உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மே 30) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போக்சோ

15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லைநாமக்கல் மாவட்டம், மோகனுாரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 42; இவர், ப.வேலுார் அருகே பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்பள்ளியில் படித்த, 15 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியின் பெற்றோர் புகாரின் படி, மணிகண்டனை போக்சோ வழக்கில் ப.வேலுார் மகளிர் போலீசார், கைது செய்தனர். ஆசிரியர் போக்சாவில் கைது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லுார் நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி, 'பள்ளி திறக்கப்பட்டால் செல்ல மாட்டேன்' என, அடம் பிடித்துள்ளார். விசாரித்த போது, பள்ளி இடைநிலை ஆசிரியர் கணேசன், 42, சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறினார். சிறுமியின் தாய், போலீசில் அளித்த புகாரில், ஆடுதுறை மகளிர் போலீசார், கணேசனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கட்டட தொழிலாளி கைது கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதி, தங்கள், 15 வயது மகளை காணவில்லை, என, கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த, மாணவியை தேடி வந்தனர். விசாரணையில், மதுரை மாவட்டம் பேரையூர் அடுத்த அணைக்காரப் பட்டியை சேர்ந்த கோவிந்த மூர்த்தி,18 என்பவர் கடத்தி சென்றது தெரிந்தது.கடந்த, 10 நாட்களுக்கு முன், கட்டட வேலைக்காக கருமத்தம்பட்டி வந்த, கோவிந்த மூர்த்தி, பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார், இருவரையும் தேடி கண்டுபிடித்தனர். கோவிந்த மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nada Rajan
மே 31, 2025 09:11

போக்சோ வழக்குகளை நினைக்கும் போது மனது கலங்குகிறது... அதிகரித்துக் கொண்டே செல்கிறது குற்றச்ச சம்பவங்களுக்கு முடிவு அளிக்க வேண்டும்


புதிய வீடியோ