மேலும் செய்திகள்
இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
2 hour(s) ago | 26
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
8 hour(s) ago | 11
ரேவதி பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'டாஸ்மாக்' கடைகளில் மதுபானங்களின் விலை அதிகரித்துள்ளது. மழை இல்லை, விளைச்சல் இல்லை அல்லது பெருமழை பெய்து ஒரே வெள்ளம், அறுவடை நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள், அதனால் தானியங்கள், காய்கறிகள் விலையேற்றம் என்றால் கூட ஒப்புக் கொள்ளலாம்.ஆனால், டாஸ்மாக் சரக்கு ஏன் விலை உயர்த்தப்படுகிறது? விலையேற்றத்திற்கு சரியான காரணம் சொல்லப்பட வில்லையே...'மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் கொடுப்பதால், தமிழக அரசின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளது' என்று சிலர் சொல்கின்றனர். இந்த விலை உயர்வால் அரசுக்கு, 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.குடித்து குடித்து போதை மனிதர்களாகி போன மது பிரியர்கள், இந்த விலை உயர்வை எதிர்ப்பரா? வேறு வழியின்றி, கூலி வேலை செய்து, டாஸ்மாக்கில் கொடுத்தது போக, வீட்டிற்கு தரும் சொற்ப காசும் இனிமேல் வராமல் போகும்.குடிக்க கையில் காசு இல்லாவிட்டால் வேறு விதத்தில், தங்கள் வீடுகளிலேயே மனைவிக்கு தெரிந்தோ தெரியாமலோ, சாமான்களை அடகு வைத்தோ, விற்றோ அன்றைக்கு குடிக்கத் தேவையான பணத்தை தயார் செய்வர்.அதுவும் இல்லாத சமயத்தில், வீட்டில் மனைவி, குழந்தைகளை திட்டுவது, அடிப்பது என சண்டை, சச்சரவுகள் தான் அதிகமாகும்.மற்ற பொருட்களின் விலை உயர்ந்தால், மக்கள் தெருவிற்கு வந்து போராடுவர். மதுபானங்கள் விலை உயர்வை பற்றி, கடை வாசலில் குடித்து விட்டு ஆதங்கப்பட்டு, கூச்சலிடும், 'குடி'மகன்களை அரசு ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆகவே தான், ஆண்டுதோறும் மதுபானங்களின் விலையை ஏற்றிக் கொண்டே போகின்றனர்.
2 hour(s) ago | 26
8 hour(s) ago | 11