உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரசை மதிக்காதவர்கள் முன்னாள் முதல்வராகி விடுவர்

காங்கிரசை மதிக்காதவர்கள் முன்னாள் முதல்வராகி விடுவர்

கடந்த தேர்தலை விட, வரும் தேர்தலில் அதிக தொகுதி களை கேட்க வேண்டும் என்பதே, அனைத்து காங்., நிர்வாகிகளின் விருப்பம். டில்லியில், காங்., உடன் கூட்டணி வைத்திருந்தால், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகி இருப்பார். காங்.,கை மதித்தவர்களை முதல்வராக்க, காங்கிரசார் 100 சதவீதம் உழைப்பர்; மதிக்காதவர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் போல, முன்னாள் முதல்வராக மாறி விடுவர். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின், தொழில் துறையில் பின்தங்கி உள்ளது. குறிப்பாக, ஐ.டி., துறையில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஆனால், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகியவை போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே, கூகுள் முதலீடு, ஆந்திராவுக்கு அவசியம். தொழில்துறையில் பெரிய முதலீடுகளை ஈர்க்க, ஆந்திர அரசின் செயல்பாடுகளுடன் தமிழகத்தை ஒப்பிடுவது சரியாக இருக்காது. - மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி