உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பனந்தாள் காசிமடம் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தி அடைந்தார்

திருப்பனந்தாள் காசிமடம் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தி அடைந்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் காசிமடம் என்னும் பெயரில் சைவம் தமிழ், கலை, இலக்கிய சமூக, சமுதாயப் பணிகளை ஆற்றிவரும், அறம் வளர்க்கும் அருள் நிலையம் உள்ளது. இம்மடத்தின் 21 வது அதிபராக 'கயிலை மாமுனிவர்', ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள்,95, இருந்து வந்தார்.இவர் 1958 முதல் துறவேற்று, சிறிது காலம் ஸ்ரீகாசிமடத்தின் இளவரசாகப் பணிபுரிந்து, கடந்த 1972ல் ஸ்ரீகாசிமடத்தின் அதிபரானார். சைவம், தமிழ் இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமுறைகளை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தார். 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையும், பெருமையும் மிக்க காசிமடம் வரலாற்றில், மடத்தினை பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய முக்கிய காரணமாக இருந்தார். மடத்தின் வளர்ச்சி கண்டு பொற்காலம் என பலரும் பாராட்டும் வகையில் மேம்பாடு அடைய செய்தார். இந்நிலையில், ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமிகள், கடந்த ஒரு மாதமாக வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்ற நிலையில், திருப்பனந்தாள் மடத்தில் இன்று(19ம் தேதி) இரவு 8:00 மணிக்கு மகா சமாதி அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

முதல் தமிழன்
ஆக 20, 2025 09:16

உயிர் பிரிந்து வெறும் சடலம். முக்தி அடைந்தார் என்று எப்படி உறுதியாக கூற முடியும்? முக்தி என்பது கடவுள் இறுதி தீர்ப்பிற்கு பிறகு முடிவு செய்வது என்று நான் நம்புகிறேன். முக்தி அடைவார் என்று நம்பினால் அது உங்கள் இஷ்டம். ஆனால் கடவுளை நேரடியாக தரிசிக்காமல் முக்தி என்பது இலை. ஆகவே முதலில் உன்னுள் இருக்கும் கோடி சூர்ய பிரகாசமான கடவுளை தரிசிக்க முயற்சி செய்யுங்கள். பிறகு பார்க்கலாம். இறைவன் அவர் படைத்த உலகிற்கு யுகம் தோறும் வருகிறார், ஆனால் நாம் அவரை கண்டுக்காமல் குருடராய் இருந்து நாம் படைத்த சிலைகளை மட்டும் வணங்கி கழிக்கிறோம். சிவ வாக்கியர் மிக தெளிவாக கூறுகிறார்.


Subramanian
ஆக 20, 2025 06:43

ஆழந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


M Ramachandran
ஆக 20, 2025 00:46

சவாமிகளுடன் குருசாமியுடன் நான் மற்றும் எங்கல் குழுவுடன் பல முறை சென்று பார்த்து வந்திருக்கிறோம். சபரிமலை விரதம் இருந்து செல்லும் போது மடத்தில் இரவு தங்கி அவரின் ஆசி பெற்று மலைக்கு சென்று வந்திருக்கிறோம். ஒரு முறைய்ய பாத யாத்திரையாக மலைக்கு செல்லும் வழியில் திருப்பானதாள் மடத்தில் தங்கி காலையில் 5:00 மணிக்கு அவர் பூஜைய்ய செய்வதைய்ய தரிசித்து காலை உணவுண்டு புறப்பட் டோம் . அந்த முறைய்ய தஞ்சைய்ய மாவட்டத்தில் புயல் மழை. எங்கள் பயணமும் அங்கங்கு தடைய பட்டது. எஙகள் பாதயாத்திரையை கல்பாக்கம் நகரியத்திலிருந்து புறப்பட்டோம். மேல் மருவத்தூர் கோயிலில் இரவு தாங்கி திண்டிவனம் விக்கிரவாண்டி சேத்தியா தோப்பு, தீ பாய்ந்த நாச்சியார் கோயிலில் தங்கி இரவு தங்கி கலை 4:00 மணிக்கு புறப்பட்டோம். அப்போது தான் மழை ஆரம்ப மானது. வழியில் சிறிய காபி கடையில் எங்களில் ஒரு சுவாமி சமையல் செய்ய கூடியவர். அவர் கடைய்யக்காரை எழுப்பி எங்க சாமியெ காபியை போட்டு எல்ல சாமிகளுக்கு போட்டு கொடுத்து பணமும் எல்லோரிடமும் பெற்று கொடுத்து விட்டு போவோம். காலையில் சிறிய கிராமத்து இட்லிக்கடை நடத்தும் வயதான அம்மாளிடமும் எங்க சாமியென இட்டிலி தயாரா செய்து எல்லோருக்கும் வழங் கி பணத்தி வசூலித்து அந்த அம்மாளிடம் கொடுத்து விட்டு வந்தோம். முதலில் அந்த அம்மாள் மலைத்து நின்றார். நாங்க 25 சாமிகள் எப்படி எல்லோருக்கும் தயார் செய்து கொடுக்க முடியும் என்று. நாங்களே இட்லியும் தயார் செய்து சாப்பிட்டு விட்டு பணமும் கொடுத்து வந்ததில் அந்த வயதான மூதாட்டிக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. சாப்பிட்டு விட்டு பயணம் கொண்டிருந்தபோது மழை ஆரம்பமாகி விடாமல் பெய்ய ஆரம்பித்து விட்டது. முன் யோசனையாக ஒரு ப்லாஸ்டிக் கவர் ஒவ்வொருத்தருக்கும் தட்டார் செய்து எடுத்து சென்றோம். அதைய்ய இருமுடி நனையாமல் போட்டு கொண்டு அடை மழையில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் பயண திட்டத்தின் படி மதியம் உணவுக்கு திருப்பானதால் செல்ல வேண்டியிருந்தது. காற்று மழை காரணமாக பயணம் நின்று நின்று செல்ல வேண்டியிருந்தத. எஙகள் உதவிக்கு தண்ணீர் மற்றும் அவசர உதவிக்கு இருவர் சேர்ந்து ஒரு வாடகை கார் கூட வர ஏர்பாடு செய்திருந்தோம். அந்த காரை திருப்பானதாலுக்கு அனுப்பி எங்கள் மதிய உணவை எடுத்துவர அனுப்பியிருந்தோம் . மடத்திலிருந்து உணவைய்ய எடுத்து வந்தார்கள். நாங்கள் மதியம் 3:00 மணிக்கு ஜெயம்கொண்டாம் கூட்டு ரோடு அருகில் ஒரு பிள்ளையார் கோயிலில் அமர்ந்து உணவு உட்கொண்டு 4:00 மணி அதற்கு மேல் பயணத்தை தொடர்ந்து திருப்பானதால் அடையும் போனது மணி இரவு 8:00 மணிக்கு மேல். பிறகு எல்லோரும் குளித்து விட்டு இரு உணவிற்க்குமுன் சாமிகளின் தரிசனத்திற்கு சென்றோம். அப்போது நாங்கள் ஈரத்துணியுடன் அவரின் எதிரில் நிற்க போய் துணியை மாற்றி கொண்டு வரும் படி கூறினார். எஙகள் குருசாமி அவரிடம் வரும் வழியில் உடையெல்லாம் நனைந்து விட்டது. முதல் நாள் போட்ட துணியும் காலையில் துவைத்து ஈரமாக இருக்கு என்று கூறினார். உடனேயே எஜமான் சாமி அப்போது காரியஸ்தரை கூப்பிட்டு கடையை திறக்க சொல்லி எல்ல சாமிகளுக்கு கலர் வேட்டி துண்டு வாங்கி வர பணித்தார் மணி 9:40 இரவு சிறிய ஊர்ரானதால் 9:00 மணிக்கு மூடி விடுவார்கள். வேஷ்டி களும் தூண்டும் வாஙகி வந்தவுடன் மாற்றி கொண்டு வாருங்க்கள் என்று கூறினார். அடுத்த நாள் வியாழ கிழமை குரு பூஜையை முடித்து மௌன விரதமிருப்பார் பேச மாட்டார். அதனால் நாங்க இரவு பேசி விட்டு சாப்பிட எண்ணியிருந்தோம். அவர் எனக பயண திட்டத்தை கேட்டு திருருச்சியில் தங்க மலிய்ய கோட்டை மடத்தில் யேர்பாட்ட செய்ய சொல்லி காரியஸ்தரிடம் கூறினார். அவர் தங்கி மழை விட்டதும் செல்லலாம் என்றார். ஆனால் எங்கல் பயண திட்டத்தை மாற்ற இயலாது. அதிகாலையில் நாங்க பூஜையில் கலந்து கொண்டு விட்டு காலை உணவு உண்டுவிட்டு 7:30 மணிக்கு புறப்பட்டோம் ஸ்வாமிமலை வழியாக கபிஸ்தலத்தில் மதிய உணவு கருப்பையா மூப்பனார் அவர்கள் வீட்டில். விருதோம்பாலுக்கு மூப்பனார் அவர்கள். மூப்பனார் மூதைத்யர்கள் பற்றி. பாலைய்யா காலத்தில் ஒரு கதையும் உண்டு ஒரு சமயம் இங்கிருந்து ஒரு குடும்பம் காசிக்கு சென்ற தாகவும் அன்னாரின் தாயார் 80 வயதிற்கு மேல் விருந்தோமப்பாலுக்கு உதாரணம் ஸ்வாமிகள் ஒவ்வொருத்தரும் பெரிய தலை வாழை போட்டு 32 வகைய்ய என்பார்களெ அது போல் நீட்ட இலையில் கருப்பயமூப்பனார் அவர்களின் தாயாரே எல்லோருக்கும் பரிமாறி வயிறார உண்கிறார்களா என்று பார்த்து தானே பறி மாறினார். அன்று ஒரு இரவு திருவையாறு கோயில் அருகில் தங்கியிருந்தோம். வழியில் பல சோதனை கள் மணப்பாறையில் தங்கி புறப்படும் போது இரவு சென்னையில் MGR மறைந்தார். பயணம் தடைய்ய போனால் தெரிந்தது. மனப்பாறை அன்பார் காலையில் புறப்படுங்கள். கார் மண் செல்லட்டும் அதில் கருப்பு கோடி கட்டி விடுங்கள். வழியில் மிக கவனமாகவும் பணிவுடனும் பேசுங்கள் உண்டியல் வைத்திருப்பார்கள் அதில் பணம் போட்டு விட்டு செல்லூங்கள் என்றார். ஒரு வழியாக திண்டுக்கல் அடைந்து அங்கிருந்து வத்தலகுண்டு தேனி கம்பம் வழியாக கூடலூர் சுருளி மதியம் உணவு அங்கு காவல்துறையினர் கேம்ப். காவல் துறயினர் இங்கு தங்காதீர்கள் யானைகள் நடமாட்டம் அதிக மாக இருக்கு என்னேறமும் மேலிருந்து இரங்கிவரலாம் அங்கு இருந்து லோயர் காம்ப சென்றடைய்ந்தோம். பிறகு குமுளி சென்றடையய்ந்து இரவு ஒரு சிறிய கோயில் திறந்த வெளியில் தங்கி காலை புறப்பட்டோம். இவ்வளவு தூரம் நடந்த எஙகளுக்கு ஏரி மேலியிலிருந்து பெரு வழி பதை மிக எளிதாக தெரிந்தது. ஐயனென சரணம் ஐய்யப்பா பண்பாளர் திருப்பானதாள் அன்னார் காசிமடம் ஸ்ரீ ல ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் இறைவன் சிவனார் அடி சேர்ந்து விட்டார். அவர் நற்கதி அடைய இறைஞ்சும் அவர் நினைவாக என்றும்.


Premanathan S
ஆக 19, 2025 22:35

ஓம் நமசிவாய:


theruvasagan
ஆக 19, 2025 21:53

சுவாமிகள் இறைவனுடன் ஒன்றி அவன் திருவடிகளுக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். ஓம் சாந்தி.


Ramesh Sargam
ஆக 19, 2025 21:53

ஸ்வாமிகளின் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி. ஓம் நம சிவாய.


முக்கிய வீடியோ