உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு எடுத்துக்காட்டு இந்த சம்பவம் தான்: அன்புமணி குற்றச்சாட்டு

சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு எடுத்துக்காட்டு இந்த சம்பவம் தான்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: போதை மருந்து வணிகத்தை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் டி.ஜி.பி., அலுவலகம் அருகில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பே கிடையாதா என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த குத்துச்சண்டை வீரர் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு மிக அருகில் நடந்துள்ள இந்த படுகொலை தான் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான தனுஷ் குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார். அதே பகுதியில் மோகன் என்பவர் கஞ்சா, போதை ஊசிகள், போதை மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்து வந்திருக்கிறார். அதற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அவரை மோகனும் இன்னொருவரும் சேர்ந்து படுகொலை செய்திருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்கு காரணம் காவல்துறையின் அலட்சியம் தான்.கொலை நடந்த ஐஸ் அவுஸ் பகுதி காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு மிக அருகில் உள்ளது. அந்தப் பகுதியிலேயே நீண்ட காலமாக கஞ்சா விற்பனை நடந்து வந்திருக்கிறது. காவல்துறை உண்மையாகவே செயல்திறன் மிக்கதாக இருந்திருந்தால் கஞ்சா விற்பனையை தடுத்தி நிறுத்தியிருப்பதுடன், அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும். அதை செய்திருந்தால் தனுஷ் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார். தனுஷுக்கும், மோகனுக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வந்த நிலையில், தனுஷை மோகன் கும்பல் படுகொலை செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை உளவுத்துறை மூலம் தமிழக அரசு கண்டுபிடித்து தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதில் தமிழக அரசு படுதோல்வியடைந்து விட்டது.இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

AMLA ASOKAN
ஜன 31, 2025 10:22

இருவருமே பாமாகா தொண்டர்கள் என்றால் அன்புமணி கப்சிப் ஆகியிருப்பார். தனி மனித பகைமை, அடிதடிகள், கொலைகள் நடைபெறுவதை யாரலும் கணிக்க முடியாது. தமிழகம் முழுவதும் 50 கோடி CCTV கேமராக்கள் பொறுத்தப் பட வேண்டும் . மக்கள் அனைவரையும் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் . சந்தேகப் பட்டால் வீட்டுக்குள் புகுந்து ரெய்டு நடத்த வேண்டும் .


Barakat Ali
ஜன 31, 2025 09:16

கவுரவமாக, நேர்மையாக, மானத்துடன் வாழ விரும்புபவர்களுக்கு தமிழகம் ஏற்ற இடம் இல்லையோ ????


Kasimani Baskaran
ஜன 31, 2025 07:57

மாநிலமே போதையில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். வழக்கமாக திராவிட போதையில் இருக்கும் உடன்பிறப்புக்கள் போதை நல்லது என்று கூட உருட்ட வாய்ப்பு இருக்கிறது. உபியையும் கூட இழுப்பார்கள்.


முக்கிய வீடியோ