உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் வீட்டில் அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர் பின்னணி இதுதான்!

சீமான் வீட்டில் அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர் பின்னணி இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் புகுந்து இருவரை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசனில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சீமான் ஆஜராகாத காரணத்தினால், அவரது வீட்டு கதவில் போலீசார் சம்மனை இன்று (பிப்.,27) ஒட்டினர். அந்த சம்மனை, அங்கிருந்த காவலாளி கிழித்தார். இதனால், அங்கு போலீசாருக்கும், காவலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் தலைமையிலான போலீசார், அங்கு வந்து அமல்ராஜ் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.கதவை திறந்து கொண்டு இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தபோது, பாதுகாவலர் தடுத்தது, அவரை மடக்கி இழுத்து வெளியே கொண்டு வந்து ஜீப்பில் ஏற்றியது, சீமான் மனைவி கயல்விழி நேரடியாக வந்து மன்னிப்பு கேட்டது உள்ளிட்ட சம்பவங்களால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.இது குறித்த வீடியோ காட்சிகள் இன்று இணையத்தில் வைரலாக பரவின.இந்நிலையில், குறிப்பிட்ட அந்த இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிரவின் ராஜேஷின் தந்தை ராஜகுரு. இவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார். இவர், முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட போது உயிரிழந்தவர்களில் ஒருவர். அப்போது, பிரவின் ராஜேஷின் வயது 16. தந்தை மரணத்தை பார்த்ததும், நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் போலீஸ் வேலைக்கு வந்தார். இவரது தாயார், ராஜிவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது என சட்டப்போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Ramesh cable networks Chitra electrical
மார் 01, 2025 17:50

Good


Peterraj Jayakumar
மார் 01, 2025 13:24

Seeman not a leader hei is an prostituted man he fallow worst acter terrorist pseudo Tamil leader prabakaran he lost life a dog in srilanka how seeman tobe Tamil national leader he should arrest and punished


Tetra
மார் 01, 2025 12:10

இவர்‌ சேவை கருணாநிதி குடும்பத்துக்குத்தான்‌ போல தெரிகிறது


Balaji Sivasankaran
மார் 01, 2025 11:17

படித்து வேலைக்கு வந்தது போல் தெரியவில்லை.தந்தையின் இழப்பால் கருணை அடிப்படையில் வேலை கிடைத்திருக்கும் போல.இதில் சேவை எங்கிருந்து வந்தது.


Ethiraj
மார் 01, 2025 09:40

Police dept image getting damaged due to political interference and policemen taking sides without following legal norms


Krishnamurthy Venkatesan
பிப் 28, 2025 12:09

சம்மன் ஐ நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமும், registered தபால் மூலமாகவும், விரைவு தபால் மூலமாகவும் அனுப்பலாம். இவற்றின் மூலம் சம்மனை அளிக்க முடியாத பட்சத்தில் வீடு பூட்டு போட்டிருந்தாலோ அல்லது அந்த நபரின் whereabouts தெரியவில்லை என்றாலோ witness கையொப்பமுடன் கடைசியாக தெரிந்த முகவரியில் ஒட்டலாம். வருமான வரி துறையில் இப்படித்தான் பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். காவல்துறையும் இதை பின்பற்றலாம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 28, 2025 12:02

அப்பாவை கொன்றவர் விடுதலைக்கு உதவியவர் என்று கூறுகிறீர்கள். கடைசியாக வெளிவந்த ரஜினிகாந்த் சினிமாவில் கூட அப்பாவுக்கு எதிராக மகன் செயல்படுவார். இவர் கதை பார்த்து தான் ரஜினிகாந்த் சினிமாவை எடுத்திருப்பார்களோ. சினிமாவில் வரும் ரஜினிகாந்த் மகனும் இவரும் உருவ ஒற்றுமையில் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளது. சினிமாவால் சீரழியும் தமிழகம்.


Dharmavaan
பிப் 28, 2025 11:02

கேவலமாக இருக்கிறது ராஜிவ் கொலையாளிகளை விடுக்க உதவிய திருட்டு திமுகவின் போலீஸ் துறையில் வேலையா தகப்பனுக்கு செய்யும் துரோகம்


Anand
பிப் 28, 2025 10:51

அப்படியென்றால் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் போட்ட அரசின் மீதல்லவா கடுப்பாகி இருக்கவேண்டும்... அதற்கு நேர்மாறாக விசுவாசமாக இருப்பது ஏனோ?... தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக அல்லவா உள்ளது..


Balaji Sivasankaran
மார் 01, 2025 11:19

திமுக ஆட்சியில் கருணை அடிப்படையில் வேலை கிடைத்திருக்கும்.


Ray
பிப் 28, 2025 08:46

குற்றம் சாட்டப்பட்டவர் யாரென்று பார்த்து அதற்குத் தகுந்தாற்போல நடவடிக்கை பாய்வதுதான் இன்றைய நடைமுறை. அப்படியிருக்க போலீஸ் யாராயிருந்தால் என்ன? அதிகாரியின் பின்னணி என்னவாயிருந்தாலென்ன? இந்த செய்தியால் வாசகர்களுக்கு ஏதாவது பயன் உள்ளதா? ஆகா போலீஸ் விசாரணைக்கு வரமாட்டேன் என்று சொல்லும் இவரைத்தவிர இந்த நாட்டை அரசாளத் தகுந்தவர்கள் யாருளர்?


baala
பிப் 28, 2025 10:34

கொஞ்சம் பரபரப்பாக எழுத விடமாட்டர்களா சார்


visu
மார் 01, 2025 09:42

தகுதியால் வேலை பெற்றாரா இல்லை தந்தை பணியில் இறெந்ததால் கிடைத்த வேலையா என்பது கவனிக்க வேண்டியது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை