளார். இதன் வாயிலாக நாம் தமிழர் கட்சிக்கு, தேவேந்திர குல வேளாளர் மற்றும் பட்டியலின சமுதாயத்தின் ஓட்டுகளை வளைக்க, சீமான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

muthukumar pa
அக் 22, 2024 17:25

முருகன் சார் மீது பொறாமை , கையாலாகாதவங்க வீண் விமர்சனம்தான் பேசமுடியும்


தாமரை மலர்கிறது
அக் 21, 2024 23:36

இன்றுவரை தாழ்த்தப்பட்டவர்களிலேயே மிகவும் கீழ்நிலையில் கடைசியில் உள்ள அருந்ததியர், மற்ற தாழ்த்தப்பட்ட பள்ளர் மற்றும் பறையர்களுடன் மோதமுடியாமல், தோற்றுபோய் வந்துள்ளார்கள். இதனால் இதுவரை அருந்ததியர் கோட்டாவை பள்ளரும் பறையரும் ருசித்துவந்தார்கள். தங்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த அந்த கோட்டா இப்போது போய்விடுமே என்ற பதட்டத்தில் பள்ளர் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், பறையர் கட்சி தலைவர் திருமாவும் வருத்தப்படுகிறார். தாழ்த்தப்பட்டோரில் இந்த இரு சாதியினரும் பெரும்பான்மையாக உள்ளதால், அவர்களுக்கு ஒத்து ஊதினால், பள்ளர் பறையர் ஓட்டை வேட்டையாட இடையில் சீமான் புகுந்து தாளம் போடுகிறார்.


T.sthivinayagam
அக் 21, 2024 21:09

சீமான் சார் பேச்சை மதிக்கும் அளவுக்கு தமிழக பாஜக உள்ளதே சீமான் சாரின் வெற்றி


kulandai kannan
அக் 21, 2024 14:11

இவர்கள் உளறல்களையெல்லாம் செய்தியாக்கும் மீடியாக்களும், உன் குழாயினரும் (அதாங்க, You tubers) இருக்கும்வரை கிறுக்குத்தனத்திற்கு பஞ்சமில்லை.


வைகுண்டேஸ்வரன்
அக் 21, 2024 13:55

திருமா.. ஆட்றா ராமா.. ஆட்றா ராமா.. நான் தான் பிஜேபிகாரன்.. திருமா அட்றா பல்டி. சீமான் வீட்டுக்கு எப்படி போகணும்... நடந்து காட்டு...


T.sthivinayagam
அக் 21, 2024 13:47

பாஜக கட்சியில் எல்.முருகன் சார் மிக சிறப்பான பிரதமர் வேட்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் ஆதரவு அளித்து பேசவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்


Vijay D Ratnam
அக் 21, 2024 13:46

முதல்வர் பதவி அவ்ளோ இளக்காரமா போய்டிச்சி.. ஜாதி கட்சி நடத்துற திருமாவளவன்லாம் முதல்வர் ஆவதென்றால் வேல்முருகன், டிடிவி.தினகரன், ஜவஹருல்லா, அண்ணாமலை, கமல்ஹாசன், சீமான், விஜய் கூட சி.எம் ஆவலாம்.


karutthu kandhasamy
அக் 21, 2024 16:32

ஏன் விஜய் D ரத்னம் கூட முதல்வர் ஆகலாமே


kulandai kannan
அக் 21, 2024 13:44

பட்டியலின உள் ஒதுக்கீட்டை எதிர்க்கும் சீமான், வன்னியருக்கு 10.5 சத உள் ஒதுக்கீட்டை ஆதரிக்கிறாரா இல்லையா? காற்றடிக்கும் திசையில் பேசுவது சீமானின் வழக்கம்.


Murthy
அக் 21, 2024 12:41

திருமாவளவனை என்றும் விட்டுக்கொடுக்காமல் பேசுபவர் சீமான்......திருமாவை விமர்சிக்க வேண்டாம் என்றுகூட சொல்லியுள்ளார் சீமான் .


சிவா அரவங்காடு நீலகிரி
அக் 21, 2024 11:14

முருகன் இவர்களை போல கழுத்து நரம்புகள் புடைக்க கூச்சலிடுவதில்லை ..


முக்கிய வீடியோ