உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மார்ச் 19) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

நேற்றைய போக்சோ

ஆசிரியர் சிக்கினார் கிருஷ்ணகிரி அருகே, தனியார் மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி யில் பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவிக்கு அஞ் சூர் - ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப் பட்டிருந்தது. நேற்று முன்தினம் தேர்வெழுத சென்ற மாணவியிடம், தேர்வு மைய மேற்பார்வையாளராக இருந்த வேப்பன ஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் ரமேஷ், 41, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், பர்கூர் அனைத்து மகளிர் போலீ சில் அளித்த புகாரின் படி, ஆசிரியரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

சலுான்காரருக்கு 'கம்பி'

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த தென்மாம்பாக்கத்தை சேர்ந்தவர் குமார், 44 சலூன் கடை உரிமையாளர். திரும ணமாகாத அவர், 10ம் வகுப்பு படிக்கும் மாண வியிடம், தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். தகவலறிந்த மாணவியின் பெற்றோர் புகாரின்படி நெமிலி போலீசார், குமாரை, போக்சோவில் கைது செய்தனர்.

தந்தை கைது

தஞ்சாவூர் மாவட்டம், ஒத்தநாடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 47 வயது கூலி தொழிலாளி, மனைவியை பிரிந்து 13 வயது மகளுடன் தனியாக வசித்தார். இந்நி லையில், இரவு நேரங்களில் கூலி தொழிலாளி தன் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, அந்த சிறுமி பள்ளியில் மயக்கமடைந்தார். ஆசிரியர் அவசிடம் விசாரித்த போது, தன் தந்தை பாலி யல் தொல்லை அளித்ததாக கூறி, சிறுமி கதறி அழுதார். புகாரின்படி, ஓரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில், சிறு மியின் தந்தையை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
மார் 20, 2025 13:11

போக்சோநாடு ன்னு பெயர் மாற்றலாம்?


pandit
மார் 20, 2025 11:42

பெண்களுக்கு திராவிஷ மாடல் ஆட்சியில் நடக்கும் கொடுமை பற்றி பேசு.


raghavan
மார் 20, 2025 11:09

நேற்றய வெட்டு குத்து க்கும் ஒரு கட்டம் போடுங்க.


Svs Yaadum oore
மார் 20, 2025 08:49

மாணவியிடம், வேப்பன ஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர், 41, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாராம்.. இந்த கேவல விடியல் ஆட்சியில் தினம் தினம் இந்த ஆசிரியனுங்களால் பள்ளி மாணவிகளுக்கு தொல்லை.. பள்ளி கல்வி துறை கலாச்சார விழா என்ற பெயரில் பள்ளி மாணவிகளை குத்தாட்டம் ....ஹாப்பி ஸ்ட்ரீட் என்று நடு ரோட்டில் ஆட்டம் .....படு கேவலமான ஆட்சி நடக்குது ....


பாமரன்
மார் 20, 2025 08:47

சமீப காலம் வரை தினமும் போட்டுக்கொண்டு இருந்த ஒரேயொரு தலைப்பு செய்தி பெட்ரோல் டீசல் விலை பற்றியது. இப்போ வர்றதே இல்லை... கிட்டத்தட்ட இருபது சதவீதம் வரை கச்சா எண்ணெய் விலை சரிவு கண்டுள்ளது... ஆனால் மக்களுக்கு விற்கப்படும் பெட்ரோல் டீசல் விலை அதேதான்... கேட்டால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது... அரசுக்கு சம்பந்தமில்லைன்னு அரைகுறை பகோடாஸ் சொல்லும். ஆனால் எதுக்கு ஒரு அமிச்சர் இருக்கார்ன்னு கேட்டால் மியாவ் மியாவ் தான். ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை வைத்து தன் பங்க்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற ஆயில் மார்கெட்டிங் நிறுவனங்களுக்கும் சப்ளை செய்யுது... அவர்கள் பாவம் ஏழைகள் பொழச்சிட்டு போகட்டும் அப்டின்னு விட்ரலாமா?? போக்ஸோ சட்டத்தின் கீழ் வரும் உண்மை குற்றவாளிகள் கழுவேற்றப்பட வேண்டியவர்கள் தான். சந்தேகமில்லை. அதை காழ்ப்புணர்ச்சி உடன் ஏதோ தமிழ் நாட்டில் மட்டும் நடப்பதாக காட்டுவதும் கூட வாங்கிய கூலிக்கு வேலைன்னு விட்றலாம். ஆனால் எல்லா தரப்பினரையும் பாதிக்கும் இந்த எரிபொருள் விலை கொள்ளை பற்றி கூட போடலாமே...


saiprakash
மார் 20, 2025 11:31

என்னத்த சொல்லிடப்போறாங்க ,


Sampath Kumar
மார் 20, 2025 08:37

போகோசாவில் இந்திய முழுவதும் சிக்கியவர்கள் மாநிலம் வாரியா உ.பி 39, பீகார் 35, டெல்லி 28, சட்டிஸ்கர் 20, ராஜஸ்தான் 23, மகாராஷ்டிரா 28 , கொல்லக்கட்ட 31, மத்யப்ரதேஷ் 16, மும்பை 15, ஆக தமிழ் நாடு கம்மி டான் போல


Raman
மார் 20, 2025 09:14

Continue with reading murasoli only


முக்கிய வீடியோ