உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஏப்ரல் 01) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போக்சோ

சிறுமி குளிப்பதை ரசித்தவர் கைது ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், குமாரவலசை சேர்ந்தவர் பொன்னுசாமி, 30; கட்டட தொழிலாளி; திருமணமானவர். இவர், சத்தியமங்கலத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி குளிப்பதை எட்டி பார்த்து ரசித்துள்ளார்.இதை, தன் பெற்றோரிடம் சிறுமி கூற, போலீசில் புகார் செய்தனர். சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், பொன்னுசாமியை போக்சோ வழக்கில் கைது செய்தனர். 16 வயது சிறுமிக்கு கொடுமைராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், வகுப்பில் அழுது கொண்டிருந்தார். ஆசிரியர் விசாரித்த போது, தனக்கு பாலியல் சீண்டல்கள் இருப்பதாக சிறுமி தெரிவித்தார். ஆசிரியர் சைல்டு லைனில் புகார் செய்தார். சைல்டு லைன் கண்காணிப்பாளர் கிருஷ்ணவேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர்.சிறுமி தாயுடன் வசிப்பதும், தந்தை துபாயில் வேலை செய்வதும் தெரியவந்தது. கோவை தனியார் கல்லுாரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படிக்கும் வாலாந்தரவையைச் சேர்ந்த நவீன், 21, என்பவருடன் சிறுமி தாய்க்கு தொடர்பு இருந்துள்ளது.தாய் ஒத்துழைப்புடன் நவீன் சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். சிறுமி வீடு அருகிலுள்ள ஆசிரியையிடம் டியூஷன் படிக்க சென்ற போது ஆசிரியை மகன் பரத், 19, என்பவரும் சிறுமியை சீண்டியது தெரியவந்தது.சிறுமி தாய், நவீன், பரத் மீது போக்சோ வழக்கு பதிந்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.வனத்தில் பதுங்கிய தாத்தாகோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை சேர்ந்த, 13 வயது சிறுமியை, 55 வயது தாத்தா முறை உறவினரான ஒருவர், வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது, அவரை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுதொடர்பாக, மார்ச் 27ல், மேட்டுப்பாளையம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.போலீசார் வருவதை அறிந்த தாத்தா, சிறுமுகை வனப்பகுதியில் பதுங்கினார். அவரை போலீசார் மற்றும் வனத்துறையினர், ஏழு நாட்களாக தேடி வருகின்றனர். இன்னும் கிடைக்கவில்லை. போலீசார் கூறுகையில், 'வனப்பகுதியில் ஒரு குழுவும், பிற பகுதிகளில் மற்றொரு குழுவும் தேடி வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Keshavan.J
ஏப் 03, 2025 10:31

அப்படியே தினமும் ஆணவ கொலை பற்றிய தனி செய்திகள் போடவும்.


Karthik
ஏப் 02, 2025 10:12

POCSO வழக்கிற்கு வானிலை அறிக்கை மாதிரி டெய்லி அப்டேட் சூப்பர் அதையே போல் செயின் பறிப்பு, கொள்ளை, கொலை, ஆர்பாட்டம் என்று தனி தனி யாக போடலாம்


DARMHAR/ D.M.Reddy
ஏப் 02, 2025 09:45

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் கிழவனாக இருந்தாலும் குமரனாக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் போலீசார் கை விலங்குகளுடன் கைது செய்து உடைகளை கழற்றி கோவணம் மட்டும் அணிவித்து முகத்தில் செம்புள்ளி கரும்புள்ளி இட்டு பழைய செருப்பு மாலைகள் அணிவித்து கழுதை மேல் ஏற்றி ஊர் மக்கள் எல்லாம் பார்த்து கை தட்டி சபாஷ் சபாஷ் என்று நகைக்கும்படிஊர் வலமாக வரச்செய்தால் இப்படிப்பட்ட வன்முறை முறை இளைஞர்கள் திருந்த வழி உண்டு


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 02, 2025 08:54

கோரோணா கணக்கையே விஞ்சி விடும் போக்சோ கணக்கு. தமிழகம் இதிலும் முதன்மை மாநிலம் என்று அரசு மார் தட்டி கொள்ளுமா. போலீஸ் மீது பயம் இருக்க வேண்டும். அதுபோல போலீசாரும் நடந்து கொள்ள வேண்டும். இங்கே இரண்டும் இல்லை. நமக்கு நாமே திட்டம் போல் நம்மை நாமே தான் காப்பாற்றி கொள்ள வேண்டும். இந்த இலட்சிணத்தில் தெலுங்கன் தமிழன் ஜாதி மதம் வேறு.


Nallavan
ஏப் 02, 2025 08:45

ஆண்களிடம் கற்பு இல்லை, பெண்களிடம் திணிக்கப்படுகிறது, பெண்ணிடம் கற்பு பார்க்கும் மனிதர்களே, நீங்கள் தானாக திருந்தும் வரை எல்லா ஆட்சியிலும் போச்சோ இருந்துகொண்டே இருக்கும், ஒழிக்க முடியாது


Padmasridharan
ஏப் 02, 2025 07:59

இந்த மாதிரி உள்ளவர்களை military க்கு அனுப்பிவிடலாம்.


N.Purushothaman
ஏப் 02, 2025 07:51

போக்ஸோவுக்கு தனி பகுதி ஒதுக்கி தினமும் செய்தி போடும் அளவிற்கு தான் தமிழக சட்டம் ஒழுங்கு இருக்கு ...சமுதாயத்தில் ஒழுக்கமில்லாமல் போனால் இப்படித்தான் இருக்கும் ....எங்கு பார்த்தாலும் ஒழுக்க சீர்க்கேடுகள் ...


Esan
ஏப் 02, 2025 07:48

தினம் தினம் பாலியல் வன்முறை நடப்பது ஏதோ மளிகைக்கடை வியாபாரம் போல் ஆகிவிட்டது. என்ன கொடுமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை