உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்கட்சி தேர்தலில் நிற்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்

உள்கட்சி தேர்தலில் நிற்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''உள்கட்சி தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகள் நேர்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான், கட்சியின் எதிர்காலமும், நிர்வாகிகளின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். பிரிட்டன் சென்றிருந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மூன்று மாதங்களுக்கு பின், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்திற்கு நேற்று காலை வந்தார். அவருக்கு, கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

தற்போது இல்லை

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், பிற்பகல் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், கட்சியின் தேசிய பொதுச் செயலர் தருண் சுக், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் வரும், 5, 6, 9 ஆகிய தேதிகளில் மண்டல அளவிலும், 15ம் தேதி முதல் மாவட்ட அளவிலும் கட்சியின் அமைப்புக்கு தேர்தல் நடத்துவது என, முடிவு எடுக்கப்பட்டது. பின், தருண் சுக் பேசும்போது, ''பல ஆண்டுகளாக தமிழக அரசியல் நிலவரத்தை பார்த்து வருகிறேன்; முன்பு இருந்த பா.ஜ., தற்போது இல்லை. மற்ற கட்சிகளைக் காட்டிலும் தமிழகத்தில் பா.ஜ., வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், ஓட்டு சதவீதமும் அதிகரித்துஉள்ளது.''இது, கட்சிக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைத்த ஒவ்வொருவரின் வியர்வையாலும் விளைந்திருக்கிறது. இதற்காக பணியாற்றிய ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாராட்ட கடமைப் பட்டிருக்கிறேன். ''கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் இதே வேகத்தில் பணியாற்றினால், தமிழகத்தில் பா.ஜ., ஆட்சியை நிச்சயம் பிடிக்கும். வரும் 2026 சட்டசபை தேர்தல் நமக்கானதாக இருக்கும் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம்.''அதை எக்காரணம் கொண்டும் தவறவிட்டுவிடக் கூடாது. தலைமை என்ன உத்தரவிடுகிறதோ, அதைப் பின்பற்றி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்,'' என்றார்.

பின், அண்ணாமலை பேசியதாவது:

தமிழகத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை, கடந்த ஆண்டுகளை விட தற்போது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது; கட்சி நிர்வாகிகள் அனைவரும் மக்களுடன் இணைந்து ஒன்றாக பணிபுரிய வேண்டும். மத்திய அரசின் ஏராளமான திட்டங்களும், பலன் களும் இன்றளவிலும் மக்களிடம் நேரடியாக சென்று சேராமல் உள்ளன.அத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது, ஒவ்வொருவரின் கடமை. பா.ஜ., போன்ற தேசிய கட்சியில் பொறுப்பு கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. தற்போது உள்கட்சி தேர்தல் நடக்கிறது.

மேலிட முடிவு

அதை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொண்டு, நேர்மையான வழியில் பதவியை அடைய முயற்சிக்க வேண்டும். எனவே, உள்கட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேர்மையுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான தற்போதைய கூட்டணி தொடரும். கூட்டணியில் உள்ள கட்சிகளுடன், நிர்வாகிகள் அரவணைத்து செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து உடையவர்கள் வர விரும்பினால், கூட்டணிக்கு வருவர்.யார் யார் வருவர் என்பது தற்போது தெரியாது. கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து, மேலிடம் முடிவு எடுக்கும். அதை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Oviya Vijay
டிச 03, 2024 16:21

நடிகர் வடிவேலு டயலாக் தான் ஞாபகம் வருகிறது... "அது எங்க இங்க இருக்கு... நெக்ஸ்ட்டு"


அப்பாவி
டிச 03, 2024 10:18

நேர்மையான அரசியல்வாதி ஒரு பயலைக்கூட பார்த்ததில்லை.


saravanan
டிச 03, 2024 10:13

தமிழகம் என்னும் தடாகத்தில் தாமரை பூக்கள் மலரும் நாட்கள் தொலைவில் இல்லை வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்று தாமரையை குறிப்பிடுகிறார் உலக பொதுமறை ஈந்த வள்ளுவர். குளத்தின் மட்டத்தை பொறுத்து தாமரையின் நீட்டம் இருக்குமாம் குளம் மட்டும் தானா மக்கள் உள்ளத்தின் உயர்விலும் இருக்கிறது தாமரை மலர்ச்சியின் நீளம் சேற்றிலும் மலரக் கூடிய செந்தாமரை சேரியிலும் மலர வேண்டும். வாழ்வின் வசந்தத்தை காணாதார் நெஞ்சில் ஏகாந்தம் வீச வேண்டும் இப்படி சொல்வதால் தமிழகத்தை வெள்ளக் காடாக மாற்றுவதல்ல பாஜக-வின் நோக்கம். பாஜக ஆட்சிக்கு வந்தால் தான் நீர் மேலாண்மை என்றால் என்னவென்று மக்களுக்கு புரியத் தொடங்கும்


பாமரன்
டிச 03, 2024 11:30

ஏயப்பா... கவித கவித... ஆனால் விடிஞ்சி ரொம்ப நேரமாச்சு...


பாமரன்
டிச 03, 2024 08:37

.....தருண் சுக் பேசும்போது, பல ஆண்டுகளாக தமிழக அரசியல் நிலவரத்தை பார்த்து வருகிறேன் முன்பு இருந்த பா.ஜ., தற்போது இல்லை.. இது மட்டுமே ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம். மேற்கொண்டு யார் என்ன பேசியிருந்தாலும் டைம் பாஸ் அப்பிடின்னு எடுத்துக்கலாம் மக்களே.... சரிதானே...???


Nallavan
டிச 03, 2024 08:35

ப ஜ க வில் நேர்மையானவர்கள் யாராவது ஒருவர் இருக்கிறார்களா?


saravan
டிச 03, 2024 10:40

பாஜக என்றாலே தேசியம் தான்... இதில் இருந்தால் இரண்டறிவு இலை தலை கூட நம் தேசத்தின் பெருமைக்கு பாடுபடும் ...நேர்மையாகத்தான் இருப்போம்


Ms Mahadevan Mahadevan
டிச 03, 2024 06:17

ஹா ஹா அரசியலில் நேர்மை என்பது 1969 பின் கிடையாது. இந்திராகாந்தி கருணாநிதி கூட்டணி அமைத்து அதை ஒழித்து விட்டனர். அண்ணாமலைக்கு அது தெரியாது. திமுக அதிமுக விட பிஜேபி மோசமான கட்சி


Kasimani Baskaran
டிச 03, 2024 06:04

நேர்மை என்பது அடிமட்டத்தில் இருந்து வரவேண்டும். திமுக விசுவாசிகள் இன்னும் ஏராளமாக கட்சியில் இருக்கிறார்கள். அவர்களை வெளியே தூக்கிப்போடுவது கட்சிக்கு நல்லது.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 03, 2024 10:03

அட நீங்க வேற, திமுகவிலிருந்துதானே கட்சிக்கே ஆள் புடிச்சோம். குஷ்பு, ராமலிங்கம், லேட்டஸ்டா திமுக பக்தை விஜயதாரணி திமுக பக்தர் எஸ்வி சேகர் இப்படி லிஸ்ட் நீளமாயப்போக்குது. தேவைப்பட்டா ஆ ராஜா, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கூட கட்சியில சேர்த்துக்க தயார்.


Mani . V
டிச 03, 2024 05:50

இஸ் இட்?


Thiagu
டிச 03, 2024 05:28

ஆமாம் முன்னாடி நோட்டா கூட போட்டி போட்டோம், இப்போ டெபாசிட் கூட போட்டி போடறோம், you tube, media, x தாண்டி மக்களோடு நின்னு வேலை செய்தால் ஒன்னு ரெண்டு தொகுதி ஜெயிக்கலாம்


சம்பர
டிச 03, 2024 03:50

வருவதே நாலு காசு பாக்க இதுல போயி


புதிய வீடியோ