உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதுதான் ஆன்மிக ஆட்சி: சேகர்பாபு

இதுதான் ஆன்மிக ஆட்சி: சேகர்பாபு

சென்னை:''சித்தர்கள், சான்றோர், ஆன்றோர்களுக்கு விழா எடுத்து சிறப்பு சேர்க்கின்ற ஆன்மிக ஆட்சி இப்போது நடக்கிறது,'' என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.சென்னை திருவான்மியூர், பாம்பன் குமரகுருதாசர் சுவாமி கோவிலில், மயூர வாகன சேவன விழாவின் நுாற்றாண்டு விழா நடக்கிறது.மறுபதிப்பு செய்யப்பட்ட, 'பாம்பன் சுவாமிகளின் சரித்திரம்' எனும் நுாலை வெளியிட்டதுடன், இசைப் பல்கலை, இசைக் கல்லுாரியைச் சேர்ந்த 108 மாணவ - மாணவியரின் சண்முக கவசம், குமாரஸ்தவம் பாராயணம் மற்றும் நாட்டிய நிகழ்ச்சியையும் சேகர்பாபு துவக்கி வைத்தார்.பின்னர் அவர் கூறியதாவது:மயூர வாகன சேவன விழா மூன்று நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாள் முழுதும் அன்னதானம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கமலமுனி சித்தர், சுந்தரானந்தர் சித்தர், பாம்பாட்டி சித்தர் போன்ற சித்தர்களுக்கு விழா எடுத்தோம். சேக்கிழார் விழா மூன்று நாட்கள் நடத்தினோம். வள்ளலாருக்கு முப்பெரும் விழா, திருநாவுக்கரசர், ஸ்ரீமத் நாதமுனிகள், ஆளவந்தார் ஆச்சாரியார் போன்றவர்களுக்கு விழா எடுக்கப்பட்டது. சித்தர்கள் சான்றோர், ஆன்றோர்களுக்கு விழா எடுத்து சிறப்பு சேர்க்கின்ற ஆன்மிக ஆட்சி இது.சபரிமலை அய்யப்பன் கோவிலில் தமிழக பக்தர்கள் அதிக நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் விரைவான தரிசனத்திற்காக, கேரள அரசு தலைமை செயலருக்கு அரசு கடிதம் எழுதியுள்ளது. தேவசம் போர்டு அமைச்சர், தலைவரிடமும் பேசியுள்ளேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.விழாவில், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய தேசிகர் சுவாமிகள், அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை