உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஏப்ரல் 26) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போக்சோ

தொழிலதிபர் மீது பாய்ந்த வழக்குதஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அருள்சூசை, 50; அருள்மேக்ஸ் குரூப்ஸ் நிர்வாக இயக்குநர். தொழிலதிபரான இவர், துபாய் மற்றும் நம் நாட்டில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். தாய் இறந்து, தந்தை குடிக்கு அடிமையான நிலையில், அத்தை பராமரிப்பில் இருந்த 17 வயது சிறுமியிடம், ஆசைவார்த்தைகளை கூறி பழகிய அருள்சூசை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது.இதுதொடர்பாக பள்ளியில் விபரம் அறிந்து, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் வாயிலாக புகார் கிடைத்தும், பட்டுக்கோட்டை மகளிர் போலீசார் அப்போது வழக்கு பதிவு செய்யவில்லை. அருள்சூசை, சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டியதாக கூறப்படுகிறது.இந்த புகார் தஞ்சாவூர் டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., கவனத்திற்கு சென்றதையடுத்து, பட்டுக்கோட்டை மகளிர் போலீசார், நேற்று முன்தினம் விசாரித்தனர். அருள்சூசை மீது போக்சோ உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்கு பதிந்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர். ஏற்கனவே, அருள்சூசை பாலியல் தொல்லை அளித்ததாக, பெண் கொடுத்த புகார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

14 வயது சிறுமி கர்ப்பம்

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கவியரசன், 24; ஐ.டி.ஐ., முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி, கவியரசன் பழகி வந்துள்ளார்.திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி, தற்போது நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். சிறுமியின் பெற்றோர், தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ், கவியரசனை நேற்று கைது செய்தனர்.உணவு டெலிவரி ஊழியருக்கு கம்பி மதுரை, ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் ஆன்டனி டேவிட்ராஜ், 28; பிரபல உணவு டெலிவரி நிறுவன ஊழியர். இவர், 10 நாட்களுக்கு முன் ஆண்டாள்புரத்தில் ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய சென்றார். அங்கு, 10 வயது சிறுமியிடம் உணவு பார்சல் கொடுத்த போது சில்மிஷத்தில் ஈடுபட்டு தப்பினார். வீட்டில் உள்ளவர்களிடம் சிறுமி தெரிவித்தார்.கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்க திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம், மீண்டும் அதே பகுதிக்கு உணவு கொடுக்க வந்த இளைஞர் குறித்து சிறுமி தகவல் தெரிவித்தார். அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தெற்கு மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

nv
ஏப் 27, 2025 09:13

திராவிட மாடலுக்கு மெடல்.. முதல்வர் முகத்தில் இன்னொரு கரி பூச்சு


Velan Iyengaar
ஏப் 27, 2025 08:53

இது போல நாட்டின் எல்லா மாநிலங்களிலும் போக்ஸோவில் கைது செய்யப் படுபவர்கள் குறித்த செய்திக்கு எப்போது தனி பத்தி ஒதுக்குவீர்கள்? குறைந்தபட்சம் உலகமாக பணக்கார தேர்தல்பத்திர மற்றும் தேர்தல் ட்ரஸ்ட்மெகா ஊழல் bj கட்சி ஆளும் மாநிலங்கள் குறித்து வெளியிட்டு நடுநிலை என்ற பெயரை காப்பற்றிக் கொள்ளுங்கள் இதைவிட கேவலமான ஜர்னலிசம் உலகத்திலேயே பார்க்கமுடியாது ....அதாவது அடுத்தவர்கள் கஷ்டத்தில் கூட ராசியில் செய்வது எப்படி என்று உங்களை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும் ... என்ன செய்வது ??? புத்தி பலம் கூடுதல் அல்லவா ????


V Venkatachalam
ஏப் 27, 2025 13:16

ஏன் இவ்வளவு கோவம் வருது?


S.kausalya
ஏப் 27, 2025 08:35

திமுக ஆட்சியில் தியாகிகள் பட்டம் கொடுக்க வேண்டியவர்கள் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது


Sampath Kumar
ஏப் 27, 2025 08:11

உப்புக்கு சப்பு இல்லாத செய்தி


Ramamoorthy M
ஏப் 27, 2025 09:41

தங்கள் வீட்டு பெண்மணிகளுக்கு இவ்வாறு நேர்ந்தால் உப்பு சப்பு இல்லாத செய்தியாக இருக்கு என்று சொல்வீர்களா? ஓ புரிகிறது. தவறு செய்தவர்கள் சிறுபான்மையினர் அல்லவா?


சமீபத்திய செய்தி