உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளைக்கு (டிசம்பர் 16) ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தது.மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிகுமார் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tfe50nat&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்' என்றார். நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு இன்று மீண்டும் 2வது நாளாக ஐகோர்ட் மதுரைக்கிளை இரு நீதிபதிகள் அமர்வு முன் நடந்து வருகிறது.

கோவில் தரப்பு வாதம்

அப்போது கோவில் தரப்பில், ''இது கார்த்திகை தீபத்தூண் அல்ல. சமணர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட தூண். இரவில் அதில் விளக்கேற்றி வெளிச்சத்தில் விவாதிப்பார்கள். இது போன்ற தூண் அமைப்பு மதுரை மாவட்டத்தில் சில மலைகளில் உள்ளன'' என முன்வைக்கப்பட்டது.

தர்கா தரப்பு

''தனி நீதிபதி தங்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை. தர்கா நிர்வாகம் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளதாக தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டது ஏற்புடையதல்ல'' என என தர்கா தரப்பில் வாதிட்டப்பட்டது. இன்று தர்ஹா தரப்பு, தர்ஹா ஆதரவு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர். நாளைக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Rajendra Kumar
டிச 16, 2025 07:09

கலாசார சொரணையில்லாத இந்துக்கள் பெருமளவு இப்படியே சொரணை இல்லாமல் இருந்தால், எதிர்காலத்தில் சிக்கந்தர் மலையாகவும் மாறலாம். அனைவரையும் சமமாக மதிக்கும் நமது இந்திய கலாசாரத்தை போற்றி, பாரம்பரியத்தை காக்க பாடுபடும் நமது இயக்கங்களுடன் இணைந்து பெருமளவு இந்துக்கள் விழிப்புணர்வு அடைவது நல்ல விஷயம். இதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த திமுக ஆட்சிக்கு நன்றி.


Mennon Kasirajam
டிச 15, 2025 23:06

முருகனுக்கு இரண்டு அவதாரங்கள் எடுத்து வள்ளி என்ற குறத்தியையும் தெய்வானை என்ற தேவகுலப் பெண்ணை மணம்புரிந்து என் படைப்புகள் அனைத்தும் சமம் என்கிறார் முருகப்பெருமான்.


ஆரூர் ரங்
டிச 15, 2025 22:13

விளக்கேற்றினால் விட்டில் போன்ற பூச்சிகள் அதில் மாட்டிக் கொண்டு இறந்து விடும் என்பதால் அஹிம்சையை கடைபிடிக்கும் சமணர்கள் விளக்குத்தூண் அமைத்திருக்க வாய்ப்பில்லை. ஆமாம். நேற்று வரை அதனை வெறும் கிரானைட் கல் எனக் கூறிய கனி போன்ற திமுக வினர் இப்பொழுது மாற்றிப் பேசுவது ஏன்?. பக்தர்களின் நிதியில் பக்திக்கு எதிராக வழக்குப் போட்ட திமுக முழு வழக்குச் செலவையும் ஏற்க வேண்டும்.


Sudha
டிச 15, 2025 21:11

நாளை பகுத்தறிவு ஆளும்கட்சி சார்பில் கார்த்திகை மாதம் முடிந்து விட்டது ஆகவே கேஸ் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வாதிடுவார்கள். வழக்கு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


S S Chari
டிச 15, 2025 18:28

கோவிலுக்குப் பின்தான் தர்கா வந்தது. கோவில் நிர்வாகம் விரும்பினால் மட்டும் விளக்கு ஏற்றுவார்களாம். பக்தர் கோரும் பூஜைகள், இறைவன் பாதத்தில் சமர்ப்பிக்கும் நகை, மணப்பத்திரிக்கை, ஜாதகம், பலவிதமான சமர்ப்பிக்கும் ஏற்கும் கோவில் நிர்வாகம் இந்த விளக்கேற்றும் வேண்டுதலை ஏற்க வேண்டும். பக்தர்கள் பணம் மட்டும் வேண்டும். கோரிக்கையை ஏற்றக்கூடாது. என்ன அநீதி.இவர்கள் எந்த முடிவை சந்திப்பார்கள்? வேண்டாதவர் கை பட்டால் குற்றம் கால் பட்டாலும் குற்றம்.


Siva Balan
டிச 15, 2025 17:54

அது நில அளவைக்கல்லுனு சொன்ன திமுக காரனுங்க பெயர் தெரியாதவர்களா.....


V Venkatachalam, Chennai-87
டிச 15, 2025 19:20

மடத்தனமான கேள்வி. கேள்வி கேக்குறவறன் பேரு உண்மையான பேரா? உண்மையான பேராயிருந்தால் இந்த மாதிரி கேக்கவே மாட்டான்கள். உணவுப்பொருள்களில் கலப்படம். அது தெரியும். பெயர்களில் கூட கலப்படம் வந்து விட்டது. திருட்டு தீயமுக காரனுக்கு, பெயர் தெரிந்தவன்கள்தான். வசமா மாட்டிக்கிட்டப்புறம் எதையாவது உளறி தப்பிக்க பாக்குறான்கள். அதுக்கு முட்டு குடுக்குற வன் கேவலமான வன்.


Rajamani
டிச 15, 2025 16:45

பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள முருகன் கோவிலுக்குத்தான் திருப்பரங்குன்றம் சொந்தம். பின்னல் வந்த அக்கிரமக்காரர்களுக்கு அது சொந்தம் ஆகாது. ஹிந்துக்களின் பெரிய மனது காரணமாக தர்காவிற்கு அது இருக்கும் இடத்தை விட்டு கொடுத்து விட்டார்கள். நீதிமன்றம் தர்காவை மேலும் விரிவாக்க கூடாது என்று கூறியுள்ளது.


Rajamani
டிச 15, 2025 16:34

பெயர் அழகாக இருக்கிறது. மனம் தூய்மையாக இல்லையே. குன்று தோறாடும் முருகனுக்கு எல்லா குன்று களிலும் தீபம் ஏற்றலாம். ஒரு மதத்தின் தெய்வத்தை குறைத்து பேசுவது உன் சிறுமையை காட்டுகிறது. எல்லா மதமும் ஒரு கடவுளைத்தான் அடிப்படையாக கொண்டுள்ளது. மற்ற மதத்தினை மதிக்காதவனை அவன் தெய்வம் கூட மன்னிக்காது./ஏற்றுக்கொள்ளாது. உனக்கு புரியவில்லை என்றால் அமைதியாய் இரு.உன் அறிவின்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டாதே.


Kasimani Baskaran
டிச 15, 2025 16:25

சமணர்கள் உயிர்களை கொல்லமாட்டார்கள் - புழு பூச்சிகளைக்கூட மயில் தோகையால் தள்ளிவிட்டுதான் நடப்பார்கள். அப்பேர்ப்பட்ட சமணர்கள் விளக்கு வெளிச்சத்தில் பூச்சிகளை கொன்று அதில் இன்புறுவர் என்று சொல்வது காதில் மட்டுமல்ல உடம்பு முழுவதும் பூ சுற்றும் செயல்.


திகழ்ஓவியன்
டிச 15, 2025 15:49

முருகனுக்கு இரு மனைவி அதற்ககாக எல்லோருக்கும் இரு மனைவி , குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் , அப்பா எல்லா கு ன்றுகளிலும் விளக்கு ஏற்றணுமா வாதம்


Anand
டிச 15, 2025 16:33

கழிசடை.


Nachiar
டிச 15, 2025 17:41

முருகப் பெருமான் குழந்தைகளை திருமணம் செய்தவரும் அல்ல பல முறை விவாகரத்து புரிந்தவரும் அல்ல. பெண்களை தெய்வமாகப் பார்க்கும் இந்துக்கள் பாரத நிலத்திற்கு முழு முதல் உரிமை பெற்ற்றவர்கள். அவர்கள் வெளியில் இருந்து வந்து மூர்க்கத்தனமாக சுதேசிகளை கொன்று குவித்து மதம் மாற்றி பின் விரட்டி அடக்கப் பட்டவர்கள் அல்ல. ஜெய் ஹிந்


Kasimani Baskaran
டிச 15, 2025 18:31

ஓவரான திராவிட சிந்தனை மனிதனை குப்புறத்தள்ளி விடும்.


பேசும் தமிழன்
டிச 15, 2025 21:11

உங்களுக்கு என்ன... உங்களுக்கு 4.... சுவீட் எடு கொண்டாடு..... யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.... அதனால் தான் பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று கூவி கொண்டு இருக்கிறீர்கள்.


Sudha
டிச 15, 2025 21:14

தமிழ்நாடு போற்றுபவருக்கு நாலே நாலு மனைவிகள், ஆகவே ஓவியரே.........


புதிய வீடியோ