உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பக்தி மழையில் தொடங்கிய திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா!

பக்தி மழையில் தொடங்கிய திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா!

தஞ்சாவூர்; திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஆயிரக்கணக்கானோர் இசையஞ்சலி செலுத்தினர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள், பகுலபஞ்சமி தினத்தில் முக்தி அடைந்தார். அங்கு ஆண்டுதோறும், பகுல பஞ்சமி தினத்தில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிக்கு ஆராதனை விழா ஐந்து நாட்கள் நடைபெறும். அதன்படி இந்தாண்டு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா, கடந்த ஜன.14ம் தேதி விழா துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (18ம் தேதி) அதிகாலை, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டாகி, மேளதாளங்கள் முழங்க, வீதி உலாவாக அவரின் சன்னதிக்கு வந்தனர். பிறகு, நாதஸ்வரம் நிகழ்ச்சியும், பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது. பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, அருண் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த கர்நாடக சங்கீத கலைஞர்கள் என ஆயிரக்கணக்கனோர், நாட்டை ராகத்தில் அமைந்த பாடலில் துவங்கி, கௌளை ராகம், ஆரபி ராகம், வராளி ராகம், இறுதியாக ஸ்ரீராகம் என பஞ்ச ரகங்களில் ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீசத்குரு தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து பல்வேறு இசைக்கலைஞர்களின் ஹரிகதை, பாட்டு, புல்லாங்குழல், நாகசுரம் நகிழ்ச்சிகளும், இரவு 10:40 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தியாகு
ஜன 18, 2025 12:26

விழா எவ்வளவு எளிமையாக இருக்கிறது. இதுபோல கட்டுமரத்திற்கு ஆண்டுதோறும் விழா எடுத்தால் கட்டுமர போட்டோ, சர்வாதிகாரி போட்டோ, அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணா போட்டோ, இளம் புயல் இன்பா போட்டோ வைத்து குடியும் கும்மாளமுமாக அரைகுறை ஆடையுடன் ரெகார்ட் டான்ஸ் வைத்து கொண்டாடியிருப்பார்கள். இதுதான் திராவிட மாடலுக்கும் செயலால் உயர்த்தோருக்கும் இருக்கும் வித்தியாசம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை