உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் சர்ச்சை: அமைச்சர்கள் அமைதியாக கடந்து செல்வதா?

திருப்பரங்குன்றம் சர்ச்சை: அமைச்சர்கள் அமைதியாக கடந்து செல்வதா?

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த, ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி ஆதரவாளர்கள் பிரியாணி சாப்பிட்டதற்கு, ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அதன் விபரம்:

மத்திய அமைச்சர் முருகன்:

ஒரு பிரிவினைவாதியைப் போல் நவாஸ் கனி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ரகசியப் பிரமாணம் எடுத்துக்கொண்ட எம்.பி., பதற்றமான பகுதியில் அதை அதிகப்படுத்துவது போல செயல்படுவதாகவே கொள்ள வேண்டும். கந்தனின் மலையை காக்க ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

பாரத் இந்து முன்னணி மாநிலத் தலைவர் பிரபு:

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில், ஹிந்து கோவில்களின் துாண்கள் உள்ளன. ஹிந்து கோவிலைத்தான் தர்காவாக மாற்றி உள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது.திருப்பரங்குன்றம் மலை மீது, பிரியாணி உண்ணுவது எந்த வகையில் நியாயம்? மலை மீது பிரியாணி உண்ண, ஆடு மாடுகளை வெட்ட, தன் மதத்தை துாக்கிப் பிடிக்க, முஸ்லிம் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள் முன்வந்துள்ளனர். அதேநேரம், இந்த கொடூரத்தைக் கண்டிக்க, ஹிந்து எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தமிழக அமைச்சர்கள் முன்வராதது ஏன்? சிறுபான்மையினர் ஓட்டுக்காக, பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளலாமா?

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார்:

தி.மு.க., ஆதரவில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி ஆதரவாளர்கள், திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பிட்டு, தேவையற்ற சர்ச்சைக்கு வித்திட்டுள்ளனர்.இறைவனை வணங்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணமாக இல்லை. பிரியாணி போன்ற அசைவ உணவுகளை சாப்பிட்டு, அதன் வழியே ஒரு மத பதற்றத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கின்றனர்.ஹிந்துக்களுக்கு ஆதரவாக, ஹிந்து கோவில் உரிமையை பாதுகாத்திட, அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், சேகர்பாபு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா போன்றோர் எந்த விதமான கருத்துகளும் சொல்லாமல், அமைதியாகக் கடந்து செல்வது, அவர்கள் ஹிந்து விரோதத் தன்மையை உறுதி செய்கிறது.சிறுபான்மை ஓட்டுகளுக்காக தாஜா செய்யும் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், திருப்பரங்குன்றம் விஷயத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பர் என்பதை, மக்கள் புரிந்து கொள்வர். ஹிந்துக்கள் ஓரணியில் திரண்டு, முருக பெருமானின் மலையை பாதுகாக்க செயல்படுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

1858க்கு முன் தர்கா இல்லை!

திருச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருச்சி மண்டல துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் பழனிமுத்து, இது தொடர்பாக அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழிகளை பலியிட்டு, மாமிச உணவு சமைத்து வழங்குவதாக, முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் கூறுவது, ஹிந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவாளர்கள், அங்கு அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளது, நியாயமற்ற செயல்; அதை கண்டிக்கிறோம். கடந்த 1858ம் ஆண்டுக்கு முன், திருப்பரங்குன்றம் மலை மீது தர்கா ஏதும் இல்லாத நிலையில், முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், எதேச்சதிகாரத்துடன் அமைக்கப்பட்ட தர்காவை, ஹிந்து சமய அறநிலையத்துறை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

venkatasubramanian
ஜன 25, 2025 23:06

இரண்டு முக்ய மந்திரிகள் இருக்கும் ஊர். ஒன்று அதிகம் படித்த அரைகுறை. இன்னொன்று அரைகுறை வேக்காடு. இதற்கும் மேலாக ஒரு எம்.பி.வேறு. கருமம் கருமம்.


Ramesh
ஜன 25, 2025 01:12

நான் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன் அனால் ஒன்று சத்தியம் நம்மாட்கள் மாதிரி ஒரு கேவலமானவர்களை நான் எங்கும் பார்த்தது இல்லை. நாம மோசமானவர்கள்னு நினைக்கும் ஆப்பிரிக்க நாட்டினரே நம்மை விட ஒழுக்கத்திழும் தன்மானத்திலும் சிறந்து விளங்குகிறான். இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள தமிழனுக்கும் இப்போது உள்ள தமிழனுக்கும் நிறைய வித்தியாசம். இப்போதுள்ள தமிழனை காணும் பொது உண்மையிலேய நாம் தமிழர்கள் தான என்ற சந்தேகம் வருகிறது. பண்டைய தமிழனுக்கும் இப்போதுள்ள தமிழனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது காரணம் இப்போதுள்ள தமிழனுக்கு சுய ஒழுக்கம் கிடையாது, சுய கட்டுப்பாடு கிடையாது, அற நெறி கிடையாது, வாக்கு சுத்தம் கிடையாது, மொழி மீது பற்று கிடையாது, இனத்தின் மீ து பற்று கிடையாது, வீரம் கிடையாது, ஒற்றுமை கிடையாது, கடவுள் பக்தி கிடையாது - கடவுளை பழிப்பதும் கடவுளுக்கு எதிராக பேசுவதும் அறிவாளித்தனம்னு நினைக்கும் அறிவீனம், உழைக்கும் எண்ணம் & திறன் கிடையாது, உழைத்து உண்ட தமிழன் இன்று இலவசத்திற்காக நாயாக அலைவது, போதைக்கு அடிமையாகி கிடப்பது இப்படி ஏகப்பட்டது சொல்லி கொண்டே போகலாம். கடவுளே நேரில் வந்தாலும் நாம் திருந்த மாட்டோம். நாம திருந்த வேண்டும் என்று நினைக்கும் காலத்தில் எல்லாம் கை மீறி போய் இருக்கும்.


ko ra
ஜன 24, 2025 21:20

சேச்சே அது புளி சாதம். அரசியல் அமைப்பு பிரதி எரிக்க வில்லை. எரித்தது காதல் கடிதம். பொய் என்று நிரூபிக்க முடியுமா? நாங்க வீரர் கள். அஞ்ச மாட்டோம். சரித்திரம் மீண்டும் வருகிறது.


Balaji Radhakrishnan
ஜன 24, 2025 16:11

இரு திராவிட போக்கி ரிகள் தனித்து விட வேண்டும். மற்ற தமிழக இந்து மக்கள் ஒன்றாக சேர்ந்து நம் பலத்தை காட்ட வேண்டும்.


raju
ஜன 24, 2025 16:00

ஸ்டாலின் பிஜேபி யை வளர்க்கிறார்.. இனி மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தி மு க காலி


சண்முகம்
ஜன 24, 2025 15:12

இங்கே பொங்குபவர்கள் தெருவில் இறங்கி அரசுக்கு எதிராக பொங்குவார்களா?


ராமகிருஷ்ணன்
ஜன 24, 2025 14:29

முருகன் செவ்வாய் பகவானின் அம்சம், செவ்வாய் நம்ம உடலில் இரத்தம் சம்மந்தமானது. எனவே திருப்பரங்குன்றம் மலையை அவமதித்தவர்களுக்கு இரத்தபேதி ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். இந்துக்களுக்கு சொரணை இல்லாவிட்டாலும் முருகன் தண்டனை தருவார். முருகபக்தர்கள் இறைவனை வேண்டுங்கள்.


Suresh Sivakumar
ஜன 24, 2025 13:12

Politicians are thugs.democracy is bad as we have illiterate, uncouth pigs ruling.


திகழ்ஓவியன்
ஜன 24, 2025 12:44

அப்படி எனில் அண்ணாமலை ஏன் சர்ச் க்கு சென்று வோட்டு கேட்டார்


vivek
ஜன 24, 2025 16:55

என்னா சர்ச்சில் திருடர்கள் இல்லை


திகழ்ஓவியன்
ஜன 24, 2025 12:26

வள்ளலார் நெற்றியில் திருநீறு பூசியிருந்தார் என்று கூறும் வானதி அவர்கள், வள்ளலாரின் கீழ்கண்ட பாடல்களை படிக்க வேண்டுகிறேன். நால்வருணம், ஆசிரமம், ஆசாரம் முதலா நவின்ற கலைச்சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே, மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை நீ விழித்துப்பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே - பெருநெறி பிடித்தொழுக வேண்டும்/ மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் / சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே, சாத்திர சந்தடிகளிலே, கோத்திரச்சண்டையிலே, ஆதியிலே அபிமானித்தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகல்லவே.


Suppan
ஜன 24, 2025 16:12

திகழு வள்ளலார் விபூதி பூசியபடி உள்ள புகைப்படங்களே இதற்கு சாட்சி. 1800 களிலேயே இந்தியாவில் புகைப்படங்கள் வந்துவிட்டன. வள்ளலார் ஜோதியில் ஐக்கியமானது 1874. திருட்டு திராவிடக்கழிசடைகள் கோயபெல்ஸ் வழியில் இதை மாற்ற முயற்சிக்கின்றனர் .


முக்கிய வீடியோ