உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஏப்ரல் 07) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போக்சோ

15 வயது சிறுமிக்கு 'தொல்லை'ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்தவர் பொன்ராஜ், 55. இவர், கடந்த ஆண்டு மார்ச்சில் ராணிப்பேட்டை அருகே கிராமத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை, கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்தார்.சிறுமியும், அதே பகுதியை சேர்ந்த, சாரதி, 20, என்பவரும் காதலித்து வந்துள்ளனர். அவரும், சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மகளிர் போலீசார் பொன்ராஜ், சாரதியை போக்சோவில் கைது செய்தனர்.'சில்மிஷ' முதியவர் சிக்கினார்தஞ்சாவூர் அருகே கரந்தையை சேர்ந்த கணேசன், 65, தெருவில் விளையாடிய, 10 வயது சிறுமியை, தனியாக அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்ததால், பெற்றோர் விசாரித்தனர். சிறுமி தெரிவித்த தகவலையடுத்து, தஞ்சாவூர் மகளிர் போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர். கணேசனிடம் விசாரணை நடத்தியதில், சிறுமியிடம் அவர் அத்துமீறியது உறுதியானது. போக்சோ சட்டத்தின் கீழ், நேற்று கணேசனை போலீசார் கைது செய்தனர்.மதபோதகருக்கு வலைவீச்சுகோவை, கிராஸ்கட் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகர் ஜான் ஜெபராஜ், 37. கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசிக்கிறார். கடந்த, 11 மாதங்களுக்கு முன், இவர் தன் வீட்டில் விருந்து நடத்தினார். அதில் பங்கேற்ற, 14, 17 வயது சிறுமியருக்கு, ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இது குறித்து, யாரிடமும் கூற வேண்டாம் எனவும், சிறுமியரிடம் தெரிவித்துள்ளார். சமீபத்தில், 14 வயது சிறுமி அளித்த தகவலில், சைல்டு லைன் அமைப்பினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, ஜான் ஜெபராஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Marai Nayagan
ஏப் 08, 2025 12:13

டாஸ்மாக் மாடல்...திராவிட அரசுகளால் தமிழ் கலாச்சாரம் பண்பாடு அழிந்து மிச நரி மற்றும் பாகிஸ்தான் கூட்டம் இங்கிலாந்து வில் செய்த அதர்மத்தை இங்கு செய்வது தடுக்க பட வேண்டும். யோகி போன்று ஒருவர் வேண்டும்.


Ramesh Sargam
ஏப் 08, 2025 11:28

இந்தியாவிலேயே இந்த போக்ஸோ சட்டத்தின் மூலம் அதிகம் கைதாகுபவர்கள் தமிழகம் முதலிடம். நன்றி தமிழக முதல்வருக்கு.


Barakat Ali
ஏப் 08, 2025 10:42

முன்னேறிய ஒரே மாநிலம் ..... எதில்????


Thetamilan
ஏப் 08, 2025 09:06

நாடு முழுவதும் அணைத்து குற்றங்களும் அதிகரித்துவிட்டன. அனைத்துக்கும் காரணம் பங்குச்சந்தை மூலம் கள்ள பணம் கருப்பு பணம் நாடு முழுவதும் தாராளமாக புழங்குவதுதான்


Ramesh Kumar
ஏப் 08, 2025 08:15

Fantastic நியூஸ்


Nallavan
ஏப் 08, 2025 08:11

தமிழக மாணவர்களிடம் அதிக விழுப்புணர்வு கல்வி இல்லாததும், பயமில்லா தண்டனையும், இத்தகைய செயலை அதிகபடுத்துகிறது, பள்ளிகள், பெற்றோர்கள், சமுதாயங்களுக்கிடையே விழுப்புணர்வும் கடுமையான தண்டனையும், வருங்காலத்தில் இத்தகையா செயலை தடுக்கும்


Suresh
ஏப் 08, 2025 07:34

very good on making awareness kindly continue on daily basis


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை