வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வாங்குகிற சம்பளம் சாப்பாட்டுக்கும் பிள்ளைகளின் படிப்புக்கும் பெற்றோர்களின் மருத்துவ செலவுக்கும் பத்தவில்லை. பின்னர் என்ன பண்றது? அரசு தரமான கல்வி, மருத்டதுவம் போன்ற அத்தியாவசியமானவற்றை இலவசமாக கொடுத்தால் யார் லஞ்சம் வாங்குவார்கள்? கல்வி மருத்துவம் அதிக விலையில் விற்பனை. எனவேதான் லஞ்சம் வாங்குவதற்கு தள்ளப்படுகிறார்கள். லஞ்சம் வாங்கி அதில் பைக், கார், நகை, இடம், வீடு வாங்கும்போது கிடைக்கும் சந்தோசமே தனி. மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்குவதிலும் தனி திறமை வேண்டும். இதற்கு சைக்காலஜி படித்திருந்தால் லஞ்சம் தந்து மாட்டிவிடுகிறவனின் மனதை எளிதில் புரிந்துகொண்டு அவனிடம் தான் ஒரு நேர்மையான அதிகாரிபோல் காட்டிக்கொண்டு லஞ்சம் தர வருகிறவனையே மாட்டிவிட்டு கோர்ட்டுக்கு இழுத்துடலாம். எல்லா அரசு அலுவலர்களுக்கும் மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்குவது எப்படி, மாட்டிவிடவருகிறவனிடம் எப்படி நடந்துகொண்டு அவனையே மாட்டிவிடுவது எப்படி, ஒருவேளை மாட்டிக்கொண்டாலும் எப்படி அதிலிருந்து தப்பிப்பது, பின் மாட்டிவிட்டவனை எப்படி போட்டுத்தள்ளுவது போன்ற பாடம்களை நம் அரசியல்வாதிகளைக்கொண்டு கற்றுக்கொடுக்கவேண்டும்.
யோக்கிய சிகாமணிகள் ஆளும் நாட்டில் இப்படித்தான் இருக்கும்
இலஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்தால் ஒரு அரசு அலுவலகத்திலும் ஒரு ஆள் கூட வேலைக்கு இருக்க மாட்டார்கள்.நாட்டின் நிலமை அப்படி இருக்கு.
சிக்குனவன் ஆறுன்பேர்னா சிக்காதவன் நூறு பேர். திருடனை கொஞ்ச நாளைக்கி சஸ்பெண்ட் பண்ணிட்டு வேலைக்கு சேத்துக்கிட்டா திரும்ப திருடத்தானே செய்வான்?
ஏன் இவர்களை வேலையை விட்டு நீக்கி ஜெயிலில் தள்ளாமல், வெறும் சஸ்பெண்ட் மட்டும், அதுவும் எத்தனை நாளைக்கு என்று குறிப்பிடாமல் செய்கிறார்கள்.
ஒரு நடபடியும் எடுக்காமல் அதே துறையில் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள்.
இதுவும் ஒரு போக்சோ சட்டம் தான்
திமிங்கலத்தெல்லாம் விட்டுட்டு மீனை புடிச்சு கணக்கு காட்றாங்க.
இன்றைய போகசோவில் கைது, லஞ்சம் வாங்கியவர்கள் கைது இது போன்ற செய்திகள் மற்ற மாநிலத்தில் நடப்பதும் போடலாமே மேலும் ஒருவேளை ஆட்சி மாறி உங்களுக்கு சாதகமான ஆட்சி அமைந்தால் இப்படி தனி செய்தி தொகுப்பாக வரும் என்று எண்ணுகிறேன்
ரேஷன் கடையில சில்லறை திருப்பித் தராம வெச்சிக்கிறாங்க.. பொங்கலுக்கு நல்ல தடிமனான கரும்பு உள்ள வெச்சி தெரிஞ்சவங்களுக்கு கொடுத்து மெலிசானத வெளியில வெச்சி மத்தவங்களுக்கு கொடுத்தாங்க. புடவைங்க நிறைய கடைல தரல. பேருந்தில் ஒரு இலவச டிக்கெட்டுக்கு பதில் 2-3 கொடுத்துடறாங்க. இவை எல்லாமே லஞ்சத்தின் இன்னொரு பக்கம் சாமி.