உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூய்மை இந்தியா திட்டம் என்றால் இதுதான்! குப்பை அகற்றிய பா.ஜ.,வினருக்கு மக்கள் பாராட்டு

தூய்மை இந்தியா திட்டம் என்றால் இதுதான்! குப்பை அகற்றிய பா.ஜ.,வினருக்கு மக்கள் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை;மோடி பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சியின் இறுதியில் மலர், பேப்பர் கழிவுகளை பா.ஜ., தொண்டர்களே அகற்றி, பிற அரசியல் கட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.கோவையில் நேற்று முன்தினம், பிரதமர் மோடி பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சி நடந்தது. சாய்பாபா காலனியில் துவங்கிய வாகன பேரணி, ஆர்.எஸ்.புரம் தலைமை போஸ்ட் ஆபீஸ் வரை, 2.5 கி.மீ., நடந்தது. பொதுமக்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மலர் துாவி மோடியை வரவேற்றனர். 'மீண்டும் மோடி ஆட்சி', போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, ஆரவாரம் செய்தனர். தொண்டர்களுக்கு தாகம் தீர்க்க, ஆங்காங்கே தண்ணீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி நிறைவில் பதாகைகள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவை ரோட்டில் கிடந்தன. இதை பா.ஜ., தொண்டர்கள் குழுக்களாக பிரிந்து பதாகைகள், தொப்பி, டம்ப்ளர், துாவப்பட்ட மலர் கழிவுகளை தனியே சேகரித்து, துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். இதை பார்த்த பொதுமக்கள், அவர்களை பாராட்டினர்.வழக்கமாக, அரசியல் கட்சிகளின் கூட்டம் என்றாலே, கூட்டம் முடிந்த பின் குப்பை கூளமாக காட்சியளிக்கும். அதை சுத்தம் செய்வதற்குள், மாநகராட்சி ஊழியர்களுக்கு போதும் போதுமென்றாகி விடும்.ஆனால், நாட்டுக்கே துாய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, துாய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும், கட்டுக்கோப்பான கட்சி என்ற வகையில், குப்பையை சுத்தம் செய்து, பிற அரசியல் கட்சிகளுக்கு, பா.ஜ., முன்னுதாரணமாக திகழ்கிறது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vijay
மார் 23, 2024 13:19

நல்லது செய்தால் சந்தோசம், நல்லது நடக்குது ஆனால், பொய்யை மட்டும் கூறி மக்களிடம் போட்டோ ஸூட் நடத்தும் உன் கட்டுமர வாரிசுக்கு, தன்னுடைய அடுத்த வாரிசு, தனது கூட்டாளிகளின் வாரிசுகளுடன் செய்யும் கொள்ளைகள், அதை மறைக்க நடத்திவரும் கபட நாடகங்களுக்கு மத்தியில் இதெல்லாம் ஜுஜுபி சொந்த மாநிலத்திலேயே சொன்னதை செய்ய வக்கில்லை எதிலும், அதிலும் ஏமாற்றுத்தனம் இதுல இந்தியா முழுக்க ரொவாய் கொடுக்கறோம், பெட்ரோல் விலையை குறைக்கறோம், முக்கியமா "நீட்"ஐ ரத்து செய்யறோம் என்று ஊரை ஏமாற்றுறாய்ங்க திராவிட "சொம்புகளுக்கு" கஷ்டகாலம்தான் ஓரமா போவியா

vijay
மார் 23, 2024 13:18

மேலும் செய்திகள்

முக்கிய வீடியோ