மேலும் செய்திகள்
ஷாலிமர் - சில்சார் ரயில் இயக்கம் திடீர் மாற்றம்
14-Feb-2025
அவனியாபுரம் : பெங்களூருவில் இருந்து இண்டிகோ ஏர் பஸ் விமானம் நேற்று 172 பயணிகளுடன் திருவனந்தபுரம் சென்றது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் எரியாததால் அந்த விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது.இந்த விமானத்தில் மேற்குவங்க கவர்னர் ஆனந்த போஸ் பயணம் செய்தார். அதேபோல மும்பையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விமானமும் இத்தகவலை அறிந்து மதுரையில் தரையிறக்கப்பட்டது.இரு விமானங்களில் இருந்த பயணிகள் மதுரை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஓடுபாதை மின்விளக்குகள் சரி செய்யப்பட்டபின்பு பெங்களூரு விமானம் 40 நிமிடங்கள் தாமதமாகவும், மும்பை விமானம் 30 நிமிடங்கள் தாமதமாகவும் பயணிகளுடன் சென்றன.
14-Feb-2025