உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஜித்தை முதல்வர் விஜய் சந்தித்தது இதற்குத்தான்; சொல்கிறார் இபிஎஸ்

அஜித்தை முதல்வர் விஜய் சந்தித்தது இதற்குத்தான்; சொல்கிறார் இபிஎஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுகவின் 55வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் பேசியதாவது; அதிமுகவின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை போல், இந்த தவெக ஆட்சியில் 6 மாதங்களில் கொண்டு வரப்பட்டதா? பிரேக் இல்லாத வண்டி போல ஆட்சி சென்று கொண்டு இருக்கிறது. முதல்வர் அண்மையில் வெளிநாடு சென்றார், அவர் எதற்காக சென்றார் என உங்களுக்கே தெரியும்.வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பார் என்று நினைத்தேன். ஆனால் செய்திகளில் வேறு போட்டோக்கள் தான் வந்தன. இவரா நாட்டு மக்களுக்கு நன்மை செய்யப்போகிறார். நடிகர் ரேஸர் ஒருவர் அரசியலுக்கு வருவார் என தெரிந்தவுடன், தனக்கும் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரை பார்க்க சென்றுவிட்டார் முதல்வர். அவர் மக்களின் பிரச்னைகளை தீர்க்கவோ, முதலீடுகளை ஈர்க்கவோ வெளிநாடு போகவில்லை.மதுராந்தகம் தேர்தல் பிரசாரத்தின் போது 5 நிமிடங்கள் பேசினால் கொத்து பரோட்டா போட்டு விடுவோம் என்று பேசினார். ஆனால் 2 நாட்களாக அவரை ஓட, ஓட விரட்டினோமா, இல்லையா? முதல்முறை பிரசாரம் செய்தார். பின்னர் 2வது முறை வீதி, வீதியாக வந்தார்.அவரின் முகத்தை காட்டினாலே போதும் என்று அமைச்சர்கள் கூறினர். அவர் முகத்தை மட்டும் காட்டவில்லை, ஆடு மேய்த்தார், டிராக்டர் ஓட்டினார். முருங்கைக்காய் பறித்தார், டீ குடித்தார்.டிபன் பாக்ஸில் பணம் வைத்து கொடுத்து தான் வெற்றி பெற்றனர் என்று அவர்களின் கூட்டணிக் கட்சிகளே கூறுகின்றன. மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டுகளை பெறாத கட்சி தவெக.இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

manian
நவ 01, 2026 14:01

Desperation leads to endless blame game his party is fast melting pretends all is well has not learnt any lesson


V Venkatachalam, Chennai- 87
நவ 01, 2026 12:54

எடப்பாடியாரே. நீங்க அடுத்த வீட்டை அப்பறம் பாக்கலாம். உங்க வீட்டை முதல்ல பாருங்க.


செந்தூரான்
நவ 01, 2026 09:29

இன்னும் நன்கு கதறுங்கள் ? கதறுங்கள், கதறுங்கள். இதுதான் இன்றைய அ.தி.மு.கவிற்கு வேணும்.


Appan
நவ 01, 2026 07:07

தவழ்தம்பாடிக்கு வாய்க்கொழுப்பு அதிகம் ஆகிவிட்டது. எம்ஜியார் உருவாக்கிய கட்சியை அழித்து பேசுறதை பாருங்கள். எம்ஜியார் பற்றுள்ள தொண்டர்கள் கட்சி இருக்க இவரை நீக்கணும். விழிப்புணர்வு பெறுங்கள்


சாமி
நவ 01, 2026 09:26

வாய்க் கொழுப்பு


kadaparai
நவ 01, 2026 09:53

Aiadmk cadres know the power of their leader. 99.9 percent of Aiadmk cadres are with EPS. Match box party need not worry about aiadmk


Mani . V
நவ 01, 2026 04:24

தவழ்ந்தம்பாடி பழனிசாமி இப்பொழுது கிளி ஜோசியம் பார்க்க ஆரம்பித்து விட்டாரா?


Vasan
நவ 01, 2026 03:00

நீங்களோ பல்லி போல் ஊர்ந்து, தவழ்ந்து சென்றல்லவோ முதல்வர் ஆனீர்கள். உங்களுக்கு விஜய் பற்றி பேச அருகதை இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறீர்களா?


விக்னேஷ் குமார்
நவ 01, 2026 00:15

அவர் ஒன்னும் தங்களை போன்று முகத்தை மூடி கொண்டு டெல்லி செல்ல வில்லையே. மக்களிடம் தான் சென்றார். அப்பறம் பாஜக விடம் கட்சியை அடகு வைக்க வில்லையே


கோட்டையன்
அக் 31, 2026 23:33

இப்பவெல்லாம் தற்குறிகளை பதட்டம் அடைய செய்ய எடப்பாடி ஏறி அடிக்க ஆரம்பிச்சுட்டார்.


Natarajan
அக் 31, 2026 22:28

இந்த நபரைக் காப்பாற்ற எம். ஜி. ஆர் உயிருடன் வரமாட்டார்.


Raja k
அக் 31, 2026 22:20

அஜீத் கிடைப்பாரா, தனுஷ் கிடைப்பாரா என எடப்பாடிக்கு ஏக்கம், யாராவது கிடைக்கமாட்டார்களா,, அவர்களில் தோளில் ஏறி அமர்ந்துகொள்ளலாமா என எடப்பாடி நூல்விட்டு காத்துக்கொண்டு இருக்கிறார்... அதிமுகவின் இந்த நிலைக்கு முதல் காரணமே எடப்பாடி என்னும் துரோக உருவம் தான்... தன்னலமும், தலைக்கன அங்கங்காரமும், தான் தான் என்ற அகம்பாவமும் கொண்ட துரோகத்தின் மறு உருவம் எடப்பாடி... பெரிய இவரு மாறி வீர வசனம் பேசுகிறார், டெல்லியின் கைபாவைதானே, அமித்ஷாவின் அடிமைதானே...


ரவீந்திரன்
அக் 31, 2026 23:10

பிஜேபி காரணமல்ல. எடப்பாடியின் அகங்காரமே காரணம். அவரை ஒரு கட்சியின் தலைவராக தமிழக மக்கள் ஏற்கவில்லை என்பதே உண்மை. எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற ஆளுமை திறன் அவருக்கு கிடையாது. பிஜேபி 122 சீட் அதிமுக 122 சீட் ஷேர் செய்து அண்ணாமலை அவர்கள் தலைமையில் தேர்தலை சந்தித்து இருந்தால் அட்லீஸ்ட் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்கலாம்


kadaparai
நவ 01, 2026 09:55

அண்ணாமலை supporters voted for vijay party. That is indiscipline.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை